Tuesday, 27 January 2015

OFF


GOING  TO  ALIYAR  IN  CONNECTION  WITH  MY  Ph D

WILL BE BACK  ON  1-2-2015

SMILE....237

STONE  AGE  COMPUTERS!





தமிழ் இலக்கியம் ....1

புலவர் புகழேந்தி சோழ மன்னனின் தமிழ் அவையில் தான் எழுதிய நள
வெண்பாவை  அரங்கேற்ற ஆரம்பித்தார்.


பாக்களின் இனிமையில் அவையோர் மயங்கி இருந்தனர்.இனிய மாலைப் பொழுதின் அழகை வர்ணித்த புகழேந்தி,''மல்லிகையே வெண்சங்கா வண்டூத,''என்று பாடினார்.அதன் பொருள்,''மல்லிகைப் பூக்களை சங்குகளாக்கி வண்டுகள் ஒலி  செய்த போது, '' என்பதாகும்.

சோழ மன்னனின் தமிழ் அவையில் ஒட்டக்கூத்தனும் உண்டு.அவருக்கும்,புகழேந்திக்கும் ஏழாம்  பொருத்தம்.புகழேந்தி ஆரம்பித்ததில் இருந்து எதில் குறை கண்டு பிடிக்கலாம் என்று காத்திருந்தார். 

புகழேந்தி மல்லிகைப் பூக்களைப் பற்றிப் பாடியதும் வெகுண்டு எழுந்தார்,ஒட்டக்கூத்தர். அவர் கூறினார்,''சங்கு ஊதுபவன் சங்கின் பின் புறம் இருந்து ஊதுவதுதான் முறை.மல்லிகைப் பூவின் மேல்புறம் தேன் குடிக்கும் வண்டுகள் சங்கு ஊதுவதாய்க் கூறுவது காட்சிப் பிழையானது.புகழேந்தி பாடுவது வெண்பா அல்ல.வெறும்பா,'

'சபையில் கடுமையான அமைதி நிலவியது. புகழேந்தி என்ன சொல்லப் போகிறார் என்று அனைவரும் ஆர்வத்துடன் யோசித்துக் கொண்டிருந்தனர்.

புகழேந்தி சொன்னார், ''ஒட்டக்கூத்தரே! நீர் பெரிய புலவர்தான்.ஆனால் உமக்கு ஒரு விஷயம் தெரியவில்லையே!கள் குடிப்பவனுக்கு தலை எது கால் எது என்று தெரியுமா?கள் குடித்த வண்டு மட்டும் அதற்கு விதி விலக்கா?''சபையில் ஆரவாரம் அடங்க சிறிது நேரம் ஆயிற்று.


EXCELLENCE......12

The 8 Keys of Excellence 
 Definitions and Descriptions


COMMITMENT – Make your dreams happen

Take positive action. Follow your vision without wavering.

Commitment is the breathtaking moment of making a compelling decision, jumping in, and going forward with gusto. Once a commitment is made, indecision is eliminated—there is no more “Should I or shouldn’t I?” … “Will I or won’t I?” A commitment is not made lightly—it’s about making a decision so strong that there is no going back … like a skydiver who has jumped from the plane!

The decisive act of making a commitment—when we decide to do “whatever it takes” to reach a goal—sets in motion an energy field that propels us forward on our path. At each step along the way, our commitment inspires us to take positive action and overcome obstacles, and pushes us on until we “make it happen.”

