Friday 31 May 2013

EXAMS ARE OVER..




கடந்த
பதினைந்து நாட்களாக 
M Sc  இரண்டாம் ஆண்டு தேர்வுகளுக்கு தயார் செய்ததினால் படு பிசி! மாடல் டெஸ்ட் பேப்பர்களில் இரண்டு எழுதாமல் , பைனல் exams எழுதி முடித்தாகிவிட்டது.

நேற்றுடன் பரிட்சைகள் முடிந்தன.

Exams  எழுதிய களைப்பு தீர மாலா நேற்றே சென்னை சென்றுவிட்டாள் 

இனி, ஞானவயலில் தரமான விளைச்சலைப் பெருக்க, (ஞானவிதைகள்) ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன!!!

Jokes -

பெத்த பொண்ணுக்கும், பரிட்சை பேப்பர்க்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்ன தெரியுமா??

ரெண்டையுமே கட்டி கொடுக்கிறவரைக்கும் ஒரே
டென்ஷன், தலைவலி தான்..
....

பெத்த பையனுக்கும், பரிட்சை பேப்பர்க்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா??

இரண்டையுமே திருத்தவே முடியாது...
....


நான் எழுதியிருக்கிற பதில்களுக்கு நீங்க வெறும் சைபர் மட்டும் போட்டிருக்கிறது சரியில்லங் சார்.

ஆசிரியர் சிரித்துக் கொண்டே...நீ சொல்றது சரிதான்.. சைபருக்கு கீழே மார்க் போடுறது அவ்வளோ நல்லா இருக்காதுன்னு நான் நினைச்சேன். 



விஜயும், மகேஷ் பாபுவும் (தெலுங்கு நடிகர்) தேர்வு அறையில்….

விஜய் – ..ண்ணா கொஞ்சம் பேப்ரை காமியேன், பார்த்து எழுதிக்கிறேன்

மகேஷ் – டேய் நான் எழுதுரது தெலுங்கு பரிட்சை

விஜய் – நீ காட்டு மட்டும் காட்டு அண்ணா, நான் ரீமேக் பண்ணி எழுதிக்கிறேன்!

குர்பசன் சிங் அப்படிங்கிற சர்தார்ஜி பல்கலைக்கழகத் தேர்வு எழுதிட்டு இருந்தாராம். கேள்விகள் எல்லாமே ஆம்/இல்லைன்னு பதில் சொல்ற ரகம். பரிட்சை கூடத்துல நம்மாளு போய் ஒக்காருறாரு, அஞ்சு நிமிஷம் கேள்வித் தாளைப் பாக்குறாரு. அதுக்கப்புறம் ஒரு வேகம் வந்தவரா, தன்னோட பேண்ட் பாக்கெட்லருந்து ஒரு காசு எடுத்து சுண்டி போட்டு தலை விழுந்துதுன்னா ஆம்ன்னு பூ விழுந்ததுன்னா இல்லைன்னும் பதில் எழுத ஆரம்பிக்கிறாரு. அரை மணி நேரத்துல இந்த மாதிரி எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி முடிச்சிடறாரு. 

அதுக்கப்புறம் பாத்தா திடீர்னு டென்சன் ஆகிடறாரு. வேர்த்து விறுவிறுத்து போயிடறாரு. 
பரிட்சை ஹால்ல இருந்த வாத்தியாரு சர்தார்ஜி கிட்ட வந்து "என்னப்பா என்னாச்சு? ஏன் டென்சனா இருக்கே?"ன்னு கேட்டாராம். 

அதுக்கு சர்தார்ஜி சொல்றாராம்" சார்! நான் முதல் அரை மணி நேரத்துலயே பதில் எல்லாம் எழுதி முடிச்சிட்டேன்... ஆனா இப்ப எழுதுன பதில் எல்லாம் சரியான்னு அதே மாதிரி காசை சுண்டி போட்டு சரி பாத்துட்டு இருக்கேன். இப்ப வர்ற பதில் வேற மாதிரி வருது!"

பரிட்சைல பெயில் ஆனா திரும்ப படிச்சி பாஸ் பண்ணலாம்.ஆனா,பாஸ் ஆயிட்டா. திரும்ப படிச்சி பெயில் ஆக முடியாது..!

No comments:

Post a Comment