Sunday, 10 May 2026

கருவிலே திரு ...

மாலா தன் அம்மாவுடன்

த்தைக்கு ( மாலா அம்மா திருமதி ராஜம் அவர்களுக்கு ) மாலா மீது எப்போதும் ஒரு குறை - ரொம்ப சிம்பிளாக இருக்கிறாளே, நகைகளெல்லாம் போடுவதில்லை, பட்டு புடவை அணிவதில்லை, மேக்கப் கூட போடுவதில்லை என மாலா மீது ஒரு வருத்தம் அவர்களுக்கு உண்டு.

எங்களுடன் பலதடவை அத்தை ஆழியார் வந்திருக்கின்றார்கள். அங்கு அவர்கள் மாலாவிடம் " இங்கு எல்லோரும் எப்படி அழகாக ட்ரஸ் செய்து வந்திருக்கின்றார்கள். நீயோ ரொம்ப சாதாரணமாக இருக்கின்றாய். கழுத்துல ஒரு நல்ல நகையாவது போட்டு வந்திருக்கலாமே " என் குறை பட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஒரு தடவை ஆழியாரில் பேராசிரியை பிரமுக்குட்டி அம்மா ( தேசத்தியாகி செக்கிழுத்த செம்மல் ..சி. அவர்களின் பேத்தி - கூடுவாஞ்சேரியில் பெண்களுக்கென ஆன்மீக கல்வி நிலையம் நடத்தி ஆயிரக்கணக்கான பெண்களுக்கு தையல், கம்ப்யூட்டர் போன்ற பயிற்சிகளை தந்தவர் ) அத்தையிடம் வந்து மாலாவின் சேவைகளை பற்றி மிகவும் புகழ்ந்து பேசி " இப்படிப்பட்ட புண்ணியவதி இந்த மணி வயிற்றில் பிறக்க என்ன தவம் செய்தீர்களோ! " என்று சொல்லி அத்தையின் வயிற்றினைத் தொட்டு வணங்கினார்கள். அத்தை மிகவும் நெகிழ்ந்து போனார்கள்.


அன்றிலிருந்து
அத்தைக்கு மாலா மீது மிகவும்
அன்பு, கனிவு,பெருமை எல்லாம் அதிகமாயிற்று.





பிரமுக்குட்டி அம்மாவுடன் மாலா எடுத்துக்கொண்ட போட்டோக்கள் பல இருந்தாலும் இது கடைசி போட்டோ ....


No comments:

Post a Comment