Saturday, 7 June 2014

அறு(சு)வையா​னந்தா....1

 கடந்த சில மாதங்களாக ' அருட்குரல் ' மாத இதழில் நகைச்சுவை கட்டுரைகள் எழுதி வருகின்றேன். ஜூன் மாத இதழில் வந்த கட்டுரை கீழே - 


ஏழாம் சுவை - நகைச்சுவை 

- அறு(சு)வையா​னந்தா


" ஜி, உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி நகைச்சுவைகளை மிகவும் ரசித்தோம். இன்று எங்களுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?" எனக் கேட்டோம்.

" நகைச்சுவை என்பது வாழ்வின் ஓர் இயல்பான அம்சமாக இருக்கவேண்டும்.ஒரு மனிதன் தனியாக இருப்பதை விட பலருடன் கலந்து இருக்கும் போது வாய் விட்டு சிரிப்பதற்கு முப்பது மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனஒரு குழந்தை ஒரு நாளில் சராசரியாக 300 முறை சிரிக்கிறதாம்வளர்ந்த மனிதனும் கூட ஒரு நாளில் சராசரியாக 17 முறை சிரிப்பதாக மருத்துவ 
 நிபுணர்கள் கூறுகிறார்கள்.

100 முறை சிரித்தால் அது 15 நிமிடங்கள் வேகமாக சைக்கிள் ஓட்டுவதற்கு சமம் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.எனவே நீங்களும் நகைச்சுவை கலந்து பேச பழக வேண்டும் " என்றார் ஜி.

" நீங்கள்தான் எங்களை தயார் செய்ய வேண்டும்" என 'ஜி' இடம் கோரிக்கை வைத்தோம். 

" நகைச்சுவை பயிலரங்கங்கள் இதற்கு தேவையா என்ன...நீங்கள் சமீபத்தில் படித்து சிரித்த துணுக்கு ஒன்று சொல்லுங்கள் " எனக் கேட்டார் ஜி.

" கணவனின் முதுகில் வீங்கிய இடங்களில் மனைவி ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருக்கிறாள். அப்போது கணவன் ' அங்கதான்.. கொஞ்சம் மேலே கொடு' எனக் கேட்க, மனைவி ' கொஞ்சம் கம்முன்னு கிட.. எங்க அடிச்சேன்னு எனக்கு நல்லா தெரியும்' என்கிறாள் மனைவி" என்று நாம் 
சொல்ல ஜி வாய்விட்டு சிரிக்கிறார்.

"நல்ல நகைச்சுவை சொன்னீர்கள். இதில் ஏன் சிரிப்பு  வருகிறது தெரியுமா.....வழக்கத்திற்கு மாறாக கணவனை மனைவி அடிப்பதை எதிர்பாராதவிதத்தில் சொன்னதுதான் இந்த ஜோக்கின் சிறப்பு.இந்த ஜோக்கையே கொஞ்சம் மாற்றி சொல்லவா.." என்றார் ஜி.

" சொல்லுங்கள் ஜி " என ஆவலுடன் கேட்டோம்.

" ஒத்தடம் கொடுக்கும் மனைவியிடம் கணவன் அப்படியே கொஞ்சம் மேலே ஒத்து என கேட்க மனைவி ' அடப்பாவி மனுஷா, நான் அடிக்காத இடத்துலேயும் வீங்கியிருக்கே ..அவ கிட்டேயும்  அடி வாங்கியிருக்கியே...' 

இங்க 'அவ' என்பது இரண்டாம் தாரம் அல்லது சின்ன வீடு என்பது மறைமுகமாக சொல்வதால்  சிரிப்பு பொங்கி வருகிறதல்லவா.." என்கிறார் ஜி

நாங்கள் விழுந்து, விழுந்து சிரிக்கிறோம்.

"நகைச்சுவையின் நோக்கமே பிறரை நன்றாக சிரிக்க வைப்பது. அதே சமயத்தில் நம் நகைச்சுவை பிறர் மனதை புண்படுத்திவிடக்கூடாது. இன்றைக்கு நாம் பார்க்கும் சினிமாக்களில், டிவி தொடர்களில் நகைச்சுவை என்ற பெயரில் அடிப்பது, திட்டுவது இன்னும் மட்டமான விஷயங்களை தந்து கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்." என்றார் ஜி.

" உலகில் வழங்கி வரும் பெரும்பாலான ஜோக்குகள் கணவன் - மனைவி பற்றியதாகும். நீங்களும் நிறையப் படித்திருப்பீர்கள் " என ஜி சொன்னதும், 

" நாங்கள் கேட்டிராத சிலவற்றை சொல்லுங்கள், ஜி " என வேண்டினோம்.

ஜி சொன்னதில் ஒரு சில - 

நான் வாழ்க்கையில் ரொம்ப அடிப்பட்டவன் சார்? 

இருக்கும்.... உங்க மனைவியை பார்த்தா கொஞ்சம் முரட்டுத்தனமாத் தான் இருக்காங்க.

உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் உங்க கல்யாணத்துக்கப்புறம் நீங்கிடுச்சாமே?
ஆமா! கடைசியா இருந்தது சந்தோஷம்... இப்ப அதுவும் நீங்கிருச்சி.....

என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா. 

ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.

உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா
. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா.


"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."

"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"

"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"


கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே

மனைவி: கட்டிக்க போறது நான்தானே

கணவன்: துவைக்கிறவனுக்கு தானே கஷ்டம் தெரியும்
 

திருமணமானவர்களையே ஏன் சேல்ஸ் மேனாக வைத்திருக்கிறீர்கள்? 

அவர்கள் தான் மகிழ்ச்சியுடன் வெளியூர் செல்கிறார்கள்! 

No comments:

Post a Comment