Monday, 4 May 2026

மகரிஷி அவர்களுடன்.......29

மாலா ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் ஆழியார் சென்று மஹரிஷியைச் சந்தித்து உரையாடிவிட்டு வருவது வழக்கம். சிலமுறைதான் நான் அவளோடு கூடச் சென்றிருக்கின்றேன் ( அலுவல் வேலை காரணமாக செல்லமுடிவதில்லை }. மாலாவிற்கு மஹரிஷியோடு பேசி பெற்ற / கற்ற அனுபவங்கள் ஏராளம். அவற்றில் எனக்குத் தெரிந்தவற்றை அவ்வப்போது பதிவு செய்கின்றேன்.



ஆழியாரில் ஆறு மாத குருகுல ஆசிரியர் பயிற்சிகள் நடந்துவந்தன. ஒவ்வொரு batch மாணவர்களுக்கு மாலாவும், நானும் சில வகுப்புகள் எடுப்போம். தமிழ் தெரியாத வேறு மாநில மற்றும் அயல்நாட்டு அன்பர்களுக்காக ஆங்கிலத்தில் ஒரு batch ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் டெல்லி சென்றுவிட்டபடியால் மாலா மாத்திரம் வகுப்புகள் எடுக்க ஆழியார் சென்றிருந்தாள். அவளுக்கு " Vethathiri Model of Universe " என்ற தலைப்பில் வகுப்பு எடுக்கச் சொல்லிவிட்டார்கள். இந்த தலைப்பில் தமிழில் கூட அவள் வகுப்பு எடுத்ததில்லை. இப்போது ஆங்கிலத்தில் எடுத்தாக வேண்டும். டெல்லியிலிருந்த எனக்கு phone செய்து விவரங்கள் கேட்டாள். எனக்குத் தெரிந்ததை ஆங்கிலத்தில் சொன்னேன். அவளுக்குத் திருப்தியாகவே இல்லை. இரவு முழுதும் பலமுறை படித்தும், எழுதியும் அவளுக்கு நல்ல முறையில் வகுப்பு எடுப்பேனா என்ற சந்தேகமும் வந்து விட்டது. வகுப்பு அடுத்த நாள் மதியம் 3 மணியிலிருந்து 5 மணி வரை.

காலை நேரே மகரிஷியிடம் சென்று " கரண்டி பிடிக்கின்ற கையாலே என்னை ஆங்கிலத்தில் க்ளாஸ் எடுக்கச் சொல்கிறீர்களே ? எப்படி ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது என்றே தெரியவில்லை " என புலம்பியிருக்கின்றாள். மகரிஷி அவர்கள் Universe பற்றி அவர் ஏற்கனவே எழுதியிருந்த ஆங்கிலக் கட்டுரை ஒன்றினைக் கொடுத்து அதில் Point no 1, 2, 3 என இலக்கங்களிட்டு இந்த முறையில் சொல்லிக்கொடு " என அரை மணி நேரம் அவளுக்கு வகுப்பு எடுத்திருக்கின்றார்கள்.

மகரிஷி கொடுத்த தைரியத்தில் மிக, மிக சிறப்பாக ஆங்கிலத்தில் அந்த வகுப்பினை நடத்தி முடித்திருக்கின்றாள். மூத்த பேராசிரியர்கள் அவளை மிகவும் பாராட்டியதாகச் சொன்னாள். அந்த batchலிருந்த கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ் என்ற மாணவன் மாலாவிடம் வந்து ' மிக கஷ்டமான ஒரு subjectடினை எல்லோருக்கும் ஈசியாக புரியும் விதத்தில் நடத்திவிட்டீர்கள். நான் உங்களை மறக்க மாட்டேன் " எனக் கூறி மாலாவிடம் வீட்டு முகவரி பெற்றுக்கொண்டான்.

எல்லா பெருமையும் மகரிஷிக்கே என்ற உணர்வில் மறுபடியும் மகரிஷி அவர்களை சந்தித்து தான் பெற்ற வாழ்த்துக்களை மகரிஷிக்கு சமர்ப்பணம் செய்து நன்றி கூறினாள். மகரிஷி அவர்கள் மாலாவிடம் " இந்த subject ல் நீ ஆய்வு செய்து Ph D வாங்க வேண்டும் " என வாழ்த்தினார்கள். ஆனால் அந்த தலைப்பினை நான் எடுத்து ஆய்வு செய்து Ph D பட்டம் வாங்கியது தனிக்கதை.

மாலா Ph D க்கு எடுத்துக்கொண்ட தலைப்பு " Epigenetic Experiences from Vethathiri Maharishi's Spiritual Practices ". Swiss விஞ்ஞானி ஒருவருடன் இணைந்து ஆய்வினைத் துவக்கியிருந்தாள். இறைநிலையோ வேறு திட்டம் தீட்டி மாலாவினை தன்னுடன் இணைத்துக் கொண்டது.



திருச்சி வந்த மாலாவிற்கு ராஜேஷ் என்ற அந்த கேரள மாணவன் கீழ்கண்ட வாழ்த்து மடலை அனுப்பியிருந்தான்.

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரிய தினத்தன்று இது போன்ற வாழ்த்துக்கள் நிறைய வரும்.



 

No comments:

Post a Comment