Monday, 26 January 2015

ADVICE...10

அன்பு மகனுக்கு/அன்பு மகளுக்கு,

*ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.
*மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.
*'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.
*உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.
*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.
*ரகசியங்களைக் காப்பாற்று.
*புதிய நண்பர்களைத் தேடிக்கொள்:பழைய நண்பர்களை மறந்துவிடாதே.
*தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.
*உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.
*தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி
*ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.
*கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.
*கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.
*உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.
*மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.
*ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.
*வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.
*போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.
*ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.
*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.
*பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.
'எனக்குத் தெரியாது',மன்னிக்கவும்',என்பதை சொ

இன்று படித்தது - 16

நம் முன்னோர் இருக்கும் திக்கு நோக்கி (எந்தத் திக்கு என்பதுதான் தெரியவில்லை)இரண்டு கரங்களையும் கூப்பித் தண்டனிடுகிறேன் ஆகா,அவர்கள் நமக்கு செய்திருக்கும் நன்மைதான் என்ன!வருடம் 365 நாளில் ஏறக்குறைய 300 நாட்கள் நமக்கு விடுதலை அளித்திருந்தனர்.
இக்காலத்தில் வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது.ஆனால் நம் முன்னோர் செய்து வைத்த ஏற்பாடு எவ்வளவு அழகானது பாருங்கள்!


மாதங்களில் மார்கழியும் புரட்டாசியும் கெட்டவை.ஒரு மாதத்தை எடுத்துக் கொண்டால் அமாவாசை ,பாட்டிமை,அஷ்டமி,நவமி,திதி இவை உதவா.பின்னர் பரணி,கார்த்திகை நட்சத்திரங்கள்; சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை.ஆகா,செவ்வாயோ,வெறு வாயோ என்று கேட்டதில்லையா?


பின்னர் மரணயோகம்,கரிநாள்,மாதம்,திதி நட்சத்திரம்,கிழமை, யோகம் எல்லாமே கூடிய நாள் ஒன்றிருந்தால்,அதில் ராகு காலம், தியாஜ்யம், பிரதோஷம் இந்த வேளைகளில் கூடா.இவ்வளவு விபத்துக்களையும் கடந்து ஒருவன் ஏதேனும் காரியம் செய்யப்போனால்,யாரேனும் ஒரு சிறு தும்மல் தும்மி விட்டால் போதும்,அன்று விடுமுறைதான்.


ஆகா,இவ்வளவும் பூரணமாக அமுலிலிருந்த அந்தப் பழைய காலம்......நினைத்தாலே நாவில் ஜாலம் கொட்டுகிறது.இப்போது வரவரக் கலியுகம் அல்லவா முற்றி வருகிறது?
                                           --  முதல் முதலாக கல்கி ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை. 

சிந்திக்க ...3

இளந்துறவி ஒருவர் தியானம் செய்யஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.அவருக்குக் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்வதில் விருப்பம் இல்லை.தன்  மீது அவருக்கு அளவு கடந்த நம்பிக்கை.எனவே கண்ணைத் திறந்து கொண்டே தியானம் செய்ய ஆரம்பித்தார்.மாலை வேளை.சுகமான காற்று வீசியது.அப்போது ஜல்ஜல் என்று ஒரு சப்தம். ஒரு அழகிய பெண் நீர் எடுக்க அந்தப் பக்கம் சென்றாள்.அவளின் அழகு துறவியை சலனப் படுத்தியது.அதனால் அடுத்த நாள் கண்ணைக் கட்டிக் கொண்டு தியானம் செய்தார்.மாலை வந்தது. கன்னியும்  வந்தாள் .சலங்கை ஒலி அவருடைய கவனத்தை மிகக் கவர்ந்தது.அவரால் தியானத்தில் ஒன்ற முடியவில்லை.மறுநாள் கண்ணையும் காதையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு  தியானம் செய்தார்.மாலை வந்தது.பூவையும் வந்தாள்.கூடவே அவள் வைத்திருந்த மல்லிகைப் பூவின் வாசமும் வந்தது.அந்த மனம் அவரை எங்கோ கொண்டு சென்றது.அடுத்த நாள் கண், காது, மூக்கு எதுவும் தெரியாமல் கட்டிக் கொண்டு தியானத்தை மிக உறுதியுடன் ஆரம்பித்தார்.மாலையும் வந்தது.கன்னி வரும் நேரமும் வந்தது.ஆனால் இன்னும் கன்னி வரவில்லையே.துறவியின் மனம் ஏங்க ஆரம்பித்தது

Sunday, 25 January 2015

CONSCIENCE......2




SMILE.....236

A CAT HOLDING A MOUSE

London (Husband's Marriage Seminars)

At The Murugan Temple in East Ham, London, they have weekly husband's marriage seminars.

