Friday, 12 December 2014

இளமை...4



என்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்’ என்று நெல்லிக்கனியைச் சொல்லுவது முற்றும் பொருந்தும்.  உள்ளங்கை நெல்லிக்கனி’ என்னும் சொல்தொடர் மிகவும் பிரசித்தமானது. நெல்லிக்காயினால் மனித சமூகத்துக்கு எத்தனை விதமான நன்மைகள் ஏற்படுகின்றன என்பது பொதுவாகத் தெரிந்ததே.

ஒரு மனிதனுடைய ஆரோக்கியத்துக்கு மூலக் காரணம் அவனுடைய உடம்பில் ஓடும் சுத்த ரத்தந்தான். இந்த ரத்தத்தில் அந்நியப் பொருள்கள் கலந்துவிட்டால் ரத்தம் கெட்டுவிடுகிறது. ரத்தம் கெட்டு விட்டல் வியாதிகள் உண்டாகின்றன. அவற்றைத் தடுக்கும் அல்லது எதிர்க்கும் சக்தி சரீரத்தில் குறைந்துவிடுகிறது. இதன் விளைவு, இளமையிலேயே 

முதுமைதென்படுகிறது. அந்த அந்நியப் பொருளே அமிலம் என்பது மனிதனின் ஆரோக்கியத்துக்குக் கடுமையான எதிரியான யூரிக் அமிலம் இதில் நிறைய இருக்கிறது.

ஆப்பிள், ஆலிவ், நெல்லிக்காய் இந்த மூன்று பொருள்களும் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை அப்புறப்படுத்தும் சக்தி வாய்ந்தவை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நெல்லிக்காய் நம் தேசத்தில் எக்காலத்திலும் எவ்விடத்திலும் ஏதோ ஓர் உருவத்தில் சுலபமாகக் கிடைக்கிறது.

ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே ஆயுர்வேத சாஸ்திரத்தில் நெல்லிக்காயை மிகவும் புகழ்ந்து சொல்லி இருக்கிறார்கள். இதை ஒரு ரசாயனம் என்றே சொல்லுகிறார்கள். எந்த வஸ்து எக்காலத்திலும் எந்த உருவத்திலும் எல்லாருக்கும் உபயோகமுள்ளதாக இருக்கிறதோ, எது சரீரத்தின் ஒவ்வோர் அங்கத்துக்கும் புத்துயிர் தருகிறதோ, எது எல்லா வியாதிகளையும் தீர்க்கும் சக்தி வாய்ந்திருக்கறதோ, எது ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியதோ, அதை ரசாயனம் என்கிறார்கள். இந்த எல்லாக் குணங்களும் பொருந்தியது நெல்லிக்காய். ஆகையால், இதை ரசாயனம் என்று சொன்னால் மிகையாகாது.

இந்தியப் பெண்மணிகள் நெல்லிக்காயை ஆரோக்கியத்தின் சௌபாக்கியம் என்றும் ரத்தத்தைப் பலப்படுத்தும் ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளது.


இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு வாயுவையும், துவர்ப்பு கைப்பும் கபத்தையும் போக்கக் கூடியவை. வாத-பித்த-கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் போக்கக்கூடிய சக்தி நெல்லிக்காயில் இருப்பதால், இது மிகவும் சிறந்தது. ஆயுர்வேத வைத்தியத்தில் இது மிகவும் பயன்படுகிறது. இதில் ஏ,பி,ஸி ஆகிய 3 வைட்டமின்றகள் இருக்கின்றன. சாத்துக்குடி ரசத்தில் இருப்பதைப்போல 20 மடங்கு இ வைட்டமின் இதில் இருக்கிறது. மற்றக் காய்கனிகளைப் போல் இல்லாமல், நெல்லிக்காய் வாடினாலும் வைட்டமின் குன்றுவதில்லை இது, இதன் தனிப்பட்ட குணமாகும்.

No comments:

Post a Comment