Thursday, 28 January 2021

TODAY MY STAR BIRTHDAY " THAI POOSAM "



The Moon continues his journey through the skies today and is now in Phusya nakshatra.the The above is amazing space photograph of the Beehive Cluster, also known as Praesepe or Messier 44 (M44). (You can also see this cluster marked out on this old star map, in the middle of the crab shell.) This star cluster contains about 1000 stars and is housed within the nakshatra of Pushya.
Wikipedia says: “Under dark skies, the Beehive Cluster looks like a small nebulous object to the naked eye; as known since ancient times. Classical astronomer Ptolemy described it as a “nebulous mass in the breast of Cancer", and it was among the first objects that Galileo studied with his telescope.”
Pretty neat to have a little collection of bees in the centre of the Pushya flower...


Those who believe in astrology, can go through the details below  

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய தெய்வம் மற்றும் வழிபடவேண்டிய தலம் பற்றிய விவரங்கள்..

பூச நட்சத்திரத்தின் அதிபதி, `நீதிமான்’ என்று போற்றப்படும் சனீஸ்வர பகவான். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகச் சிறந்த அறிஞர்களாகவும், ஆன்மிகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பீர்கள். மிகக் கடுமையான பிரச்னைகளுக்குக்கூட எளிதாகத் தீர்வு கண்டு சமாளித்துவிடுவீர்கள். தெய்வ பக்தி நிறைந்திருக்கும் நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள். பல துறைகளிலும் விஷய ஞானம் பெற்றிருப்பீர்கள். வீடு, வாகன வசதிகளைப் பெற்றிருப்பீர்கள். பெற்றோரிடமும், வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளிடமும் மிகுந்த அன்பு கொண்டிருப்பீர்கள். மனோ திடம் கொண்டவர்களாகவும், எப்போதும் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் விரும்புபவர்களாகவும் இருப்பீர்கள். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும்கூட உயர்ந்த நிலையை அடைந்துவிடுவீர்கள். எப்படிப்பட்ட நெருக்கடியான நிலை ஏற்பட்டாலும், சாமர்த்தியமாகச் சமாளித்துவிடுவீர்கள். அரிய பல காரியங்களைச் சாதித்தாலும், `இந்தப் பூனையும் பால் குடிக்குமா?' என்று நினைப்பதுபோல் அடக்கமாகக் காணப்படுவீர்கள் பூசம் நட்சத்திரல் பிறந்தவர்கள். 

இயல்பிலேயே இரக்க மனம் பெற்றிருக்கும் நீங்கள், அனைவருக்கும் உதவி செய்ய நினைப்பீர்கள். எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். சவாலான காரியங்களையும்கூட சாமர்த்தியமாகத் திட்டமிட்டு, கச்சிதமாக முடிப்பீர்கள். மனசாட்சிக்கு அஞ்சி நடப்பீர்கள். மற்றவர்களைக் கவரும் வசீகரத் தோற்றம்கொண்டிருப்பீர்கள். உறவினர்களும் நண்பர்களும் வந்துவிட்டால், நண்பர்களுக்கே முக்கியத்துவம் தருவீர்கள். உற்றார், உறவினர் சூழ பெரிய குடும்பமாக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். சிக்கலான விஷயங்களைக்கூட நுட்பமாக அலசி ஆராய்ந்து முடிவு சொல்வீர்கள். அடிக்கடி கோபப்படுவீர்கள். சற்று கர்வமும் பெற்றிருப்பீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். தலைமை ஸ்தானத்தை வகிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையும் தளராத முயற்சியும் கொண்டிருப்பீர்கள். கற்பனைத் திறன் அதிகம் பெற்றிருப்பீர்கள். கதை, கவிதை எழுதுவதில் நாட்டம் இருக்கும். மற்றவர்கள் செய்த உதவியை மறக்காமல் திருப்பிச் செய்துவிடுவீர்கள். பழைமையை நேசிக்கும் அதே சமயத்தில் புதுமையையும் விரும்புவீர்கள்.

சமூகத்தில் முக்கியப் பிரமுகராக இருப்பீர்கள். புகழ் பெற்ற பல பெரிய மனிதர்களின் நட்பைப் பெற்றிருப்பீர்கள். வாழ்க்கையின் பிற்பகுதியில் சகல யோகங்களும் உண்டாகும்.  

இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்...

பூசம் 1-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சனி; ராசி அதிபதி - சந்திரன்; நவாம்ச அதிபதி - சூரியன்

பூசம் முதல் பாதத்தில் பிறந்த நீங்கள் எதையும் உடனடியாகவும் விரைவாகவும் செய்து முடிக்க விரும்புவீர்கள். சோம்பேறித்தனம் என்றாலே காததூரம் ஓடுவீர்கள். பலர் கூடியிருக்கும் இடத்தில் தனித்துத் தெரிவீர்கள். அடிக்கடி தந்தையுடன் வாக்குவாதம் செய்வீர்கள். விடுதியில் தங்கிப் படிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். சிறு வயதிலேயே தலைமைப் பண்பைப் பெற்றிருப்பீர்கள். தவறு செய்ய மாட்டீர்கள். மற்றவர்கள் தவறு செய்வதையும் கண்டிப்பீர்கள். கோடைக்காலத்தில்கூட சூடாகச் சாப்பிடவே விரும்புவீர்கள். உங்கள் விருப்பப்படியே மண வாழ்க்கையை அமைத்துக்கொள்வீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவு இருக்கும். சமூகத்தில் மிக உயர்ந்த ஸ்தானத்தை அடைவீர்கள். நவாம்ச அதிபதி சூரியனாக இருப்பதால், அடிக்கடி உஷ்ணத்தால் பாதிக்கப்படுவீர்கள். எனவே, உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பதுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

பூசம் 2-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சனி; ராசி அதிபதி - சந்திரன்; நவாம்ச அதிபதி - புதன்

பூசம் 2-ம் பாதத்துக்கு, உச்சம் பெற்ற கன்னி புதன் நவாம்ச அதிபதியாக இருப்பதால், நகைச்சுவையாகப் பேசுவீர்கள். ஆடம்பரமாக வாழ வேண்டுமென்று விரும்புவீர்கள். பெற்றோரிடம் மிகுந்த அன்புகொண்டிருப்பீர்கள். அவர்கள் சொல்வதைத் தட்டாமல், தயங்காமல் செய்வீர்கள். உறவினர்களுடன் அவ்வளவாக நெருங்கி உறவாட மாட்டீர்கள். சில நேரங்களில் பிரச்னைகளைக் கண்டு கவலைப்படுவீர்கள். மற்றவர்களுடன் நட்புறவுடனேயே இருக்க விரும்புவீர்கள். வாழ்க்கைத் துணையிடமும் பிள்ளைகளிடமும் அதிகப் பிரியம் வைத்திருப்பீர்கள். பகைவர்களுக்கும் இரங்கும் மனம்கொண்டிருப்பீர்கள். ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டால், அதில் எத்தனை தடைகள் ஏற்பட்டாலும், பொறுமையுடன் இருந்து முடித்துவிடுவீர்கள். ஏழை எளியவர்களிடம் இரக்கம்கொண்டு முடிந்த உதவிகளைச் செய்வீர்கள். குடும்பத்துக்குச் செல்வம் சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பீர்கள். திரைப்படங்களைப் பார்ப்பதைவிட, பத்திரிகை படிப்பதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். 

பூசம் 3-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சனி; ராசி அதிபதி - சந்திரன்; நவாம்ச அதிபதி - சுக்கிரன்

எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும், அவற்றை முறியடித்து எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பார்ப்பவர்கள் உங்கள் வயதைக் குறைத்துச் சொல்லும் அளவுக்கு இளமையாகக் காட்சி அளிப்பீர்கள். மிகுந்த புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்வீர்கள். அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். இயற்கை எழில் சூழ்ந்த வீட்டில் வாழ நினைப்பீர்கள். நவீன டிசைனில் ஆடை, ஆபரணங்களை வாங்க விரும்புவீர்கள். வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதில் விருப்பம்கொண்டிருப்பீர்கள். மிகுந்த தெய்வபக்தி கொண்டிருப்பீர்கள். சிறு வயதிலிருந்தே மற்றவர்களுக்குக் கொடுக்கும் குணம் பெற்றிருப்பீர்கள். அடிக்கடி வாகனங்களை மாற்றிக்கொண்டே இருப்பீர்கள். தெய்வப் பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். சண்டையைவிட சமாதானத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நினைத்த காரியத்தை எப்பாடுபட்டாவது சாதித்தே தீருவீர்கள். வீட்டில் செல்லப் பிராணிகளை பிரியமுடன் வளர்ப்பீர்கள்.