At the session last week, the priest asked one Nadarajah, who said he was approaching his 50th wedding anniversary, "to take a few minutes and share some insight secret how he had managed to stay married to the same woman all these years."

Nadarajah replied to the assembled husbands, "Well, I've tried to treat her nice, spend money on her, bought her enough jewelleries and sarees, but best of all is, I took her to Chennai, India for the 25th anniversary!"

The priest responded, "Nadarajah, you are an amazing inspiration to all the husbands here! Please tell us what you are planning, for your wife for your 50th anniversary?"

Nadarajah proudly replied, "I’m going back to Chennai to pick her up.



EXCELLENCE......11

The 8 Keys of Excellence 
 Definitions and Descriptions

THIS IS IT! – Make the most of every moment


Focus your attention on the present moment. Keep a positive attitude.

This Is It! is about focusing on NOW instead of later, or next week, or next month, or next year, or yesterday, etc., and making the most of it. A positive This Is It! attitude can make everything we do and every day productive, fulfilling, and fun!

Life is full of distractions and opportunities to do something else, something other than what we’re doing now. Many of us spend a lot of time thinking about those other things. Instead of making what we’re doing now “it” our focus is often elsewhere—on things we wanted to do, could have done, should have done, or want to do “sometime.” Whenever our thoughts are occupied with something other than what we’re doing, we miss what’s going on around us in the moment … while we’re waiting for the next moment to arrive the present moment slips away.

When we live in the NOW we have power! With a This Is It! attitude we make the present “it” and find joyful moments that we might otherwise have missed!

STORY WITH MORAL......87


Love and It's Power


A mighty King was marching home after being victorious in a gruesome battle. He had captured the crown prince of the neighbouring kingdom and killed the King. The King was crossing through a jungle. He wanted to rest.

The army halted there for the evening. Nearby was a hermitage. The king decided to pay his respects to the sage there. He sent his Minister and some soldiers to seek an audience. They told the disciples there, "Maharaj wants to meet the sage." The disciples said, "Guruji has retired for the day, you can come tomorrow."

The next morning the King came to the hermitage dressed in his royal finery, accompanied by his ministers and attendants.
The sage was sitting under a tree and scattering bajra seeds all around. Hundreds of birds of different kinds were eating and the sound of their twittering filled the air. The King walked up to the sage. The sage did not look up. The king said, "Pranam, Guruji!" No answer.

He spoke louder, "Pranam, Guruji!" Still, no answer."

Guruji, I said Pranam!" he said in an angry voice.The sage looked up and said, "Stop shouting, you are scaring the birds."





That made the king even more furious. "Do you know who I am?" he shouted. 

The sage said calmly, "Yes, I do. You are the one who kills for the love of power.
You are the one who knows not that this power is temporary. One day another King shall kill you in the same way.
The love of power shall bring about your downfall."

The king was beside himself with rage. He said, "Your impertinence is intolerable. I shall behead you just now!
" He drew out his sword and raised it to strike the sage.

In an instant, hundreds of birds flew up and attacked the king. They poked their beaks into his face, his eyes and his arms and all over. The king moved his arms up and around to ward off the birds. But the birds wouldn't leave him. 

The sage said, "Leave him! Leave him! Come to me my dears!" All at once, the birds quietened down and sat meekly at the feet of the sage.

The sage said, "All I ever gave these birds is love. Oh King! Realize the power of love. The love of power has blinded you and brought you to the level of a killer. These birds would have killed you, but that's because they love me. I rule over them like a king too, but the only power I ever exercise over them is the power of love and it is greatest power on this Earth."

