Tuesday, 25 March 2025

BLESSINGS - WAVE THEORY

Life is filled with pleasant vibrations and the more we tune our mind to the subtleness around us, the more we become efficient in delving through the secrets of Nature

“When a wave comes from something, it has all the qualities of the object from which it originated. A wave coming from a rose, for instance, has the fragrant characteristic of that flower. In the like manner, any wave emanating from anything has a distinct quality – mechanical, chemical, magnetic, electrical and psychic.

All functions, contents and characteristics of the objects are transmitted from the wave, through the wave and by the wave. In the case of a human being, the wave emanating from an individual, by radiation, smell, sight, word or thought – whatever it may be – carries all the qualities of that being. 

Since every person is conditioned by the imprints of experiences already undergone, their thought, speech and action will be in accordance with those imprints. Our day-to-day life blends to so many shades in every relation and circumstances, whether in workplace or at home, we are predisposed to subject our personality to a matrix of vibrations. Every individual has good as well as bad imprints. Consequently, according to the conditioning of the individual’s mind, the thought emanating from them may be positive or negative. In addition to imprints of our own action, we have acquired innumerable externally caused imprints that are ingrained in our personality. Whenever the unwanted or adverse imprints are activated, they become more deeply ingrained. It is here that the value of blessings comes into play.

What is the state of one’s mind when blessing a person? An individual radiates good waves at that time, or one could not bring oneself to bless. When you proceed to bless someone, you are actually preparing your personality – bringing it to positive vibrations. When you practice positive thoughts, good vibrations emanate from you, and when blessing is done in that state of mind, it gathers tremendous power. The waves of blessings clash on the other person, they reflect onto you, refract and penetrate to several persons in addition to the one who is the object of your blessing. Good vibrations spread out to the whole of humanity; to the entire universe in every direction. Accordingly, when you bless someone, you are automatically blessed.

An individual’s mind must be in a peaceful state when blessing. There can be no aggravation, because one cannot bless in an aggravated state of mind. When one blesses, he or she automatically comes to Divine Consciousness. 

MEMES OF THE DAY ( 25-03-2025 )












 

ஆலமரம் சொல்லும் வாழ்க்கையின் ஒழுக்கம்

விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.

அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது.

இதைப் பார்த்த எதிரே இருந்த காட்டுச்செடி ஒன்று, "இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..? எங்களை பார் நாங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ, குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய்" என ஏளனம் செய்தது.

ஆலமரச்செடி யோசிக்க ஆரம்பித்தது. நானும் பிற செடிகளை போல சுதந்திரமாக வாழ்ந்தால் என்ன ? எப்படியாவது இந்த வாழ்க்கையில் இருந்து வெளி வர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே, மறுநாள் அந்த காட்டுச்செடி இருந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

அந்த காட்டுச்செடியும் வெட்டி தூக்கியெறியப்பட்டது. அந்த வழியாக வந்த விவசாயியின் மகன் , "இது என்ன செடி அப்பா..? ஏன் வலையெல்லாம் போட்டு அடைச்சி வச்சிருக்கீங்க " என்று கேட்க,



இதுவா.. இது ஆலமரச்செடி, இது மற்ற செடி மாதிரி சீக்கிரமா வளர்ந்து சீக்கிரமா அழிஞ்சு போறது இல்ல. பல நூறு வருஷம் வாழ்ந்து பயன்படக்கூடியது. அதான் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றார் விவசாயி.

தன்னை கட்டி வைத்திருக்கும் குச்சியும், சுற்றியிருக்கும் வேலியும், நான் இன்னும் நன்றாக வளர்வதற்கு தானே தவிர, சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்பதை புரிந்து கொண்டது.

நாம் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சில ஒழுக்க கட்டுப்பாடுகள் இருக்க தான் செய்யும்....?

மனைவியிடம் எப்போதும் அன்பு

நீங்களும் உங்கள் மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க வேண்டுமா?

அதற்கு சில டிப்ஸ் :

நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள்.

வேலை முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாகஇருந்து விடா தீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்தவிஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில் மனைவி இருக்கிறாள்என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள்.

எடுத்துக்கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரி யாமல்கடலை' போட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைக்கூட பலமணிநேரம் பேசு வார்கள். அதே போன்று நீங்களும் பேசுங்கள். அதற்காக, ஒன்றும்இல்லாத விஷயத்தை பேசுங்கள் என்று அர்த்தம் இல்லை. உங்கள் குடும்பத்துக்குதேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்தவிவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.

பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்த பூக்களை உங்கள்அன்பான மனைவிக்கு வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.

சம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப்பூவுடன் மனைவிக்கு பிடித்த ஸ்வீட்டையும் வாங்கிக்கொண்டு கொடுத்தால் அவர்களதுமனைவி அடை யும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.

உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்கள். ஒருகாதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வானோ, அதே போன்றுநடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.

உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்' என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள் இப்படி கேட்டமாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.

மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்தநேரம், அவள் மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலேபொழியும்.

மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம் அன்பாக இருப்பாள். நீங்கள் அவளிடம் ஒரு காத லனாய் பழகும்போது அவளும் உங்கள் காதலியாய் மாறிவிடுவாள்!

அதனால் காதலியுங்கள், #மனைவியை!

ஜோக்ஸ்











 

TURMERIC POWDER FOR SKIN


 

LEMON