Thursday, 12 February 2026

ஒரு குடும்ப கணவனா வாழ்வது....

ஒரு குடும்ப கணவனா வாழ்வது எம்புட்டு பிரச்சனையை சந்திக்க வேண்டி இருக்கு !

சனிக்கிழமை சுண்டல் குழம்புல கொஞ்சம் லைட்டா உப்பு அதிகமாகிடுச்சு. பேசாம சாப்டு கம்முனு இருந்திருக்கணும். சாப்டுகிட்டே ஆபீஸ்லருந்து வூட்டம்மாவுக்கு போன் பண்ணி கொஞ்சம் ஓவராவே சவுண்டு வுட்டுட்டேன்....

இன்னிக்கி சாம்பார், வாழைத்தண்டு, உருளை வறுவல், மல்லித்துவையல் எல்லாமே செம டேஸ்ட்....

கரெக்ட்டா லன்ச் டைம்ல போன் பண்ணி, "சாப்டியா....?" னு கேட்டுச்சு எங்கூட்டு அம்மணி

"சாப்டுகிட்டு இருக்கேன்மா"

"நல்லாருக்கா...?"

"செமையாருக்கு. ஏன்..?"

"இல்ல... அன்னிக்கி உப்பு அதிகம்ன ஒடனே போன் பண்ணி கத்த தெரிஞ்சுச்சில்ல... இன்னிக்கி எல்லாமே நல்லாருக்குதுல்ல... ஒரு போன் பண்ணி பாராட்ட வாய் வரலியே... ஏன்...?"

"சாப்டுகிட்டு இருக்கேன்மா..."

"அன்னிக்கி மட்டும் சாப்டுகிட்டு இருக்கும் போதே போன் பண்ண தெரிஞ்சுச்சில்ல.... இன்னிக்கி முடிலயா... ஆங்..."

"சாப்டுட்டு மொத்தமா பாரட்டலாம்னு..."

"ஒரு ஈர வெங்காயமும் வேணாம்... போனை வை... வூட்டுக்கு வா இருக்கு ஒனக்கு..." னுட்டு கோவமா போனை கட் பண்ணிருச்சு...

ஈவினிங் வூட்டுக்கு போனா என்னவெல்லாம் சந்திக்க வேண்டியதா இருக்குமோ தெர்லயே இறைவா...!!!!!!!!!!!


No comments:

Post a Comment