It's not what you gather, but what you scatter that tells what kind of life you have lived!

Saturday, 24 January 2015

EXCELLENCE......10



The 8 Keys of Excellence 
 Definitions and Descriptions

 SPEAK WITH GOOD PURPOSE

  Speak honestly and kindly
Think before you speak. Make sure your intention is positive and your words are sincere.

Words are powerful! They have the power to uplift and enlighten or put down and depress. A few cutting words spoken in a moment of anger can affect us for a long time, perhaps even a lifetime. On the other hand, a few kind words can make a very positive difference in how we feel about ourselves … sometimes for a lifetime.

What we say to others—and to ourselves—can have a huge impact. Speaking with good purpose is about always considering the intention of our words. It’s about communicating directly, clearly, honestly, and with a positive purpose. The first step is awareness. If we always think before we speak instead of just blurting out whatever comes to mind, we can learn to consider the reason for our words and make sure we are speaking with good purpose … will our words build someone up or put them down? We all sometimes have negative thoughts, but we don’t have to say everything we think.

There will be times when we need to share critical thoughts. At these times, if our purpose and how we phrase our words is considered first, sharing honest and direct feedback can be very positive and powerful, and build trust.

Speaking with good purpose is the cornerstone of healthy relationships. This Key fosters a positive emotional environment where people are happier, more productive, and more likely to succeed.

CONSCIENCE......1





Friday, 23 January 2015

ஆன்மீக ஆனா, ஆவன்னா - 24

 
" அம்மா, பழனி தல வரலாறு சொல்லும் உண்மையை புரிந்து கொண்டோம். மிக்க நன்றி. இது போல மற்ற கோவில்களின் தல வரலாறுகள் உணர்த்தும் விஞ்ஞான விளக்கங்களைத் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றோம்.
 நிறைய சொல்லுங்கள் " எனக் கேட்கிறாள் ஒரு மாணவி.

" என் இனிய மாணவச் செல்வங்களே! இதுவரை ஆன்மீக ஆனா, ஆவன்னா என்ற தலைப்பில் அடிப்படை விஷயங்கள் அனைத்தையுமே நன்கு தெளிவாக உணர்ந்துகொண்டீர்கள்.  ஒவ்வொரு கோயிலாக எடுத்துக்கொண்டு அந்த கோயில் புராணம் மற்றும் பெருமைகளை நன்கு ஆராய்ந்து பாருங்கள். நீங்களே புராணங்கள் விளக்கும் தத்துவங்களைப் புரிந்து கொள்வீரகள்" என்கிறார்கள் அம்மா.

" அம்மா, நீங்களே ஒரு ஊர் கதையை சொல்லுங்கள். நாங்கள் உண்மைத் தத்துவத்தைக் கண்டு பிடிக்கின்றோம் " எனக் கேட்கிறாள் ஒரு மாணவி.

" சரி, மதுரையில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்ததாக ஒரு திருவிளையாடல் கதை உங்கள் எல்லோருக்கும் தெரியும் அல்லவா! அதைச் சொல்லி அந்த கதை மூலம் நீங்கள் அறியும் உண்மையையும் சொல்லுங்கள் பார்க்கலாம்" என்கிறார்கள் அம்மா.

ஒரு மாணவி சொல்ல ஆரம்பிக்கின்றாள் -

சிவனின் லீலையால்  வைகையில் வெள்ளம் வந்து கரை உடைந்துவிடுகின்றது.

கரையை சீர் செய்ய வீட்டிற்கு ஒரு இளைஞன் வரவேண்டும் என அரசன் ஆணையிடுகின்றான்.


வந்தி எனும் புட்டு சுட்டு விற்கும் கிழவி தன சார்பாக அனுப்ப ஆள் இல்லாததால் இறைவனை வேண்ட சிவபெருமான் ஓர் இளைஞன் உருவில் அவளிடம் வந்து ' நான் உனக்காக வேலை செய்கின்றேன். எனக்கு கூலியாக உன் புட்டை கொடு' என  கேட்கிறார்.


