Wednesday, 27 November 2024

சுஜாதா பதில்கள்

வீட்டில் எந்தப் பானையில் கருவாடு இருக்கு, எந்த உறியில் வெண்ணெய் தொங்குது என்று மோப்பம் பிடித்துக் கவிழ்ப்பதில் பூனைதான் சிறந்து விளங்குகிறது. ஆனால், போலீஸ்காரர்கள் மோப்பம் பிடிக்கப் பூனையை விட்டுவிட்டு நாயைப் பயன்படுத்துவது ஏன்? 

பூனை, நாய்க்கெல்லாம் நம்மைவிட இரண்டு லட்சம் மடங்கு அதிக மோப்பசக்தி; நம்மைவிட ஐம்பது மடங்கு அதிக அளவில் ‘ரிசெப்டர்’ செல்கள் உள்ளன. நாயின் மோப்பசக்தி ரொம்ப நுட்பமானது. தோசை, வடை, அடையெல்லாம் அதற்கு வித்தியாசம் தெரியும். சூர்யாவில் வாங்கியதா, கற்பகாம்பாள் மெஸ்ஸா… இல்லை, சரவண பவனா என்பதைக்கூட எங்கள் கிவி சொல்லி விடுவான். பூனை சொன்ன பேச்சு கேட்காது. நாய் கேட்கும். மற்றபடி நீங்கள் சொல்வதுபோல் மோப்பசக்தி இரண்டுக்குமே அதிகம்தான்.  

No comments:

Post a Comment