15 ஆண்டுகளுக்கு முன் திருச்சி BHEL ல் நடைபெற்ற காந்த தத்துவ
கருத்தரங்கில் மகரிஷி உரை நிகழ்த்த அருகில் Dr லெட்சுமணன்
|
பேராசிரியர் லெட்சுமணன் ஆழியாரில் மேற்கொண்ட ஆய்வினைப் பற்றி சுருக்கமாக கீழே தந்துள்ளேன் –
வாழ்த்தி, வாழ்த்தி பயிர்களையும் செழிப்பாக விளைச்சலைக் கொடுக்க வைக்கமுடியும் என்பார்கள் மகரிஷி. இப்படி விளைச்சல்களை அதிகரித்தவர்கள் நிறையபேர்கள் இருந்தாலும், விஞ்ஞான முறைப்படி, சோதனை அளவுகோல்களின்படி பேராசிரியர் லெட்சுமணன் ஆழியாரில் தனது ஆய்வினை மேற்கொண்டார்.
அவர் எடுத்துக்கொண்டது வெண்டை பயிர் . விதைத்த 80 - 90 நாட்களில் விளைச்சலைக் கொடுப்பதால் வெண்டையை தேர்ந்தெடுத்தார். ஆழியாரில் இரண்டு பாத்திகளில் வெண்டை பயிரிட்டு இரண்டுக்கும் ஒரே மாதிரி உரம், நீர் விட்டு ஒரு பாத்தியில் உள்ள வெண்டை பயிர்களை மாத்திரம் தியானம் செய்து வாழ்க வளமுடன் என வாழ்த்தி வந்தார். வாழ்த்திய செடிகள் மற்ற செடிகளைவிட மூன்று மடங்கு விளைச்சல் தந்தது. எந்த சோதனையுமே பலமுறை செய்து விளைவை ஒப்பிட்டு பார்க்கவேண்டும். அதன்படியே செய்து பார்த்ததில் வாழ்த்திய பயிர்கள் நல்ல விளைச்சலைத் தருகின்றன என்பது உறுதி செய்யப்பட்டது.
ஓரறிவு தாவரங்களே வாழ்த்தினால் வளம் பெறும்போது
ஆறறிவு படைத்த மனிதனால் வாழ்த்தின் மூலம் நிச்சயம் நிறைய சாதிக்கமுடியும்!
இந்த ஆய்வின் முடிவுகள் சில மாதங்களுக்கு முன் அமெரிக்க பல்கலைக்கழக கருத்தரங்கில் முன் வைக்கப்பட்டது. தற்போது ஜெர்மனிக்கு செல்கின்றது.
இந்த ஆய்வுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது நான் லெட்சுமணன் அவர்களிடம்
சொன்னேன் -
" உங்களுடைய அடுத்த ஆய்வு வாழ்த்தி விளைந்த வெண்டைக்காய்களை சாப்பிட்டவர்கள் மனோபாவம் எப்படி நல்லபடியாக மாறுகின்றது என்பதாக இருக்கட்டும்!"
வாழ்க வளமுடன்!
ReplyDeleteவாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
Vaazhga Valamudan! :)
ReplyDelete