Showing posts with label Old age. Show all posts
Showing posts with label Old age. Show all posts

Wednesday, 29 April 2026

ஓய்வு பெற்ற ஒவ்வொருவரின் வாழ்விலும் மூன்று கட்டங்கள் உள்ளன

 ஓய்வு பெற்ற ஒவ்வொருவரின் வாழ்விலும் மூன்று கட்டங்கள் உள்ளன

அவை:

கட்டம் 1 – வயது 58 முதல் 64 வரை

கட்டம் 2 – வயது 65 முதல் 71 வரை

கட்டம் 3 – வயது 72 முதல் 77+ வரை

கட்டம் 1 – வயது 58+

இந்தக் காலகட்டத்தில், உங்கள் பணியிடம் உங்களை விட்டு விலகத் தொடங்கும். உங்கள் பணி வாழ்வில் நீங்கள் எவ்வளவு வெற்றிகரமாகவோ அல்லது சக்திவாய்ந்தவராகவோ இருந்திருந்தாலும், இப்போது நீங்கள் ஒரு சாதாரண நபராகவே பார்க்கப்படுவீர்கள்.

ஆகவே, உங்கள் கடந்தகாலப் பதவியின் பெருமையையோ அல்லது அந்த மனப்பான்மையையோ பற்றிக்கொள்ளாதீர்கள்.

கட்டம் 2 – வயது 65 முதல் 71 வரை

இந்த வயதில், சமூகம் மெதுவாக உங்களை விட்டு விலகத் தொடங்கும். நீங்கள் பழைய சக ஊழியர்களை அடிக்கடி சந்திக்க மாட்டீர்கள், மேலும் பணி நண்பர்களும் குறைந்துவிடுவார்கள்.

உங்கள் பழைய பணியிடத்தைச் சேர்ந்த பலருக்கு இப்போது உங்களை அடையாளம் கூடத் தெரியாமல் போகலாம்.

“நான் அங்கே இருந்தேன்” அல்லது “நான் அதைச் செய்தேன்” போன்ற விஷயங்களைக் கூறாதீர்கள்,

ஏனென்றால் புதிய தலைமுறைக்கு உங்களைத் தெரியாது—அதற்காக நீங்கள் வருத்தப்படத் தேவையில்லை.

நிலை 3 – வயது 72 முதல் 77+

இந்த நிலையில், குடும்பத்தினர் கூட மெதுவாக விலகிச் செல்லத் தொடங்குவார்கள்.

பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் தங்கள் சொந்த வாழ்க்கையில் மும்முரமாக இருப்பதால், உங்கள் பெரும்பாலான நேரத்தை உங்கள் துணையுடனோ அல்லது தனியாகவோ செலவிட நேரிடலாம்.

அவர்கள் எப்போதாவது வந்து பார்த்தால், அதை அவர்களின் அன்பின் வெளிப்பாடாகக் கருதுங்கள்.

அவர்கள் அடிக்கடி வராததற்காக அவர்களைக் குறை சொல்லாதீர்கள்—அவர்கள் தங்கள் சொந்தப் பொறுப்புகளில் மும்முரமாக இருக்கிறார்கள்.

மேலும்… 77 வயதிற்குப் பிறகு, இந்தப் பூமி கூட உங்களை விட்டுச் செல்லத் தயாராக இருப்பது போல் தோன்றும்.

இது இயற்கையின் விதி, சக்தியின் சமநிலை. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. வாழ்க்கையின் திரை எந்த நேரத்திலும் விழலாம்.

அந்த நேரத்தில், வருத்தப்படவோ அல்லது வருந்தவோ வேண்டாம். இது இயற்கையான சுழற்சி மற்றும் வாழ்க்கையின் முடிவு. அனைவரும் இந்தப் பாதையைக் கடந்து வந்துள்ளனர், மீதமுள்ளவர்களும் இதைக் கடந்து செல்வார்கள்.

ஆகவே…

உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை, உங்கள் வாழ்வின் எஞ்சிய நாட்களை முழுமையாக அனுபவியுங்கள்.

உங்களுக்குப் பிடித்ததை மகிழ்ச்சியாக உண்ணுங்கள்.

நீங்கள் விரும்புவதை உற்சாகத்துடன் செய்யுங்கள். விளையாடுங்கள், வாழுங்கள், அனுபவியுங்கள்… மேலும் மகிழ்ச்சியாக இருங்கள்.

அன்பான மூத்த குடிமக்களான நண்பர்களே!

உங்கள் நண்பர்களை அடிக்கடி சந்தியுங்கள். தொலைபேசியில் தொடர்பில் இருங்கள். பழைய நினைவுகளை அசைத்துப் பார்த்து மகிழுங்கள்.

