45வயசுக்குள்ள கத்துக்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் மொத்தம் 5 இருக்கு. இதுல கடைசி பாடத்தை நிறைய பேர் 60 வயசு வரைக்கும் கூட புரிஞ்சுக்கறதே இல்ல. ஒண்ணு வாய்ப்புக்காகக் காத்திருக்காதீங்க. புத்திசாலித்தனமா நீங்களே உங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்க. இரண்டாவது உண்மையான சந்தோஷம் சுதந்திரத்துல இருக்கு.
அந்த சுதந்திரம் தைரியத்துல இருந்துதான் வரும். அடுத்தவங்களப் பத்தி யோசிக்காம துணிஞ்சி முடிவெடுக்கும்போது தான் வாழ்க்கையை ரசிக்க முடியும். மூணாவது நீங்க அடைய நினைக்கிற இலக்கை இன்னும் அடையாதவங்கக்கிட்ட போய் அறிவுரையாகக் கேட்காதீங்க. அவங்க அனுபவம் உங்க பாதைக்கு உதவாது. சரியான வழிகாட்டியைத் தேர்ந்தெடுங்க.
நாலாவது வாழ்க்கையில் போராட்டம் நிரந்தரம். அதை எதிர்த்துப் போராடாம அதையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏத்துக்கிட்டு வாழப்பழகிக்கோங்க. ஐந்தாவது யாரையும் அவசரப்பட்டு நம்பாதீங்க. போகப் போக அதாவது காலம் போகப் போக ஒவ்வொருத்தரும் அவங்க உண்மையான முகத்தைக் கண்டிப்பாக் காட்டுவாங்க. அவ்ளோதாங்க.
No comments:
Post a Comment