Showing posts with label சிந்திக்க. Show all posts
Showing posts with label சிந்திக்க. Show all posts

Monday, 26 January 2015

சிந்திக்க ...3

இளந்துறவி ஒருவர் தியானம் செய்யஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.அவருக்குக் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்வதில் விருப்பம் இல்லை.தன்  மீது அவருக்கு அளவு கடந்த நம்பிக்கை.எனவே கண்ணைத் திறந்து கொண்டே தியானம் செய்ய ஆரம்பித்தார்.மாலை வேளை.சுகமான காற்று வீசியது.அப்போது ஜல்ஜல் என்று ஒரு சப்தம். ஒரு அழகிய பெண் நீர் எடுக்க அந்தப் பக்கம் சென்றாள்.அவளின் அழகு துறவியை சலனப் படுத்தியது.அதனால் அடுத்த நாள் கண்ணைக் கட்டிக் கொண்டு தியானம் செய்தார்.மாலை வந்தது. கன்னியும்  வந்தாள் .சலங்கை ஒலி அவருடைய கவனத்தை மிகக் கவர்ந்தது.அவரால் தியானத்தில் ஒன்ற முடியவில்லை.மறுநாள் கண்ணையும் காதையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு  தியானம் செய்தார்.மாலை வந்தது.பூவையும் வந்தாள்.கூடவே அவள் வைத்திருந்த மல்லிகைப் பூவின் வாசமும் வந்தது.அந்த மனம் அவரை எங்கோ கொண்டு சென்றது.அடுத்த நாள் கண், காது, மூக்கு எதுவும் தெரியாமல் கட்டிக் கொண்டு தியானத்தை மிக உறுதியுடன் ஆரம்பித்தார்.மாலையும் வந்தது.கன்னி வரும் நேரமும் வந்தது.ஆனால் இன்னும் கன்னி வரவில்லையே.துறவியின் மனம் ஏங்க ஆரம்பித்தது

Tuesday, 13 January 2015

சிந்திக்க ...2

படித்ததில்  பிடித்தது   - -

எனக்கும் என் மனைவிக்கும் பயங்கர சண்டை .....

மாறி மாறி குறை சொல்லிகிட்டோம்...இத நிறுத்த அவர் அவர் மனசில் இருப்பதை எழுதுவதுன்னு முடிவு செஞ்சோம்...
மனைவிக்கு 3 பாயிண்ட்க்கு மேல எழுத முடியல.... நான் 2 page முடிச்சு 3வது page எழுத ஆரம்பிச்சேன் என் மனைவிக்கு செம்ம கோவம் 

நான் என்ன தான் எழுதிருக்கேனு பிடுங்கி பாத்தாங்க
.
.
.
.
.

" I LOVE YOU"

...னு வரிசையா எழுதி இருந்தேன்.

அன்பு அனைத்திலும் மேலானது.

Wednesday, 31 December 2014

சிந்திக்க ...1


SPACE



ஒரு புள்ளிக்கு எந்தத் திக்கிலும் அளவு இல்லை. 

அது நேராக நகர்ந்தால் நேர்க்கோடு. நேர்க்கோடு 

மேல் நோக்கி நகர்ந்தால் அது பரப்பளவு. 

பரப்பளவு தனக்கு தனக்கு செங்குத்தாக நகர்ந்தால் அது கன அளவு ,

 கன அளவு நகர்ந்து கொண்டே போனால்,' SPACE' கிடைக்கும்.

 இதில் என்ன தெரிகிறது ? ஒரு புள்ளி தன் அசைவினால் 'SPACE' ஐ நிறுவி விட்டது. 

" கடவுள் இல்லை என்பவர்கள் புள்ளியுடன் நின்று விடுகிறார்கள்.

'உண்டு' என்பவர்களுக்குத்தான் உலகில் ' 'SPACE' கிடைக்கிறது,