எங்ககிட்ட வாங்க எல்லா சிட்டுவேசனுக்கும் பாட்டு இருக்கு!
MAN : ஹலோ, சன் மியூசிக்கா?
ANCHOR : ஆமா சார்.உங்க மனசுல உள்ளதை எங்ககிட்ட பகிர்ந்துகொள்கிற நிகழ்ச்சி சார் இது.
MAN : ஓ... அப்படியா மேடம்.
ANCHOR : ஆமா சார்.அப்பறம், நீங்க சொல்லுற SONGஐ யாருக்கு டெடிகேட் பண்ண சொல்றீங்களோ, நாங்க அவங்களுக்காக ஒளிபரப்புவோம் சார்.
MAN : சரி மேடம். நான் ஒரு விசயத்தை உங்க நிகழ்ச்சியில ஷேர் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்.
ANCHOR : தாராலமா சொல்லுங்க சார்.
MAN : அதாவது இன்னைக்கி காலைல ஒரு பர்ஸ் கீழே கிடந்துச்சுங்க. அத எடுத்து திறந்து பாத்தேன். பர்ஸுக்கு உள்ளே பத்தாயிரம் பணம், கிரெடிட் கார்டு,கோல்டு காய்ன் இருந்துச்சு மேடம்.
ANCHOR : அப்படியா சார். அப்பறம் என்னாச்சு?
MAN : அதுல அட்ரஸ் இருந்துச்சு மேடம் கீழ போன் நம்பரும் இருந்துச்சு மேடம்.
ANCHOR : சார் நீங்க ரெம்ப தங்கமான மனசு உள்ளவர் சார்...அப்பறம் அந்த பர்ஸ அவருக்கு அனுப்பிட்டிங்களா?
MAN : இல்ல மேடம், அவருக்காக நான் ஒரு பாட்டு டெடிகேட் பண்ணனும்.
"நன்றி சொல்ல உனக்கு, வார்த்தை இல்லை எனக்கு" இந்த பாட்ட அவருக்கு போடுங்க. நான் கிளம்புறேன்.
ANCHOR : 😳.( மைண்ட் வாய்ஸ் - அட சண்டாலா )
( காட்சி மாறுகிறது )
அந்த பர்ஸை தொலைத்தவர் தேடி அலைந்து அருகில் உள்ள டீக்கடையில் சலிப்புடன் ஆற்றாமையுடன் அமர்கையில்
இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார்.
உடனே அவர் தன் கைப்பேசியை எடுத்து அடுத்த பாடலை ஆங்கரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு கேட்கிறார்.... நான் தான் மேடம் இதுக்கு முன்னாடி பேசினாரே பர்ஸ்
தொலைத்த அவர் சொன்ன ஆள்.
ANCHOR: நீங்க என்ன பாட்டு யாருக்கு டெடிகேட் பண்றீங்க சார்?
ஆமா மேடம் டங்காமாரி ஊதாரி புட்டுக்குவே நீ நாறி பாட்டு போடுங்க மேடம்....
சாபம் தான் கொடுக்க முடியும் வேறு என்ன செய்ய!

No comments:
Post a Comment