நண்பர் புரட்டாசி சனிக்கிழமையில் ஐந்து வீடுகளில் பிச்சை எடுத்து வந்து அதில் படையல் போட்டு பிறகு சாப்பிடுவார்.
மாயரத்துல என் ஸ்கூல் நண்பர்கள் சிலர் புரட்டாசி சனிதோறும் நாமம் போட்டுக்கிட்டு துளசி மாலை அணிந்து ஒரு பாத்திரத்தை எடுத்துக்கிட்டு ( அந்த பாத்திரத்திலேயும் நாமம் போட்டிருக்கும் ) வீடுவீடா போயி
" நாராயணா, கோபாலா" ன்னு சத்தம் போட்டு பிச்சை எடுப்பாங்க. ஒரு பெரியவர் தெருவுல அங்கப்பிரதட்சிணம் பண்ணிகிட்டே பிச்சை எடுப்பாரு.
சிலபேர் வீட்டுக்கு வந்து நாமக்கட்டி வாங்கிட்டு போவாங்க. அப்பெல்லாம் திருப்பதி போயிட்டு வர்றவங்க சாமி படம், லட்டு இதோட நாமகட்டியும் பிரசாதமா கொடுப்பாங்க. அத அம்மா ஸ்டாக் வச்சிருந்து கேக்கிறவங்களுக்கு கொடுப்பாங்க. வெயில் காலத்துல கண்கட்டி, வேனல்கட்டி வந்தா நாமகட்டியை குழைச்சு போடற வழக்கமும் இருந்துச்சி.
காலேஜ்ல படிக்கிறப்ப என் க்ளாஸ்மேட் ராகவனுக்கு புரட்டாசி வர்றதுக்கு ரெண்டுநாள் முன்னாடியே அவனோட அப்பா தபால்ல நாமக்கட்டி பார்சல் அனுப்பி வச்சிடுவார்! அவனும் அந்த மாசம் முழுக்க அழகா நாமம் போட்டுக்கிட்டு வருவான்.
அம்மா வீட்ல பெருசா படையல் போடுவாங்க. எனது ஃபேவரிட் ஐட்டம் அனுமாருக்கு போடுற நெய்வடை மாலை!
போனவாரம் நான் எடுத்த Cosmology வகுப்பில சனி கிரகத்தைப் பத்தி புராணத்துல சனி சூரியனுக்கு பிறந்த குழந்தை, குழந்தையைப் பார்த்தவுடனே சூரியனுக்கு குஷ்டம் வந்திடிச்சி, அதனால கோபம் வந்த சூரியன் சனியைத் தூக்கி தூர வீசினாரு..அதான் சனி கிரகம் ரொம்ப தூரத்துல சுத்திக்கிட்டிருக்கு அப்படீன்னு எழுதி வச்சிருக்காங்கன்னு சொன்னேன். சனி பொறந்தது புரட்டாசி சனிக்கிழமைன்னு சொன்னதும் நெறைய பேரு " அதெப்படி..சனிக்கிழமையே சனி பேர்ல இருக்கிற கிழமை.. சனி பொறக்குறத்துக்கு முன்னே அந்த கிழமைக்கு பேரு என்ன?" ன்னு கேட்டாங்க.
" இதான் இந்த வகுப்பின் வெற்றி.. சிந்திக்க தொடங்கிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்!" ன்னு சொன்னேன்!
( பவர்கட் காரணமாக நெட் பிரச்சனையும் இருப்பதால் நினைவுகளை தொடர முடியவில்லை )
reminding me of big படையல் in Kottachi house and my favorite கல்கண்டு சாதம் and நெய் வடை :P
ReplyDeletethe last time I had them was புரட்டாசி of 2000 :(