Friday, 19 October 2012

விட்டுப்போன விஷயம்



எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 17ல் சனியைப் பற்றி கொஞ்சம் சொல்லியிருந்தேன். நெட் சரியாக கிடைக்காததால் அந்த post ஐ அப்படியே முடிக்கும்படி ஆகிவிட்டது. அதில் சொல்ல இருந்ததை இங்கே தந்துள்ளேன்.

  Cosmology  வகுப்பில் வந்த இன்னொரு இண்டரஸ்டிங் கேள்வி -

திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலுக்கு மேலே வரும் சாட்டிலைட்டுகள் சிறிது  நேரம் செயலிழந்து விடுகின்றன என்கிறார்களே - உண்மையா?
நான் பதிலுக்கு கேட்டேன் - " செயலிழப்பு என்றால் அந்த சாட்டிலைட் அப்படியே நின்று விடுகின்றதா? அல்லது அதில் உள்ள தொலைதொடர்பு சாதனங்கள் வேலை செய்வதில்லையா? "
அன்பரால் தெளிவாக சொல்ல முடியவில்லை.
"விண்வெளியில் சுழலும் எதுவுமே தன சுழற்சி பாதையில் நிற்காமல் சுற்றிக்கொண்டே இருக்கும் " என்று சொல்லி கேள்வி கேட்ட அன்பரிடம் " நீங்கள் சமீபத்தில் திருநள்ளாறு சென்று அங்கிருந்து யாரிடமாவது செல்போனில் பேசியிருக்கிறீர்களா? " என கேட்டேன். அதற்கு இன்னொரு அன்பர் தன்னுடைய சொந்தகாரர் அங்கிருப்பதாகவும் அவரிடம் தான் அடிக்கடி செல்லில் பேசுவதாகவும் சொன்னார்.

 
சாட்டிலைட் சிக்னல் திருநள்ளாருக்கு மேலே கிடைப்பதில்லை என்றால் அந்த ஊரில் யாருமே TV  பார்க்கமுடியாது, செல்லில் பேசமுடியாது என விளக்கினேன், மேலும் இப்போது நாம் கூகிள் மேப் பயன்படுத்துகின்றோம். உலகத்தில் எந்த இடத்தையும் சாட்டிலைட் உதவியுடன் துல்லியமாகப் பார்க்க முடியும். திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலும் கூகிள் மேப்பில்  நன்றாகவே தெரிகின்றது. சாட்டிலைட் திருநள்ளாருக்கு மேலே வேலை செய்வதில்லை என்றால் கூகிள் மேப்பில் கோவில் தெரிவது எப்படி? எனவே நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் -

உண்மை இல்லை!

1 comment:

  1. அதுக்குதான் யார் என்ன சொன்னாலும் நம்பிட கூடாது :)

    ReplyDelete