ஆனால் கிழவியோ ' நான் புட்டு செய்யும்போது உதிரும் புட்டு மாத்திரமே உனக்கு கொடுக்கமுடியும்' என்கிறாள்.


அன்று வந்திகிழவி செய்யும் புட்டு எல்லாமே உதிர்ந்துவிடுகின்றது.

எல்லா புட்டினையும் வயிறு முட்ட சாப்பிட்ட சிவபெருமான் வைகை கரையை அடைக்காமல் ஒரு மரத்தடியில் தூங்குகிறார். 

இதைக் கண்ட அரசன் கோபமுற்று கூலியாளாக வந்த சிவனை பிரம்பால் அடிக்க அந்த அடி பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து உயிர்களின்மீது பட அரசன் அரண்டுபோய் விட்டான்...."


" இந்த  அளவு கதை போதும். இதிலிருந்து நீங்கள் உணரும் தத்துவம் என்ன?" எனக் கேட்கிறார்கள் அம்மா.

" இறைநிலையாக உள்ள சுத்தவெளி இந்த பிரபஞ்சம் முழுதும்  மற்றும் பிரபஞ்சத்தை சூழ்ந்தும் உள்ளது. சுத்தவெளியின்  எந்த ஒரு பகுதியில் ஏற்படும் அதிர்வுகளோ, மாற்றங்களோ அல்லது விளைவுகளோ சுத்தவெளியின் எல்லா இடங்களிலும் உணரப்படும் " என்கிறாள் ஒரு மாணவி.

" அற்புதமாகச் சொன்னாய். சுத்தவெளியை நம் முன்னோர்கள் சிவம் என்ற பெயரில் அழைத்தார்கள். பிறகு மக்களுக்குப் புரிய வைப்பதற்காக அதற்கு சிவன் என்ற உருவம் கொடுத்து பல விஞ்ஞானத் தத்துவங்களை மக்களுக்கு புரிய வைப்பதற்காக இந்த மாதிரி புராணக் கதைகளைச்  சொன்னார்கள். ஆனால் இன்றோ மக்கள் இம்மாதிரி கதைகளில் உள்ள தத்துவத்தை உணராமல் கதையின் சடங்குகளுக்கு முக்கியம் கொடுக்கின்றார்கள். உதாரணமாக பிட்டுக்கு மண் சுமந்த இந்த திருவிளையாடல் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மதுரையில் பண்டிகையாக கொண்டாடப் படுகின்றது. அன்று சிவனுக்கு புட்டு படைத்து வழிபடும் சடங்கு மாத்திரம்தான் நடைபெறுகின்றது. ஆனால் சிவம் எல்லா உயிர்களிலும் இருக்கின்றது  என்ற  இக்கதையின் தத்துவத்தை புரிந்து கொள்பவர்கள் மிகச் சிலரே" என்கிறார்கள் அம்மா.

" ஆன்மீக அடிப்படைகளை தெளிவாக எங்களுக்கு உணர்த்திவிட்டீர்கள். நாங்கள் இப்போது நன்றாக சிந்தித்து தெளிவாக முடிவேடுக்கின்றோம்.
எங்களுக்கு நீங்கள் மேலும் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?"  என ஒரு மாணவி கேட்க 

