Thursday 31 January 2013

முதலாம் ஆண்டு நிறைவு

                                                         

Blog  எழுதத் துவங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகின்றது.

இதையொட்டி ஜலீல் பிப்ரன் JPஐ பேட்டி காணுகிறார் -

ஜலீல் பிப்ரன் :

பட்டங்கள் பலகோடி பெற்ற, மயிலாடுதுறை மன்னன், நாளைய வரலாறு, நடமாடும் பல்கலைக் கழகம், , ஜோதிட கலாநிதி இன்னும் பலவாறாகப் போற்றப்படும் நான் உங்களை பேட்டி காண்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

JP :

ஞானவயல் வாசகர்களின் Head Letters !

ஜலீல் பிப்ரன் :

எனது 2013ம் ஆண்டு ராசி பலன்கள், கவிதைகள், கதைகள், போட்டோக்கள்  போன்றவைகளை ஞானவயலில் போடாதது குறித்து எனது ரசிகர்கள் உங்கள் மீது கோபமாக இருப்பது தெரியுமா?

JP :

தெரியும்!

ஜலீல் பிப்ரன் :

அப்ப, இந்த ஆண்டு வருமா?

JP :

வரலாம்...

ஜலீல் பிப்ரன் :

ஆன்மீக ஆனா, ஆவன்னா அப்படியே நிக்குதே?

JP :

ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி மற்றும் 20ம் தேதி பாடங்கள் வரும்.
கேள்விகள் நிறைய எதிர்பார்க்கிறேன். கேளுங்க, கேளுங்க, கேட்டுகிட்டே இருங்க..!

ஜலீல் பிப்ரன் :

சித்தர்கள் பற்றி அப்புறம் ஒண்ணுமே போஸ்ட் பண்ணலையே..?

JP :

மாதம் ஒரு சித்தர் பற்றி பதிவு பண்ண விருப்பம்.

ஜலீல் பிப்ரன் :

திருக்குறள் மற்றும் தமிழ் பாடல்கள் விளக்கங்களும் நின்று விட்டதே?

JP :

நண்பர் ஒருவரின் அறிவுரையின்படியும், வாசகர்கள் ஆதரவின்மையாலும் நின்று விட்டது.

ஜலீல் பிப்ரன் :

தென்றல் நினைவுகள் இந்த மாதம் ஒன்று கூட வரவில்லையே?

JP :

நினைவுகள் தொடர்பான போட்டோக்கள் தேடி எடுப்பதில் நேரம் போய் விடுகின்றது.

ஜலீல் பிப்ரன் :

எதையெல்லாம் பதிவு செய்ய விருப்பம்?

JP :
நான் வசித்த இடங்கள், பார்த்த ஊர்கள், பழகிய நண்பர்கள், குடும்பம், உறவினர்கள், அலுவலகம், மனவளக்கலை என நிறைய பதிவு செய்ய ஆசை.

ஜலீல் பிப்ரன் :

Face Book ல் ஏன் வரவில்லை?

JP :

நிறைய பேர்கள் அழைக்கிறார்கள். இன்னும் நுழையவில்லை. சீக்கிரம் வர வாய்ப்பு உள்ளது.

ஜலீல் பிப்ரன் :

இந்த 475 post களில்  பெரும்பாலானவை cut & paste தானே?

JP :

ஆம். நான் படித்தவைகளில் சிலவற்றைத்தான் பதிவு செய்துள்ளேன். படிப்பவர்களின் விருப்பம் தெரியாததால் தொடருகின்றேன்.

ஜலீல் பிப்ரன் :

இந்த இரண்டாம் ஆண்டில் என்ன எதிர்பார்க்கலாம்?

JP :

BHEL  பணி இந்த ஆண்டுடன் நிறைவு பெறுவதால் ஓய்வு கிடைப்பது சிரமம்.
எனினும் நேயர் விருப்பம் தெரிந்தால் நிறைவேற்ற முயல்வேன்.

ஜலீல் பிப்ரன் :

மறுபடியும் கேட்கின்றேன்,,இந்த ஆண்டு எனக்கு வாய்ப்புண்டா?
                                                                                            

JP :

மாதம்  ஒருமுறை.. ..முயற்சிக்கிறேன்!          


ஜலீல் பிப்ரன் :

நிறைவாக...?

JP :

உற்சாகமூட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!


Thank You Animated GIF Comments | GraphicsGrotto.com

8 comments:

  1. Happy Birthday ஞானவயல்!!!!
    I like the word 'நாளைய வரலாறு'!!!

    "BHEL பணி இந்த ஆண்டுடன் நிறைவு பெறுவதால் ஓய்வு கிடைப்பது சிரமம்"??????

    ReplyDelete
    Replies
    1. O'priya.....இது கூட புரியலியா உனக்கு?? he used to do all the readings from internet, copy / paste, thinking, blogging - all in office and he is saying if he retires this year, he can't go back to office to do all the above (even if he goes, watchman will not allow him to enter) and in house he would be terribly busy with Mala - i mean in cutting, cooking, washing, shopping and sweeping and what not.....:)

      Delete
  2. haha.... for "மயிலாடுதுறை மன்னன்" and "வாசகர்களின் Head Letters"! :)

    this year...expecting less cut n paste and more personal experiences and writings...

    ஞானவயலுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. ...forgot to add one more request...
    would like to see your original KG jokes rather than what you read in your jokes section :)

    ReplyDelete
  4. ஜலீல் forgot to ask blog எப்ப நிறைவு பெறும்??

    ReplyDelete
  5. ஜோதிட கலாநிதி ஜலீல் பிப்ரன் ஞானவயலின் ஜாதகத்தை ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்.
    பலன் சொல்ல அதிகமாக பணம் கேட்கின்றார்.


    குறைந்தது நூறு KG ஜோக்ஸ் போட்டுவிட்டு நிறைவு செய்யுங்கள் என பல நேயர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. சும்மாங்காட்டியும் பீலா உடகூடாது நைனா

      Delete
  6. eagerly waiting for 100 KG jokes :) and keep continuing after that...

    ReplyDelete