Thursday, 5 June 2014

கடமை....3

புறநானூறில் 312ஆம் பாடலை பொன்முடியார் என்ற பெண்பாற் புலவர் பாடியுள்ளார்.இச்செய்யுளில் மறக்குடி மகள் ஒருத்தியின் கூற்றாகத் தாய், தந்தை,கொல்லன்,வேந்தன் மற்றும் ஆண்மகனுடைய கடமைகள் உணர்த்தப்படுகின்றன. அப்பாடல் வருமாறு.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
'ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.


மகனைப் பெற்று வளர்த்தல் என் கடமை.அவனைக் கல்விகற்ற சான்றோனாக ஆக்குவது தந்தையின் கடமை.அவனுக்கு வேல் முதலிய படைக் கருவிகளைச் செய்து தருவது கொல்லனின் கடமை. நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது நாடாளும் வேந்தனின் கடமை.ஒளிபொருந்திய வாளைக் கையில் ஏந்திப் போர்செய்து ஆண் யானைகளைக் கொன்றுவருதல் காளையான ஆண்மகனின் கடமையாகும்" என்பது இச்செய்யுளின் கருத்து.

No comments:

Post a Comment