ஏனென்றால்—இந்த வாழ்க்கை ஒருமுறைதான் வரும்.

எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.

மேலே உள்ள கட்டுரை, பெயர் தெரியாத ஒரு எழுத்தாளரால் அழகாக எழுதப்பட்டுள்ளது. அது ஒரு கடுமையான உண்மையை வெளிப்படுத்துகிறது.

Thursday, 24 July 2025

முதியோர்கள்

தினமும் ஒரு இளைஞன், அதிகாலை வேளையில் தினசரி பேப்பர் போடும் போது ஒரு வீட்டில் அதற்காக ஒரு போஸ்ட் பாக்ஸ் போல ஒரு பெட்டி காம்பவுண்ட் கேட்டில் இருக்கும். பேப்பர் போடும் பையனும் தினமும் அதிலேயே பேப்பர் போட்டுக் கொண்டு வந்திருந்தான்.

திடீரென ஒரு நாள் அந்த பெட்டியைக் காணவில்லை, காலிங் பெல்லை அழுத்தி பார்த்த போது ஒரு வயோதிகர். எண்பது வயதிருக்கும். மெதுவாக

பெரியவர் வந்து கதவை திறந்தார்

இளைஞனும் அவரிடம், "வாசலில் இருந்த பாக்ஸ் எங்கே ஐயா " என்று கேட்டான் .. பெரியவரோ, "தம்பி நான் தான் அந்த பெட்டியை நேற்று எடுத்து விட்டேன். நீ தினமும் என்னை அழைத்து பேப்பரை என் கையிலேயே கொடுத்து விடு" என்றார்.

இளைஞனோ ! "ஐயா அது உங்களுக்கும் நேரம் எடுத்து கொள்ளும், எனக்கும் நேரம் அதிகம் செலவாகும், காலையிலே பல இடங்களுக்கு சென்று பேப்பர் போடுவதால் அதில் எனக்கு நேரம் கூடுதலாக செலவாகும், ஆகவே நீங்கள் மறுபடியும் அந்த பெட்டியை இருந்த இடத்திலேயே வைத்தால்

நன்றாக இருக்கும்" என்றான்.

பெரியவரோ " தம்பி, பரவாயில்லை... நீ என்னை அழைத்து கையில் பேப்பர் கொடுத்து விட்டு போ வேண்டுமென்றால் நான் கூடுதலாக 500 ரூபாய் ஒவ்வொரு மாதமும் அதிகம் தருகின்றேன்" என்றார்.

இளைஞனுக்குஒன்றும் புரியவில்லை !

அவரிடமே காரணத்தைக் கேட்டான்.

அதற்கு பெரியவர், "தம்பி சமீபத்தில் என்னுடைய மனைவி காலமாகி விட்டாள்.

நான் தனியாவே இருக்கின்றேன். எனது பிள்ளைகளெல்லாம் வெளிநாட்டில் இருக்கின்றார்கள். என் மனைவி நெடு நாட்களாக மரணபடுக்கையில் நோயாளியாகவே இருந்து இறந்து போனாள்.

நான் பெற்று வளர்த்த பிள்ளைகளெல்லாம் அவள் நோயாக இருந்தபோதே கொஞ்சம் கொஞ்சமாக போனில் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். என் மனைவியின் மரணத்திற்கு கூட யாரும் வரவில்லை.

நான் கஷ்டப் பட்டு வளர்த்த பிள்ளைகளுக்கும் நான் பாரமாகி விட்டேன்.

நீயாவது தினமும் வந்து என்னை அழைத்து பேப்பர் தந்தால் நான் இன்னமும் உயிரோடு தான் இருக்கின்றேன் என்று அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கும் புரியும் .

யாரெல்லாம் எனது நெருங்கிய சொந்த உறவுகள் என நினைத்தேனோ அவர்கள் எல்லாருமே துக்கம் விசாரித்ததோடு கடமைக்கு என வந்து போனார்கள்,

ஆனால் யாரெல்லாம் வரவேக்கூடாது என நினைத்தேனோ அந்த அக்கம் பக்கத்தினர் தான் என் மனைவியின் இறுதி சடங்கில் இறுதி அடக்கம் வரையில் எந்த பலனும் எதிர்பாராமல் இருந்து உதவினர், இப்போது நானும் வயோதிகன் என்பதால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூட என்னோடு பாசத்தோடு ஸ்நேகம் வைத்து கொள்வதில்லை. காரணம், பணம் அந்தஸ்து உயர்ந்த நிலையில், நான் இருந்தபோது வலிய வந்து அன்பாக உறவு கொண்டாடிய அந்த நல்ல உள்ளங்களை மதிக்கத் தெரியாமல் தடுத்த என்னால் எந்த விதமான நன்மையும் வராது என்றும் தான் அவர்களும் என்னை தொடர்பு கொள்வதில்லை ...

