Monday 19 November 2012

உலக ஆண்கள் தினம்


                      


அட இத பாருடா, எங்களுக்கெல்லாம் கூட தினம் இருக்குதா? 

பரவால்லியே… என்ன ஒரு பெருந்தன்மை. 

உசிரில்லாத கல்லு கடப்பாரைக்கு கூட ஆயுத பூஜைன்னு ஒரு தினம் இருக்கிறப்போ அம்மிகல்லா மாறி போன எங்களுக்கும் ஒரு தினம் இருக்கிறது கொஞ்சம் சந்தோசம்தான். சரி, விசயத்துக்கு வருவோம். 

பெரும்பாலும் 30 வயதுக்கு மேல ஒரு ஆணுக்கு நடுவயது ப்ராப்ளம் வருகிறது. இதை ஆங்கிலத்தில் மிட் லைப் க்ரைசிஸ் என்பார்கள். எப்படி ஒரு பூப்பெய்திய பெண்ணுக்கு அந்த சமயத்தில் தகுந்த அன்பும் அரவணைப்பும் சப்போர்ட்டும் தேவைபடுகிறதோ, அதே போலவே ஆணுக்கும் இந்த மிட் லைப் சமயத்தில் மிக கவனமாக ஒரு அன்பு, அரவணைப்பு, ஆதரவு, அறிவுரைகள், சப்போர்ட் தேவை படுகிறது. மிகவும் குழப்பமான டைம் இது. இதை கொஞ்சம் கவனமாக தாண்டி 42 க்கு போய்ட்டா போதும், அப்புறம் வண்டி சல்லுன்னு போய்டும். ஆனா நீங்க உத்து நோக்கினா இந்த சமயத்தில தான், ஏற்கனவே ஒரு மாற்றத்தில் அதாவது ட்ரேன்சிசன் நிலையில் இருப்பவனை போட்டு எல்லோரும் சேந்து நோகடிப்பாங்க. அது பொண்டாட்டி புள்ளயா இருக்கலாம், வேலை செயுமிடமா இருக்கலாம், நண்பர்களா இருக்கலாம், அல்லது உற்றார் உறவினர்களா இருக்கலாம். அவனுக்கும் பல கவலைகள் ஓடி கிட்டு இருக்கு, எதிர் காலத்தை பற்றிய பயம் உள்ளே ஓடிகிட்டு இருக்கு, பொண்டாட்டி, புள்ளை குட்டிங்க, ஆத்தா, அப்பன், சொந்தகாரங்க, மேனேஜர், அது இது ன்னு ஆயிரத்தெட்டு சிந்தனைகள் ஓடி கிட்டு இருக்கும்.இது எல்லாத்தியுமே ஒரே ஒருத்தனே சிந்திச்சு, ஒருமுகபடுத்தி, ஒரு கோர்வையா கொண்டு போறதுக்குள்ள செமையா மண்டை காயும். அப்போதான், அதுக்குத்தான் கொஞ்சம் சப்போர்ட் தேவை. அந்த சமயத்தில யாரோ ஒருத்தர், மனைவியோ, அல்லது தாயோ, தந்தையோ, அல்லது வெளியிடத்தில் மிக உற்ற நண்பனோ யாரோ ஒருத்தர் கொஞ்சம் அவனையும் காது கொடுத்து கேட்டு, அவங்கனால முடிஞ்ச யோசனைகளை சொல்லி, அவனுடைய முடிவெடுக்கும் திறனுக்கு அதாவது டெசிசன் மேக்கிங் இல் உதவி செஞ்சா போதும், இந்த மண்டகாச்சல், மண்டகொடச்சல் எல்லாம் நீங்கி கொஞ்சம் தெளிவா அவனால் வாழ்க்கையை மீண்டும் எதிர்கொள்ள முடியும். 


ஆனா பாத்தீங்கன்னா, யாருமே இந்த மாரிஎல்லாம் ஒன்னு இருக்குன்னு நெனச்சு கூட பாக்க ரெடியா இல்ல, எடுத்து சொன்னாலும் கேலி பண்ணுவாங்களே தவிர, அதுல எவ்வளவு உண்மை பொதிஞ்சு இருக்குன்னு பாக்க மாட்டாங்க. டேய், ஒரு ஆம்பளைன்னு இருந்தா பல பிரச்சினைகள பாத்துதான் ஆகணும், இதையெல்லாம் கூட செய்ய முடிலேன்னா என்ன ஆம்பிள்ளை, அப்புறம் உனக்கெல்லாம் எதுக்கு மீசை ன்னு எடுத்தெறிஞ்சு பேசிட்டு போயிட்டே இருப்பாங்க…

இவனும் இதுக்கு பயந்தே தனியா தனியா யோசிச்சு யோசிச்சு பாத்து, மண்டை குழம்பி, ஒரு கட்டத்துக்கு மேல எல்லாமே தப்பான முடிவாவே எடுக்க ஆரம்பிப்பான். எல்லாத்திலையும் சருக்கிடுவான். அப்புறம் என்ன ஆகும், என்னடா இது ஒண்ணுமே நடக்க மாட்டேங்குதேன்னு, நேரா டாஸ்மாக் போய்டுவான், இல்லேன்னா இன்னொருத்தி மடில போய் படுத்துக்குவான். இப்படிதான் ஆரம்பிக்கும் கதை. இது தப்புன்னு தெரிஞ்சாலும் அதையே கண்டினியு பண்ணுவான். அதை விட்டு வெளிய வர பயபடுவான், ஏன்னா வெளிய வந்தா மறுபடி அதே பிரச்சினைகள், டெசிசன் மேக்கிங் எல்லாமே இன்னும் அப்படியே இருக்கும். அப்புறம் ஒரு 9 வருஷம் கழிச்சு 42 வயசு ஆகுரப்போ எல்லாம் எப்படியோ ஒரு வழியா நல்லாவோ கெட்டதாவோ முடிஞ்சு போய் இருக்கும். அப்புறம் நான் செஞ்சது தப்புன்னு சொல்லிட்டு அடைக்கலம் தேடி வருவான். ஏன்னா பிற்காலம் நல்லா போகணுமில்ல. அதனால, நான் என்ன சொல்லுறேன்னா, 30-40 வயது ஆணுக்கு கண்டிப்பா ஒரு சப்போர்ட் தேவை. அந்த மிட் லைப் வாழ்க்கை கம்பி மேல நடக்குற மாறி. அதனால அவனுக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுத்து யாராச்சும் கொஞ்சம் உருதுனையா, சும்மா ஒரு சப்போர்ட்டா இருங்க போதும். மத்ததெல்லாம் அவன் பாத்துக்குவான். அத விட்டுட்டு எப்பவும் ஆணையே குறை சொல்றத விடுங்க. டாஸ்மாக் போறவங்க எண்ணிக்கைய குறைங்க. வாழ்க வளமுடன்….

நன்றி  

- ராஜேஷ் பிள்ளை ( from the net )

No comments:

Post a Comment