தாத்தாவிடம் பேரன் கேட்டான்! " தாத்தா நான் வாழ்க்கையில் ஒரு சிறந்த மனிதனாக வருவதற்கு எனக்கு ஒரு நல்ல வழி கற்று கொடுங்கள்! " என்று கேட்டான்.
அதற்கு தாத்தா சொன்னார் " உலகத்தில் இருக்கும் அத்தனை பேரில் நீ எப்பொழுதும் அந்த ஒருவனை உன் போட்டியாளராக தேர்ந்து எடுத்து கொள்ள வேண்டும்! அவன் தான் எப்பொழுதும் உன் போட்டியாளராக இருக்க வேண்டும் !"
அதற்கு அந்த சிறுவன் அப்படியா இந்த உலகில் யார் அந்த போட்டியாளர் சொல்லுங்க! என்றான்!
அதற்கு தாத்தா சொன்னார் நீயே சொல் பாக்கலாம்! என்றார்!
என் அப்பா !
இல்லை!
என் அம்மா!
இல்லை!
என் அண்ணன் !
இல்லை!
என்னுடைய நண்பன் !
இல்லை !
என்னுடைய ஆசிரியர்!
இல்லை!
தெரியலை தாத்தா நீங்களே சொல்லுங்க பிளீஸ்! என்றான்!
தாத்தா சொன்னார்,
அது நீ தான்! நீ மட்டும் தான் உன் போட்டியாளர்! இதை நீ தெரிந்து கொண்டால் போதும் உலகை ஜெயித்து விடலாம்.
வாழ்க்கை ஒரு பெரிய போட்டி ஆனால் அது ஓட்டப் பந்தயம் இல்லை! வாழ்க்கை ஒரு இனிய பயணம். அந்த பயணம் உங்களை தேடி தெரிந்து கொள்வதில் முடிகிறது. நீங்கள் அடுத்தவரை போட்டியாளராக தேர்ந்து எடுத்து போட்டி போட்டீர்கள் என்றால் விரைவில் துவண்டு விடுவீர்கள். அவர்களை விட சிறப்பாக செய்ய முடியவில்லை என்று வருத்தப்படுவீர்கள்! அது தேவை இல்லாத மன கசப்பு, போட்டி, பொறாமையை ஏற்படுத்தும்.
ஆனால் நீங்கள் உங்களையே போட்டியாளராக எடுத்து கொண்டால் நீங்கள் உங்களை செதுக்கி கொள்ள வாய்ப்பு அமையும். அது நல்ல வெற்றியை அடைய உதவும்.
No comments:
Post a Comment