ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்தான் ஆனால் எப்போது ? என்பதை காலம் தான்
தீர்மானிக்கும் ஏனெனில் ஊழ்வினை தன்னிச்சையாக செயல்பட முடியாது
ஊழ்வினைக்கு உயிர் இல்லை
தகுந்த நேரத்தில் இறைவன் ஊழ்வினைக்கு உயிர் கொடுத்து
அதனை இயக்குவார்
"ஆப்பரேஷன் வெற்றி ஆனால் நோயாளி மரணம் "என்பதே
ஊழ்வினைக்கு ஒரு சிறந்த உதாரணம்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.என்ற குறள் இதற்கு பதிலாக மற்றும் ஆறுதலாக அமையும்.
ஊழ்வினை என்பது முன்பிறவியில் செய்த பாவ வினைகள். அது முன்னோர்களாலோ தன்னாலோ ஏற்பட்டிருக்கலாம். அதிலிருந்து தன்னை எப்படிக்காத்துக்கொண்டாலும் அந்த வினையின் தாக்கம் நம்மை வந்து அடைந்தே தீரும் அதை அனுபவிப்பது விதி என்பதைத்தான் இது உணர்த்துகிறது.
இதற்கு மாற்றாக இங்கு தரப்பட்ட குறள் சொல்வது என்னவெனில் எந்தநிலையிலும் மனம் தளராமல் தனது நிலையிலிருந்து தனது கடமையை தவறாமல் ஊக்கத்துடன் செய்பவர்கள் இந்த விடாமல் பற்றும் ஊழ்வினையை வென்று தனது குறிக்கோளை அடைவர்.
No comments:
Post a Comment