லூயிஸ் ஸாரா (Lousie Zara)வின் பத்து கட்டளைகள் - சுஜாதா
குமுதம் பத்திரிக்கையில் அடியேன் ஒரு வருடம் ஆசிரியராக இருந்து பிழைத்து வந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதன் உதவி ஆசிரியர் குழுவிற்கு நான் அன்பளிப்பாக கொடுத்த "லூயிஸ் ஸாராவின் பத்து கட்டளை"களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு அஞ்சலி செய்கிறேன்:
பணப்பெட்டியில் ஒரு காதை வைத்துக்கொண்டு எழுத வேண்டாம். காசு குலுங்கும் சப்தம் உங்கள் உரைநடையின் சந்தத்தை மறைத்துவிடும்.
உங்கள் வாசகனை வெறுக்காதீர்கள். சில சமயம் அவன் உங்களுக்கு வழிகாட்டலாம்.
வாசகனை உங்களுக்கே தெரியாத / புரியாத பெரிய வார்த்தைகளால் குழப்பாதீர்கள்
மற்றவர் வெற்றிக்கு ஆசைப்படாதீர்கள். அவனுடைய நடையை, பாத்திரப் படைப்பை, ராயல்டியை எதையும் விரும்பாதீர்கள்.
உங்கள் மொழிக்கு மரியாதை கொடுத்து உண்மையாக இருங்கள். உங்கள் வார்த்தைகளை ஒரு தேர்ந்த தட்சன் போல் பழகுங்கள்.
புகழைத் துரத்தாதீர்கள். புகழ் உங்களை தேடி வர வேண்டும். பேராசை இல்லாதவர்களை புகழ் மெல்லத்தான் தேடி வரும். ஆனால் நீண்ட நாள் கூடவே இருக்கும்
உங்களுக்கு முன் எழுதிய பெரிய எழுத்தாளர்களை வெறுக்காதீர்கள். அவர்களை கண்மூடி உபாசிக்கவும் வேண்டாம்.
இலக்கியத்தை காப்பாற்ற வந்த அவதார புருஷனாக நடிக்காதீர்கள். திறமை விதைகள் கடல் மணல் போல பல்லாயிரம் வகைகளில் மலர்ந்து காளான்களை போல காட்டிக்கொடுத்துவிடும்
உங்களை சுற்றியுள்ள வாழ்க்கையை புறக்கணிக்காதீர்கள். உங்கள் எழுத்தின் ஊற்று அதில்தான் உள்ளது.
ஆன்மாவின் ஆழத்திலிருந்து எழுதுங்கள். அதன் தரத்திலிருந்து மக்கள் உண்மை அறிந்து கொள்வார்கள்
~~ லூயிஸ் ஸாரா (Lousie Zara), ஸாட்டர்டே ரிவ்யூ பத்திரிக்கையிலிருந்து ~~
No comments:
Post a Comment