Sunday, 18 January 2026

சுவாசம் - ஓஷோ


சுவாசம்

புத்தர்

உங்கள் சுவாசத்தைக் கவனித்தபடியே இருங்கள் அதை உணர்ந்தபடி இருங்கள்.

மௌனமாக அமர்ந்து சுவாசம் உள்ளே போவதையும் வெளியே வருவதையும் கவனியுங்கள்.

உங்களால் உங்கள் சலிப்பை நேரில் கவனிக்க முடிந்தால் சலிப்பு மறைந்து விடும்.

அதன் பின்னால் மிகப் பெரிய

அமைதி இருப்பது தெரியும்.

ஒருவரால் தனது சுவாசத்தை தொடர்ந்து நாற்பது நிமிடங்கள் கவனிக்க முடிந்தால்,

அவருடைய வாழ்வில்

ஒரு பிரச்சினையும் இருக்காது.

அவரால் எந்த பிரச்சினையையும்

கவனிக்க முடியும்.

இப்படி கவனிப்பதால்

எந்த பிரச்சினையையும்

கரைத்து விட முடியும்.

புத்தர் கவனித்தலில் இரண்டு விஷயங்களைக் கூறுகிறார்.

ஒன்று சுவாசத்தைக் கவனியுங்கள்

அடுத்து நீங்கள் காலால் நடப்பதை கவனியுங்கள்.

புத்தர் இந்த இரண்டு

செயல்களையுமே செய்தார்.

ஒரு செயல் நடக்கும்போது

அச் செயலைச் செய்தவாறே

அதை கவனிக்கலாம்.

இவ்வாறே மற்ற எல்லா

விஷயங்களையும் கவனிக்கலாம்.

இப்படி மௌனமாக எச் செயலைக் கவனித்தாலும் கவனிக்கப்பட்ட

அந்த ஒன்று மறைந்து விடும்.

இப்படிக் கவனிப்பதால் சக்தியின்

குணம் மாறி விழிப்புணர்வு

சுடர் விட்டு ஒளிர்கிறது.

உள்ளது ஒன்றை

உள்ளபடி சரியாக

ஆழமாக கூர்ந்து

கவனித்தாலே போதும்

அது மறைந்து விடுகிறது

உண்மை ஒன்று இங்கு இருக்கிறது

இது நம்முள் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அதைநேரில் பார்த்து விடுங்கள்

அதை விழிப்புணர்வுடன் கவனியுங்கள் ..

ஓஷோ.

No comments:

Post a Comment