ஒரு வேளை நீ பேப்பர் போட தினமும் என்னை அழைக்கும்போது, நான் வரவில்லை என்றால் நான் அன்று இறந்து விட்டேன் என தீர்மானித்து விடு...! உடனே அக்கம் பக்கம் , போலீஸை அழைத்து சொல்லி விடு...!

அப்புறம் தம்பி என்னுடைய பிள்ளைகளின் வாட்ஸ்அப் நம்பரும் தருகிறேன், ஒரு வேளை நான் இறக்கும் போது தயவு செய்து என் பிள்ளைகளுக்கு வாய்ஸ் ரெக்கார்ட் மூலம் என் மரண செய்தியை சொல்லி விடு" என்றார்.

இதையெல்லாம் கேட்ட அந்த இளைஞனுக்கு கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது, சொல்லிக் கொண்டிருந்த பெரியவருக்கும் குரல் தழுதழுத்தது.

இன்றைய நவீன உலகில் தனித்தீவாக உள்ள வீடுகளிலும் ஒவ்வொரு அப்பார்மெண்டிலும்

இந்த மாதிரி முதியோர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்

சில முதியோர்கள் வாட்சப்பில்

தினமும் குட்மார்னிங் என்றும் வணக்கம் என்றும் அனுப்பும் போதெல்லாம், இந்த பெரிசுக்கு வேற வேலையில்லை, இது ஒரு தொல்லை தான் என்று நினைத்து பலரை நானே பிளாக் செய்துள்ளேன்.

பச்சை இலைகள் ஒன்றை மறந்து விட வேண்டாம் , நாமும் பழுத்த இலைகள் ஆகி மரத்திலிருந்து ஒரு நாள் உதிர்ந்து விடுவோம் என்று ...!!!


🌹🌹🌹

Tuesday, 18 March 2025

வயதான பெரியவர்கள்

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் -ஒரு ஜப்பான் நாட்டுக் கதை.

முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.

அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும்.

இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம்.

அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிக அன்பு கொண்டவர்களாக விளங்கினர்.

நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார்.

ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான்.

தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை.

எனினும் அரச தண்டனைக்குப் பயந்து அவன் தன்னுடையத் தந்தையை மலைப்பகுதிக்கு முதுகில் சுமந்து சென்றான்.

மலைப்பகுதியை அடைந்த போது அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனே அழைத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து விட்டான்.

வீட்டின் பின்பகுதியில் தந்தையை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான். மிகவும் ரகசியமாக அவருக்கு உணவளித்து வந்தான்.

சாம்பல் கயிறு.

ஒரு நாள் அரசன், தன் மக்களின் அறிவுத் திறனை சோதிக்க எண்ணி, போட்டி ஒன்றை அறிவித்தான்.

சாம்பலால் திரிக்கப்பட்ட கயிறினை கொண்டு வர வேண்டும் என்பதே அப்போட்டியாகும்.

போட்டியைக் கேட்டதும் எல்லோரும் சாம்பலால் எவ்வாறு கயிறு திரிக்க இயலும் என்று எண்ணினர். யாராலும் சாம்பல் கயிறு உருவாக்க முடியவில்லை.

அரசனின் போட்டி பற்றி அந்த‌ மகன் தன் தந்தையிடம் தெரிவித்தான்.

போட்டியைக் கேட்ட தந்தை, மகனிடம் பெரிய தாம்பாளத்தில் கயிறினை முறுக்கி வைத்து, அதனை எரியச் செய்தால் சாம்பலால் திரித்த கயிறு கிடைக்கும் என்றார்.

மகனும் தந்தை கூறியபடி தாம்பாளத்தில் கயிறினை வைத்து எரித்தான். கயிறு எரிந்து சாம்பாலான பின்பும் அதே கயிறு வடிவில் இருந்தது. இதனை அரசனிடம் காண்பித்து பரிசினைப் பெற்றான்.

அடி எது? நுனி எது?

ஒரு மாதம் கழித்து அரசன் இரண்டாவது போட்டியை அறிவித்தான்.

அரசன் ஒரு மரக்கொம்பைக் கொடுத்து இதனுடைய அடிப் பாகம் மற்றும் நுனிப் பாகத்தைக் கண்டு பிடிக்குமாறு மக்களுக்கு ஆணையிட்டான்.