" என் இனிய மாணவச் செல்வங்களே!  நீங்கள் சிந்தனையில் உயர்ந்துள்ளதைக் கண்டு மிகவும் மகிழ்கின்றேன். என்னுடன் ஒத்துழைத்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் தெரிந்துகொண்ட இந்த ஆன்மீக அடிப்படை எல்லா மக்களுக்கும் போய் சேரவேண்டும். குறிப்பாக மாணவர்களுக்கு தெளிவாக தெரியவேண்டும். இன்று இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர்கள், சுமார் 60 கோடி மக்கள் 30 வயதுக்கு கீழே உள்ள இளைஞர்கள். இவர்கள்தான் எதிர்கால இந்தியாவை வல்லமையாக உருவாக்க வேண்டும். ஆனால் இவர்களின் இன்றைய மனோநிலை சரியான வழிகாட்டுதல் இன்றி இவர்கள் செல்லும் பாதை மிகவும் மோசமாக உள்ளது. இவர்களுக்கு நல்லமுறையில் வழிகாட்டி, ஆக்கத்துறையில் ஈடுபடுத்தி ஊக்கமுடன் உழைத்து உயர என்ன செய்யலாம்?" என அம்மா கேட்கின்றார்கள்.

மாணவிகள் சிந்திக்கின்றனர்.

அடுத்த இதழுடன் இந்த தொடர் நிறைவு பெறுகின்றது.

Wednesday, 21 January 2015

EXCELLENCE......9


The 8 Keys of Excellence 
 Definitions and Descriptions

2. FAILURE LEADS TO SUCCESS – Learn from mistakes
 
View failures as feedback that provides you with the information you need to learn, grow, and succeed.

When we live the Key of Failure Leads to Success we see failures as feedback, we learn from them and make the changes needed to be more successful in the future.

To live this Key successfully we may need to change the way we think about failure. Rather than viewing failure in a negative way where we put ourselves down and think WE are a failure, think of failure as a valuable learning experience. When we look at our mistakes with a view to learning from them, rather than sending ourselves negative messages, we are on the path to success.

We may be reluctant to try different things because we’re afraid of failing. Fear of failure does nothing but keep us in our comfort zone where we stick with the familiar, the “safe” choices where we don’t “risk” another failure. When we step out of our comfort zone—when we’re willing to try something new—that is when we take a step toward success.

The only real failure is not learning from our mistakes. The key to success is to look carefully at what went wrong, change what we did the first time, and try again by applying what we learned.

Tuesday, 20 January 2015

EGO......2





EXCELLENCE......8

 The 8 Keys of Excellence 
 Definitions and Descriptions

1. INTEGRITY – Match behavior with values

Demonstrate your positive personal values in all you do and say. Be sincere and real.

Living in integrity means that everything we say and everything we do are true reflections of what we value, what’s important to us. Think about what your behavior says about you. Does it clearly show others what you value? Do you show up as honest and committed, or dishonest and indifferent? Are you spending your time with the people and activities you value, or is your focus elsewhere?

When we live in integrity we are sincere and true to ourselves—we don’t say or think one thing and do another. People trust and respect us, our relationships are solid, and we feel good about ourselves. Those positive feelings from others and within ourselves reinforce our values and build our reputation and self-esteem, leading us to greater success in all areas of our lives.

Monday, 19 January 2015

EGO......1




POSTER OF THIS WEEK


62nd BIRTHDAY ( EXCEL AWARD PHOTOS )

62ம் பிறந்த நாளான இன்று என் வாழ்வின் பெருமிதமான நேரத்தை இங்கு பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
BHEL நிறுவனத்தின் மிக பெரிய விருதான 
EXCEL AWARD கடந்த 7-1-15 அன்று 
டெல்லியில் நடந்த விழாவில் பெற்றது 
அதுவும் பணி ஓய்வு பெற்ற ஓராண்டுக்குப் பிறகு
பெறுவது உண்மையில் பேரானந்தமே!
இந்த பெருமையை பெற்றோர்களுக்கு, குருவுக்கு, 
மனைவிக்கு, மகனுக்கு,  என்னை ஆளாக்கிய 
அக்கா- அத்தான்  மற்றும் 
குடும்பத்தினர், என் உறவினர்கள், சக ஊழியர்கள், நண்பர்கள்
 ஆன்மீக  பெரியோர்கள், ,அன்பர்கள்  
அனைவருக்கும்  மற்றும்
என்னுள் இருந்து என்னை  வழிநடத்தும் 
எல்லாம்வல்ல இறைநிலைக்கும் 
சமர்ப்பிக்கின்றேன்.
 வாழ்க  வளமுடன்!


