Thursday 23 May 2013

பத்மஸ்ரீ SKM மயிலானந்தன் அவர்களுக்கு பாராட்டு விழா

கோவையில் 19-5-13 அன்று மாலையில் பத்மஸ்ரீ SKM மயிலானந்தன் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டோம்.
 சிறப்பாக நடந்த இந்த விழாவில் 7500 அன்பர்கள் கலந்து கொண்டனர்.

JP & MALA presenting bouquet to Smt & Sri Padmasri SKM Mayilaananthan

Presenting  a memento to Padmasri SKM
Sri SKM receiving Padmasri award from President of India  5-5-13



நிகழ்ச்சி சுருக்கம் கீழே -  





பத்மஸ்ரீ விருதுக்கு பெருமை சேர்த்தவர்

 உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன்
 என நடிகர் சிவகுமார் புகழாரம் சூட்டினார்.


கோவை கொடிசியா வளாகத்தில், உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் ஆழியாறு அறிவுத் திருகோவில் அறங்காவலர் குழு இணைந்து, பத்மஸ்ரீ விருது பெற்ற எஸ்.கே.எம்.மயிலானந்தத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடத்தின. இந்த விழாவில் நடிகர் சிவகுமார் பேசியது:

விஞ்ஞானத்தில் மெய்ஞ்ஞானம் உள்ளதைக் கண்டறிந்து உலகிற்கு சொன்னவர் வேதாத்திரி மகரிஷி. அதே நேரத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை, உணவு இல்லாதவர்களுக்கு உணவு கொடுங்கள் என அவரைப் போன்ற மகான்கள் கூறியுள்ளனர்.

ஆனந்தமாக, ஆரோக்கியமாக, மற்றவர்களுக்கு பயன்படும் வகையிலான வாழ்க்கையை வாழ வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் வேதாத்திரி மகரிஷி. அதைப் பின்பற்றி வாழ்ந்தவர் மயிலானந்தன். 17 ஆண்டுகாலமாக உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று சமூகப் பணியாற்றியதற்காக மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.

நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 66 ஆண்டுகளில் பலர் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளனர். அவர்களுக்கு விருதால்தான் பெருமை. ஆனால் விருதுக்கு பெருமை சேர்த்தவர் மயிலானந்தன். நேர்மையாக வாழ்ந்து முறையாக வருவாய் ஈட்டி, அரசுக்கு முழுமையாக வரி செலுத்தியதற்காக தமிழக அரசின் விருதை பெற்றவர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாமிநாதபுரத்தில், ஒடுக்கப்பட்ட 250 குடும்பங்களை தத்தெடுத்து மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்து வருவதால் அக்குடும்பங்களுக்கு நடமாடும் தெய்வமாக வாழ்ந்து வருகிறார்.

திருக்குறளில் உள்ள ஆயிரம் குறள்களை மனப்பாடம் செய்வது முக்கிய இல்லை. ஒரு குறள் போல் வாழ்பவன்தான் உயர்ந்த மனிதன். அதற்கு உதாரணமாக இளமைக் காலம் முதல் எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து வருபவர் மயிலானந்தன் என்றார் சிவகுமார்.





பாரதீய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்:


இந்த சமுதாயத்தில் தொண்டும் துறவும் சாத்தியம். 19, 20-ஆம் நூற்றாண்டில் உலகத்தில் பல நாடுகள் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று வந்தன. அதே நேரத்தில் விஞ்ஞான வளர்ச்சியும் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வால், எதையும் அடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதனால் மனிதன் வாழ்க்கையை பார்க்கின்ற விதம், புரிந்து கொள்கின்ற விதம், அணுகுகின்ற விதத்தில் மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடுமையான போட்டி, பொறாமை அதிகரித்தது. 21-ஆம் நூற்றாண்டில் அறிவு யுகத்திற்கு தேவையான மதம் உருவாக வேண்டும் என வலியுறுத்திதான் சமுதாயத்தில் சீர்த்திருத்தவாதிகள் தோன்றினர்.

விஞ்ஞான பார்வையும், முற்போக்கு சிந்தனை நிறைந்த ஆன்மிகமும் தேவைப்பட்டது. அதைப் பின்பற்றி சமுதாயத்திற்கு தேவையான தத்துவத்தைக் கொண்டு வந்தவர் மகரிஷி. இந்த தத்துவத்தைப் பின்பற்றி வாழ்ந்து சமுதாயப் பணியாற்றி மயிலானந்தன் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார் என்றார்.

ஆன்மிகத் தாக்கம் ஏற்பட்ட பின், அதை வாழ்க்கையில் தத்துவார்த்தமாக வழிநடத்திக் காண்பித்தவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன். நல்ல மனிதராகவும், தூய்மையாகவும், நேர்மையாகவும் தொழிலில் வெற்றி கண்டவர். வித்தியாசமான சிந்தனையும், துணிச்சலான செயல்பாடும்தான் இவரது வெற்றிக்கு காரணம். உயர்ந்த இடத்துக்கு வந்த பின் சமுதாயப் பணிக்கு தன்னை அவர் அர்ப்பணித்துள்ளது பாராட்டுக்குரியது.

மனிதன் மனது வைத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. பத்தோடு பதினொன்றாக வாழ்வதில் பயனில்லை. எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளதால், இந்த விருது பெருமை பெற்றுள்ளது. தகுதியை வளர்த்துக் கொண்டால் விருதுகள் தேடிவரும். வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று எல்லா மனிதர்களுமே நினைக்கின்றனர்; ஆனால், சிலரால்தான் முடிகிறது. அதேபோல, வெற்றியைத் தக்கவைக்கவும் சிலரால்தான் முடியும் என்றார்.

1 comment:

  1. நடிகர் சிவகுமார் photo ஏன் போடல?? :)

    ReplyDelete