கிட்டத்தட்ட இரு பகுதியும் ஒன்றாகத் தெரிந்ததால் யாராலும் அடி எது? நுனி எது? என்று சொல்ல முடியவில்லை.

மரக்கொம்பை வீட்டுக்கு எடுத்து வந்த மகன் தந்தையிடம் காண்பித்து அரசனின் கேள்வியைக் கேட்டான்.

தந்தை மரக்கொம்பை தண்ணீரில் போட்டால், அது லேசாக மூழ்கும் பகுதி அடி, மிதக்கும் பகுதி நுனி என்றார்.

மகனும் தந்தை கூறியவாறே அரசனுக்குச் செய்து காண்பித்து இம்முறையும் பரிசினைப் பெற்றான்.

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்.

அரசன் மூன்றாவது போட்டியை மிகவும் கடுமையானதாக வைத்தான்.

அதாவது தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒன்றினைத் தயார் செய்து வருமாறு மக்களிடம் கூறினான்.

வழக்கம் போலவே எல்லா மக்களும் பின்வாங்கி விட்டனர்.

அரசனின் கேள்வியால் மகன் மிகவும் சோர்ந்து தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான்.

தந்தை அவனிடம் “மேளத்திற்குத் தேவையான தோல்களை எடுத்துக் கொள். மலைப்பகுதிக்குச் சென்று தேனீக்கூடு ஒன்று கொண்டு வா. அதனை உள்ளே வைத்து மேளத்தை தயார் செய்” என்றார்.

மகனும் தந்தை கூறியவாறே மேளத்தை தயார் செய்து அதனை அசைக்காமல் கொண்டு சென்று அரசனிடம் தந்தான்.

அரசன் மேளத்தைக் கையில் எடுத்து மேளத்தை அசைத்தான். மேளத்திற்கு உள்ளே இருந்த தேனீக்கள் அசைவினால் மேளத்திற்குள் இங்கும் அங்கும் பறந்தன. இதனால் மேளத்தில் தட்டாமல் ஒலி உண்டானது.

இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த அரசன் “உன்னால் எப்படி மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளை செய்து காண்பிக்க முடிந்தது?” என்று கேட்டான்.

அனுபவம் தந்த பதில்கள்.

“அரசே உங்களுடைய கேள்விகளுக்கு விடை காணும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்னுடைய வயதான தந்தை என்னுடன் இருக்கிறார். அவர் மூலமே எனக்குத் தங்களின் கேள்விக்கான பதில் கிடைத்தது.” என்று கூறினான்.

இளைஞனின் பதில் அரசனை நெகிழச் செய்தது.

சிக்கலான பிரச்சினைகளைத் தீர்வு செய்ய‌ வயதானவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொண்டான்.

உடனே அவன் “இனி வேலை செய்ய இயலாத வயதானவர்களை, மலைப்பகுதிக்கு கொண்டு போய் விடத் தேவையில்லை” என்று உத்தரவு போட்டான்.

அதுமுதல் வயதானவர்கள் தங்கள் கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகக் கழித்தனர்.

அனுபவ அறிவு என்றைக்கும் விலை மதிப்பில்லாதது என்பதைத் தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் கதை மூலம் அறியலாம்.

ஆம்,

வயதான பெரியவர்கள் வீட்டில் இருப்பதே நமக்கு இறைவன் கொடுத்த அருள் என்று உணர்வோம்.

நம்மை ஆளாக்கிய பெற்றோரின் வயதான காலத்தில் அவர்கள்

நம்மோடு இருப்பதும் அவர்களை பராமரிப்பதும்

நமக்கான கடமை மட்டுமல்ல

நமக்கு கிடைத்த அருள் என்று உணர்வோம்.

தொப்புள் கொடியில் இருந்தே தொடங்கிய தாயும்

மார்பிலும் தோளிலும் தூக்கிச் சுமந்து கால் தேய உழைத்து நம்மை உருவாக்கிய தந்தையும் வாழும் கடவுளர் ஆவர்.🙏🏻🙏🏻

Sunday, 25 August 2024

7 DWARVES OF OLD AGE


 

OLD AGE


 

WAYS TO LIVE LIKE A CENTENARIAN


 

TYPES OF WOMEN GET OLD VERY QUICKLY


 

THE BLUE ZONES


 

TIPS FOR AGING WELL


 

WRINKLES, GREY HAIR, SCARS


 

DEMENTIA


 

BEAUTIFUL SOUL




 

YOUTH - OLD


 

WONDERS OF GETTING OLDER


 

GROW OLDER - MOVE