Wednesday 3 October 2012

MIDWEEK INSPIRATION


பரிகாரம்

எதிர்மறை எண்ணங்கள் எழும்போது என்ன செய்ய வேண்டும்?
ஓக் மாண்டினோ சொல்லும் பரிகாரங்கள் - 


உற்சாகமிழந்துவிட்டதாக உணரும்போது
பாடி மகிழ்ந்து உற்சாகத்தை மீட்டுக்கொள்வேன்

துக்க உணர்வு என்னை அலைக்கழிக்கும்போது
சிரித்து மகிழ்ந்து துக்கத்தை விரட்டுவேன்

உடற்சுகவீனத்தை உணரும்போது
எனது பணியை இரு மடங்கு அதிகம் செய்வேன்

பய உணர்வு ஏற்படும்போது
ஆர்வத்தை தோற்றுவித்து முன்னேறி செல்வேன்

தாழ்வு மனப்பான்மையால் பீடிக்கப்படும்போது
புத்தாடைகள் அணிந்து மனோபாவத்தை உயர்த்திக்கொள்வேன்

உறுதியில்லா சமயங்களில்
என் குரலை உயர்த்தி என்னை உறுதி படுத்திக்கொள்வேன்

வறுமைஉணர்வு தோன்றும்போது
வருகின்ற வளமை பற்றி சிந்திப்பேன்

தகுதியற்றவன் என்ற உணர்வு ஏற்படும்போது
எனது கடந்தகால வெற்றிகளை நினைவு கொள்வேன்

அற்பமானவன் என்ற உணர்வு எழும்போது 
எனது லட்சியங்களை நினைவு கொள்வேன்

2 comments:

  1. துக்க உணர்வு என்னை அலைக்கழிக்கும்போது
    பாடல்கள் கேட்டு துக்கத்தை விரட்டுவேன் :)

    ReplyDelete
  2. Trichy going to get INTL Airport because of JP.

    http://www.thehindu.com/news/national/cabinet-to-take-up-another-round-of-big-ticket-reforms/article3961866.ece?homepage=true

    -Kumar-

    ReplyDelete