Sunday, 21 October 2012

இன்று படித்தது - 13


இதுதான் என் கடைசி ஆசை!

                                    உடுமலை நாராயண கவி

புகழ் உச்சியில் இருந்தபோதும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த உடுமலை நாராயண கவியார், தம் 82ஆம் அகவையில் (23.05.1981)ல் உயிர்துறந்தார். அவர்தம் இறப்பிற்கு முன்பு எழுதி வைத்த இறுதி ஆவணத்தில், தாம் இறந்தபிறகு என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்துள்ளார்.

அந்த ஆவணத்தில், செத்த பிணத்தை வைத்துக் கொண்டு, இனிமேல் சாகும் பிணங்கள் கூத்தடித்துக் கொண்டிருப்பது அறியாமை; இந்த அறியாமையானது பணத்தின் அளவிலே விரிவடைகிறது, குறைகிறது.

என்னைப் பொறுத்தமட்டில் இந்த அறியாமை வேண்டாம். உடலைவிட்டு உயிர் பிரியுமானால் அப்போதே காலத்தை வீணாக்காமல் குழியைத் தோண்டிப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ இந்த இரண்டில் ஒன்றைச் செய்திடுங்கள்! வேறு எந்தவகையான சடங்குகளும் தேவையில்லை.

மீறிச் செய்வது அறியாமை. உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக ஒன்று செய்யவேண்டுமானால் அதை மட்டும் செய்யுங்கள்! உணவிலே எளிமை, உடையிலே எளிமை, கல்வியிலே மேன்மை இது போதுமானது. இதுதவிர வேறு எதையும் செய்யாதீர்கள்.

இந்த வீண்பெருமைகளை (டாம்பீகங்களை) எல்லாம் செய்து சீரழிந்து, மனத்துன்பங்களுக்கு ஆளாகி, என் பின்னோர்க்கு (வாரிசுகளுக்கு) இதைப் பழக்கி, அவர்களின் அறிவைக் கெடுத்துத் துன்பங்கட்கு ஆளாக்கி விட்டேன். இப்போது உணர்கிறேன். காலங்கடந்துவிட்டது. இனி ஒரு பயனும் இல்லை.

கடைசியாக ஏதோ வைத்திருக்கிறேன். அதைக்கொண்டு உங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்! இத்தனையும் கல்விக்குள்ளாக அடங்கியுள்ளது. ஆதலால் காலத்தை வீணாக்காமல் கவனத்தைக் கல்வியிலே செலுத்துங்கள்; இதுதான் என் கடைசி ஆசை!

- உடுமலை நாராயண கவி பாடல்களிலிருந்து  =

  • உண்ணாத உபவாச விரதங்கள் கொள்ளுறார
    ஒருசட்டி உப்பு மாவை உள்ளுக்குத் தள்ளுறார்
    முன்னுக்கும் பின்னுக்கும் முரணாக நடக்கிறார்
  • கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்  கண்ணாடி சிரிப்பு! - இதுகளைப்பபை நீக்கிக் கவலையைப் போக்கி மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு!
  • உலகம் வாழ வானம் மழை
    பொழிந்திட வேண்டும் - வானம்
    பொழிந்திட நாம் வனமரங்கள்
    வளர்த்திட வேண்டும்.
  • தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
    காசுமுன் செல்லாதடி - குதம்பாய்
    காசுமுன் செல்லாதடி.
  • துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
    விந்தை புரிவது சிரிப்பு! - இதைத் துணையாய்க்
  •  கொள்ளும் மக்களின் முகத்தில்
    துலங்கிடும் தனிச் செழிப்பு!
  • அறிவேதரும் பெருமை சிறுமை!
    அவரவர்பால் அமைந்த திறமை!
    உறவுடன் யாவரும் வேற்றுமை
    நீக்கிட முயல்வது கடமை!
  • ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
    காசுக்குப் பின்னாலே - குதம்பாய்
    காசுக்குப் பின்னாலே
  • ஆளையேச்சுத் தின்பா ரெல்லாம்
    வேலை செஞ்சேயாகணும் - இனி
    அதிர்ஷ்டம் யோகம் என்ற சொல்லை - அக
    ராதிவிட்டே எடுக்கணும்.
  • நெனைச்சதை எல்லாம் எழுதி வச்சது
    அந்தக் காலம்; - எதையும்
    நேரில் பார்த்தே நிச்சயிப்பது
    இந்தக் காலம்
  • 10. மழைவரு மென்றே மந்திரம் ஜெபிப்பது
    அந்தக் காலம்; - மழையைப்
    பொழிய வைக்கவே யந்திரம் வந்தது
    இந்தக் காலம்!
  • வரவு செலவு எண்ணிப் பார்க்கணும் - வீட்டு
    வாழ்வின் தேவைக்கண்டு கேக்கணும் - போலி
    மரியாதை மதிப்புக் காக
    அல் டாப்புகளை நீக்கணும்!
  • ஓடி யோடிப் பல வேலைகள் செய்பவன்
    உடம்பது திடமாகும் - செய்யாவிடில்
    உறுப்புகள் முடமாகும் - அல்லாமலும்
    உற்சாகம் குறைவாகும்!
  • பிறவியிலே குலபேதமும் ஏது?
    பெண்களைக் குறை சொல்வது பெருந் தீது!
    அறநெறி யதற்கிது அணுவுந் தகாது;
    அரி ஹரி யென் திருச்செவி கேளாது.
  • மழை கொறஞ்சா விளைவுயராது - நம்ம நாட்டில் ஜாதி
    மதமிருந்தாப் பகமை மாறாது;
    எதையும் சுத்தப் படுத்தணும்!
  • அன்பே கடவுள் என்ப தெதனாலே? - அதில்
    ஆன்ம சக்தி இன்பம் இருப்பதாலே!
    சாத்திரங்கள் பொய்யென்ப தெதனாலே?- ஏமாத்துகிற
    வார்த்தையு மிருப்பதாலே!
  • ஜாதிமதம் இல்லையென்ப தெதனாலே? - மனம்
    சமத்துவம் தானடைந்த தன்மையாலே!
    பொதுவுடைமை கேட்ப தெதனாலே? - தொழில்
    புரிந்தும் புசிப்பற்றுப் போனதாலே!
  • ஒட்டிக்கு ரெட்டியாக வட்டிக்குப் பணம் கொடுத்து
    ஊரார் முதலைக் கொள்ளையடிப்பார் - இவர் அதை
    ஊதுபத்தி சாம்பிராணி சூடம் வாங்கி எரிப்பார்
    உண்ணாமலே செலவழிப்பார்!
    பட்டம் பதவிக் கிறைப்பார் - கோயில்
    கட்டுவதற்கும் செலவழிப்பார் 

No comments:

Post a Comment