Tuesday 11 December 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 22

நண்பன்  நைனா முகமது 


JP & Naina @ Taj 1973

அண்ணாமலைப் பல்கலைக் கழக இன்ஜ்நீரிங்  காலேஜ்ல சேர்ந்ததிலிருந்து நான் BE பிறகு MSc முடித்து நெய்வேலியில் 
வேலை சேர்ந்த வரைக்கும் தினமும் தொடர்ந்த நட்பு  நைனாவுடன்தான் !

சிதம்பரத்தில் இயங்கி வந்த காந்தி மன்றத்தின் தொண்டனாக சமூக சேவைகள் செய்வதிலிருந்து யாருக்கு என்னமாதிரி உதவிகள் தேவைப் பட்டாலும் முதல் ஆளாக நிற்பான் நைனா.

தினமும் கல்லூரிக்கு சேர்ந்தே சைக்கிளில் செல்வோம். இரவு என்னோடு சேர்ந்து படிக்க வருவான். நான் சிதம்பரத்தில் அக்கா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தேன். கீழ வீதியில் காலநாத பிள்ளையார் கோவில் சந்தில் இருந்த அந்த வீட்டுக்கு நைனா வருவது அங்கிருக்கும் நாய் ஒன்று குலைப்பதிலிருந்தே தெரிந்துவிடும். ஒருநாள் அந்த நாய் மீது அவன் சைக்கிளை  ஏற்றியதிலிருந்து  நைனாவைப் பார்த்தாலே அது கோபமாகிவிடும்.

நாகூர் கந்தூரி விழாவுக்கு சிதம்பரத்திலிருந்து சைக்கிளிலேயே  சென்று வருவான்.  நான் விடுமுறைக்கு மாயூரம் வந்துவிட்டால் தன் சைக்கிளுடன் வந்துவிடுவான்.

BE கடைசி வருசம் எங்கள் டீன் ராஜாராமை கலாய்ப்பதெற்கென்றே 
நைனாவுக்கு மாறுவேட போட்டியன்று அனுமார் வேஷம் போட்டு , கர்லா கட்டையை கதையாய்  கொடுத்து வாயில் சின்னதாய் இரண்டு எலுமிச்சம் பழம் வைத்து உப்பவைத்து " ராஜாராமா! கவலைப் படாதே..உன் சீதையை கண்டுபிடித்து தருகின்றேன். உன் கணையாழியை கழற்றி கொடு " என்று சொல்ல சொல்லி டீன் கையிலிருந்த மோதிரத்தை பிடுங்க சொல்லியிருந்தோம்.அவனும் அப்படியே செய்ய ஆரம்பித்ததும்  டீனோ     " இந்த குரங்கை துரத்துங்கடா" ன்னு விரட்டினார். இருந்தாலும்  பரிசை நைனாவுக்கே கொடுத்தார். நான் PG படிக்கும்போது டீன் என்னைப் பார்க்கும்போதெல்லாம் " உன் குரங்கு ஃபிரெண்ட்  எப்படியிருக்கான்?" என விசாரிப்பார்.

நான் BE முடித்து MSc சேர்ந்த சமயம் அவன் தந்தை இறந்துவிட சென்னை 
சென்று mixie ஒன்று  டிஸைன் செய்து தயாரித்து 1975ம் ஆண்டு 500 ரூபாய்க்கு விற்றான். நான் பிறகு நெய்வேலியில் சேர்ந்த பிறகு அவனுக்கும் அங்கு வேலை கிடைத்து மறுபடியும் நாங்கள் ஒன்றாக நெய்வேலியில் நட்பைத் தொடர்ந்தோம்.

நான் திருச்சி வந்த பிறகு சேகர் ( அண்ணன் பையன் ) நெய்வேலியில் வேலையில் சேர்ந்தபோது அவனுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்தான்.

அவன் திருமணம் மதுரையில் நடைபெற்றபோது நானும், சேகரும் சென்றிருந்தோம். அவனது மனைவியின் குடும்பம் மலேசியாவில் இருந்தது.

மாயூரத்தில் நடைபெறும் எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் எல்லாம் தவறாமல் கலந்துகொள்வான்.

எனது பிறந்தநாளுக்கு தபால் மூலம் வாழைப்பழம் அனுப்புவான். காய் வெட்டாக இருக்கும் வாழைப்பழம் மேல் என் முகவரி எழுதி ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டியில் போட்டுவிடுவான். நானும் due கட்டி அதைப் பெற்றுக் கொள்வேன்!

அம்மா இறந்தபோது துக்கம் விசாரிக்க வந்தபோது அவன் குடும்பத்துடன் திருச்சி வருவதாகச் சொன்னான்.

ஆனால் சிலநாட்களில் சேகர் மூலம் வந்தது அவன் மறைவு செய்தி!

அவன் குடும்பத்தினர் பற்றிய தவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

நைனாவின் குடும்பம் எங்கிருந்தாலும் எல்லா வளங்களும் பெற்று 
நிறைவாக வாழ வாழ்த்திக்கொண்டே இருக்கின்றேன்!

( இந்த நினைவு தொடர்பான பல போட்டோக்கள் காணாமல் போய்விட்டது வருத்தமாய் உள்ளது )

2 comments:

  1. I remember நைனா very well and all the interactions I had with him whenever he visited us for our religious festivals. I also remember receiving Banana by post :))

    ReplyDelete
  2. Very touching recollection. I also do recall him. When we were on north India tour, I remember he tried his hand in Hindi which many times landed us in problems due to the words and pronunciation. I really feel sad.

    ReplyDelete