இந்தியர்களைவிட அறிவாளிகள் யாருமில்லை.
அதேசமயம் இந்தியர்களைப்போல் முட்டாள்களும் யாரும் இல்லை.
நீங்க ரொம்ப சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
சீனாகாரன் இந்தியாவுக்கு ஒரு பொருளை உற்பத்தி செய்கிறான்.
அதேபோன்று மற்றொரு பொருளை அமெரிக்காவுக்கு தனியாக உற்பத்தி செய்கிறான்.
அமெரிக்காவில் ஒரு பொருளை விற்பனை செய்யும்போது சீனாவானது நல்ல தரமான பொருளை தயாரித்து அதை விற்கிறது.
இதனால் அமெரிக்கா சீனாவின் மிகப்பெரிய நுகர்வோராக உள்ளது.
ஓர் அமெரிக்கர் சீனாவோ அல்லது பிற எந்த நாட்டின் பொருளாக இருந்தாலும் சரி..அதன் தரம் என்ன?
அந்தப் பொருளின் தன்மை என்ன? என்பனவற்றை ஆராய்ந்து வாங்குகிறான்.
ஆனால் அதேபோன்ற ஒருபொருளை அதே சீனர் இந்தியாவில் விற்பனை செய்யும்போது நன்கு பளபளப்பாக, மிகத் தெளிவான விளம்பரம் என பிறந்தநாளில் நமது பிள்ளைகளுக்கு புதிய ஆடைகளை வாங்கி அழகு பார்ப்பது போல் அழகுபடுத்தி, பிரகாசமாக வழங்குகிறான்.
காரணம், இந்தியர்களைப் பொறுத்தவரை ஒரு பொருள் தரமானதா அல்லது தரமற்றதா என்பது முக்கியமல்ல..
இந்தியர்களைப் பொறுத்தவரை பளபளப்பும் குறைவான விலையுமே முக்கியம்.
ஒரு பொருள் நன்கு பளபளப்பாக இருந்தால் இந்தியர்களிடம் எளிமையாக விற்றுவிடலாம். அந்த அளவுக்கு இந்தியர்கள் ஏமாளிகள் என்று அவன் நினைக்கிறான்.
நீங்கள் சிந்தித்து பாருங்கள்.
பொருளின் விலையைப் பார்த்து வாங்குகிறீர்களா அல்லது அதன் தரத்தைப் பார்த்து வாங்குகிறீர்களா??
ஒரு விற்பனையகத்தில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அங்கு இந்தியப் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். ஒன்றும் பெரிய ஆடம்பரமின்றி எளிமையாக இருக்கும். ஆனால் அது நமக்கு பிடிக்காது.
சீனப் பொருட்கள் விலை குறைவு; நன்றாக கண்ணில்படும்படியான தெளிவு. இதை வைத்தே நம் தலையில் நம் கையாலேயே மிளகாய் அரைக்கிறான்.
நாமும் அது தெரியாமல் வாங்கி ஏமாறுகிறோம்.
அந்த ஏமாளித்தனமும், பளபளப்பும் தான் சீனாவின் பலம்.
இதனால்தான் அவன் மிகவும் தரமற்ற பொருளை மிகச் சாதாரணமாக இந்தியாவில் விற்கிறான்.
தனி ஒருவன் திரைப்படத்தில் கூறியதுபோல், நமது சின்ன சின்ன அலட்சியங்கள்தான் அவனது மூலதனம்.
நமது அலட்சியங்களில் அவன் முதலீடு செய்து அதன்மூலம் கோடி கோடியாக பெறுகிறான்.
நாம் அது தெரியாமல் அதை வாங்கி பற்கள் தெரியும்படி செல்பி எடுத்துக் கொள்கிறோம்.
- இப்படி இந்தியர்கள் விலையே முக்கியம்.
- பொருளின் தரம் என்ன?
- அதனால் என்ன பலன்?
- அது தேவையா தேவையில்லையா?
- தேவை என்றால் ஏன் தேவை?
- தேவையில்லை என்றால் ஏன் தேவையில்லை?
என்று சிந்திக்காத வரை அவனுக்கு எப்போதும் இந்தியர்கள் ஏமாளிகள்..
என்ன செய்ய ஏமாளிகள் உள்ளவரை ஏமாற்றுபவன் இருக்கத்தானே செய்வான்?
No comments:
Post a Comment