யூனியன் அமைச்சர் திரு ஆனந்த் கீதே தங்கப் பதக்கம் அணிவிக்கின்றார் 

அமைச்சருடன்  கை  குலுக்கல் 

அமைச்சரிடம்  விருது  பெறுகின்றேன் 

BHEL  சேர்மன் திரு B P ராவ், ராஜாங்க அமைச்சர் சித்தேஸ்வரா, யூனியன் அமைச்சர் திரு ஆனந்த் கீதே மற்றும் தொழில்துறை செகரெட்டரி திரு ராஜன் கடோச்  சூழ  JP 

பரிசுத் தொகைக்கான செக்குடன் 

TO  SEE  LAST  YEAR  POSTS  CLICK  HERE  &  HERE

Sunday, 18 January 2015

உணவுப் பழக்கம்......4




உணவில் மூன்று வகை 
அறிஞர்கள் சிலர் ஒரு கருத்தைச் சொல்கிறார்கள்.


அதாவது இயற்கையில் விளையும் உணவுப் பொருட்களை மூன்றுவிதமாகப் பிரிக்கிறார்கள்.


முதலாவது மரத்தில் விளையும் காய் கனிகள்.


இரண்டாவது நிலமட்டத்தில் விளையும் தானியங்கள்.


மூன்றாவது நிலத்துக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள்.


இதில் மூன்றாவதான கிழங்கு வகைகள் பன்றிமுதலான விலங்குகளுக்கும் உயிரினங்களுக்குமானது.அவை நிலத்தைப் பறித்துக் கிழங்குகளை உண்டு வாழும் குணமுள்ளவை.


இரண்டாவதான நிலமட்டத்தில் விளையும் தானிய வகைகள் பறவைகளுக்கும் கால்நடைகளுக்குமானவை. பயிரின் முழுப்பகுதிகளை கால்நடைகளும் தானியத்தைப் பறவைகளும் உண்டு வாழக்கூடியவை.


முதலாவதான உயர்ந்த மரங்களில் விளையும் காய் கனிகள்தான் மனிதர்களான நமது உணவு வகையாம்.


ஆராய்ந்து பார்த்தால் கிழங்கு வகைகளை தவிர்க்கும்படி சொல்லப்படுவதும் தானிய உணவைவிடக் காய் கனிகளை அதிகம் உண்ணச் சொல்லப்படுவதும் கிட்டத்தட்டப் பொருத்தமாகத்தான் படுகிறது!


தவிர நமது மூதாதையர்களான ஆதி மனிதர்கள் மரங்களில் வாழ்ந்தவர்கள்தானே! அதுவும் ஏற்புடையதாகத்தான் தெரிகிறது!

Saturday, 17 January 2015

GENIUS.......4




BLISS....1



BACK TO TRICHY...



இரண்டு மறக்கமுடியாத  வாரங்களுக்குப் பிறகு மறுபடியும் திருச்சியில்...


சமுதாயப் பணிகள் தொடர்கின்றன....

Thursday, 15 January 2015

உணவுப் பழக்கம்......3



எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது ?   

கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்;
இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று!

ஆசாரக் கோவை
படுத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது

நின்று கொண்டு சாப்பிடக் கூடாது

வெட்ட வெளியில் இருந்து சாப்பிடக் கூடாது

நல்லா இருக்கிறது என்பதற்காக, நிறைய சாப்பிடக் கூடாது

படுக்கை அறையில் சாப்பிடக் கூடாது

ஒரு முறை இல்லாமல்  நேரம் காலம் பார்க்காமல்
ஒன்றும் சாப்பிடக் கூடாது 


HAPPY. PONGAL



அனைவருக்கும்  எங்கள்  இனிய  பொங்கல்  நல்வாழ்த்துகள்!

