கேள்வி: லால்குடி ஜெயராமனு்க்கும், லால்குடியில் காவேரிக்
கரையில் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் ஏதேனும்
ஒற்றுமை உண்டா?
பதில்: உண்டே. இவர் ஸ்வரம் பாடுகிறார்;
அவர் உரம் போடுகிறார். இவர் பண் மூலம் பண்படுத்துவது
மனதை; அவர் மண் மூலம் பண்படுத்துவது நிலத்தை.
மொத்தத்தில் இருவருமே வயலி’ன் மேன்மைக்காகப் பாடுபடுகிறார்கள்.*
கேள்வி: சமையலில் மனைவிக்கு உதவி செய்வீர்களா?
பதில்: சமையல் கலை இரண்டு பகுதிகளைக் கொண்டது.
ஒன்று சமைப்பது. இன்னொன்று சாப்பிடுவது.
நான் இரண்டாவது பகுதியில் உதவுவதுண்டு.
கேள்வி: நீங்கள் மரபுக் கவிதைகள் எழுதுவது உண்டா?
உங்களுடைய ஏதாவது ஒரு மரபுக் கவிதை ப்ளீஸ்!
பதில்: உண்டு. எப்போதாவது.
‘வேண்டாம் வரதட்சணை’ என்ற ஈற்றடிக்கு
முன்பு தினமணி கதிரில் ஒரு நேரிசை வெண்பா
எழுதினேன். அது-
பத்து பவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்..
முத்திலே சின்னதாய் மூக்குத்தி – மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட்சிணை!
கேள்வி: ‘சிங்களத் தமிழ்’, ‘சிங்கார சென்னைத் தமிழ்’?
பதில்: இலங்கைத் தமிழர்களுடன் கதைக்கும் போது
அவர்கள் பாவிக்கும் சில தமிழ் வார்த்தைகள்
சொக்கிலேற்றுகளாய்த் தித்திக்கும் என்று நம்மால்
அவதானிக்க முடிகிறது. கனகாலமாய் அவற்றைப்
படித்து வருவதால் சென்னைத் தமிழைப் பொறுத்தவரை
அதிக அளவில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும்
வட்டாரத் தமிழ் அதுதான்.
No comments:
Post a Comment