வணக்கம் சார்! நல்லா இருக்கீங்களா!
இருக்கேன்! ஆமா நீ யாரு!
என்ன சார் அதுக்குள்ள மறந்து விட்டீங்க! நேற்று தான் உங்க வீட்டுக்கு திருட வந்தேன்ல!
அட சண்டாளா எங்க ஆத்துக்கு திருட வந்ததும் இல்லாமல் ! எனக்கு வணக்கம் வேற வெட்கம் இல்லாமல் சொல்கிறாய்!
சார் ! சும்மா அப்படி சொல்லாதீங்க! உங்க வீட்டில் இருந்து நான் எதுவும் திருட வில்லையே!
பின்ன என் பெஞ்சாதி தான் உன்னை திட்டி தீர்த்து துரத்தி விட்டாளே ! அப்புறம் எந்த முகத்தை வைத்து கொண்டு என்னை பார்க்க வருகிறாய் என்று சொல்ல!
அதற்கு திருடன் போங்க சார் ! அஞ்சு நிமிடம் உன் பெண்டாட்டி திட்டுக்கே திருட வந்த நான் திருடாமல் போய் விட்டேன்! நான் பரவாயில்லை! நீ ஆயுள் முழுதும் திட்டு வாங்கி கொண்டு இருக்கிறாய் ! ரொம்ப பாவமாக இருக்கிறது அதான் கொஞ்சம் நலம் விசாரித்து போகலாம் என்று வந்தேன்!
No comments:
Post a Comment