வாழ்க வளமுடன்!


சூட்சுமப் பொங்கல்

வெட்டவெளி என்ற பெரும் பானைக்குள்ளே

            வேகுதுபார் அண்டகோடி எனும் அரிசி

அட்டதிக்கும் அறிவாலே துழாவி விட்டேன்

         ஆஹாஹா அதைச் சுவைக்க என்ன இன்பம்

கிட்டிவிட்ட தெந்தனுக்கு இந்தப் பொங்கல்

          கேட்டவர்க் கெல்லாம் தருவேன் தகுதியானால்

தொட்டுத் தான் அதைக் கொடுப்பேன் சூடாறாது

         சுவைக்கச் சுவைக்க இன்பமிகும் சூட்சமப் பொங்கல்

 
-- வேதாத்திரி மகரிஷி

Wednesday, 14 January 2015

உணவுப் பழக்கம்.....2

விருந்தினர், மூத்தோர், பசு, சிறை, பிள்ளை,
இவர்க்கு ஊண் கொடுத்து அல்லால் உண்ணாரே-என்றும்
ஒழுக்கம் பிழையாதவர்.

விருந்தினர், வயதில் மூத்தவர்கள் (அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி), வீட்டில் பசு இருந்தால் அது, வீட்டில் கிளி , புறா போன்ற பறவைகளை வளர்த்தால் அது, சின்ன பிள்ளகைள் - இவர்களுக்கு முதலில் உணவு அளித்த பின் தான் நாம் உணவு உண்ண வேண்டும்.

Tuesday, 13 January 2015

சிந்திக்க ...2

படித்ததில்  பிடித்தது   - -

எனக்கும் என் மனைவிக்கும் பயங்கர சண்டை .....

மாறி மாறி குறை சொல்லிகிட்டோம்...இத நிறுத்த அவர் அவர் மனசில் இருப்பதை எழுதுவதுன்னு முடிவு செஞ்சோம்...
மனைவிக்கு 3 பாயிண்ட்க்கு மேல எழுத முடியல.... நான் 2 page முடிச்சு 3வது page எழுத ஆரம்பிச்சேன் என் மனைவிக்கு செம்ம கோவம் 

நான் என்ன தான் எழுதிருக்கேனு பிடுங்கி பாத்தாங்க
.
.
.
.
.

" I LOVE YOU"

...னு வரிசையா எழுதி இருந்தேன்.

அன்பு அனைத்திலும் மேலானது.

Monday, 12 January 2015

SMILE....235


இது உங்களுக்கும் பிடிக்கும்!

கணக்கு வாத்தியாருக்கு பிடித்தது பாய'சம்'.
அரசியல்வாதிக்கு பிடித்தது 'ஓட்'ஸ் கஞ்சி.
மேஸ்திரிக்கு பிடித்தது பொங்'கல்'
சுட்டிகளுக்கு பிடித்தது சாக்'லேட்'
பால்காரருக்கு பிடித்தது 'நீர்'ஆகாரம்
லாண்டரிக்காருக்கு பிடித்தது 'துவை'யல்
வேலைக்காரிக்கு பிடித்தது 'கூட்டு'
மின்சார ஊழியருக்குப் பிடித்தது பிஸ்'கட்'...
கண்டக்டருக்கு பிடித்தது பீட்'ரூட்'
டெய்லருக்கு பிடித்தது 'கத்தரி'க்காய்
டாக்டருக்கு பிடித்தது பெருங்'காயம்'
ஸ்டேஷன் மாஸ்டருக்கு பிடித்தது 'பச்சை'க் காய்கறி!






Syllabus- 80GB

We study- 80MB

Retains in mind- 80KB

Write in exam- 80Bytes

Result cums in binary digits
i.e....
00
01
10
11

INNOVATION.....19 ( Secrets of Steve Jobs....18)