பூசம் 4-ம் பாதம்

நட்சத்திர அதிபதி - சனி; ராசி அதிபதி - சந்திரன்; நவாம்ச அதிபதி - செவ்வாய்

நீங்களும் கூட்டுக் குடும்பமாக வாழ்வதையே விரும்புவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறைகொண்டிருப்பீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் உறவினர்களை உதாசீனப்படுத்தவோ விட்டுக்கொடுக்கவோ மாட்டீர்கள். அனைத்துச் சுகங்களையும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புவீர்கள். பேச்சாலேயே காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். சுயகௌரவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பிள்ளைகளை அதிகம் நேசிப்பீர்கள். அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதில் துடிப்பாக இருப்பீர்கள். அவ்வப்போது ஏதேனும் ஒன்றை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள். சில நேரங்களில் முன்கோபத்துடன் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு பிறகு, அதற்காக வருந்தவும் செய்வீர்கள். வாழ்க்கையின் சூட்சுமத்தை அறிந்துகொண்டு செயல்படுவீர்கள். எப்போதும் இளமையாகவே காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒப்பனை செய்துகொள்வதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள்.

வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீ தட்சிணாமூர்த்தி
அணியவேண்டிய ரத்தினம்: முத்து
வழிபடவேண்டிய தலம்: திருவெண்காடு, திருநள்ளாறு.

Thanks Vikatan

Monday, 16 September 2019

39வது திருமண நாள்



10-9-2019

அருட்பேராற்றலின் கருணையினாலும் 
குருவின் திருவருளாலும் 
பெற்றோர்களின் ஆசிகளினாலும் 
இந்த 39ம் திருமண ஆண்டு 
எங்களுக்கு சாதனை ஆண்டாகத் திகழ 
அமைய வேண்டுகின்றோம் !

எங்கள் மீது என்றும் அன்பும் கருணையும் கொண்டு 
வாழ்த்திவரும் உடன் பிறந்தோர்,
உறவினர்கள், நண்பர்கள் மற்றும் 
மனவளக்கலை அன்பர்கள் அனைவருக்கும் 
நன்றி மலர்கள் !
வாழ்க வளமுடன்!





TO SEE THE OLD POSTS CLICK   here

Thursday, 5 September 2019

HAPPY BIRTHDAY AMMA & SEKAR

நான் பிறப்பதற்கு முன்பிருந்தே என்னை நேசித்து, தன்  இறுதி நாள் வரை என்னை அன்பால் குளிப்பாட்டிய என் அன்னை அபயாம்பாள் அவர்களுக்கு இன்று 106வது பிறந்த தினம்.

அம்மாவிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை, அவர்கள் எனக்கு சொல்லிக்கொடுத்தது - ஒரு சிறந்த ஆசிரியராக இருந்தார்கள்.
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவது நல்ல பொருத்தம்!


அம்மா பற்றிய முன்றைய பதிவகள் படிக்க இங்கே சொடுக்கவும்

1997 - getting blessings from Amma 


சேகர் ( என் சகோதரர் சுவாமிநாதனின் மூத்த மகன் ) நான் சிறுவனாக இருந்தபோது வந்த புது வரவு. அவன் பிறந்த செய்தி கேட்டதும் , நான் குழந்தையைப் பார்க்க தலை தெறிக்க ஓடியது இன்னும் ஞாபகமுள்ளது.
மலரும் நினைவுகளில் சொல்வதற்கு ஏராளமாய் உள்ளது. இன்று சேகர் இருந்திருந்தால் 60வது வயது துவங்கியிருக்கும். பணியில் நிறைவு ஆண்டாக இருந்திருக்கும்.


தெய்வத்திரு சந்திரசேகரன்  1960-2009


சேகருக்கு பேரன் பிறந்திருக்கின்றான். அவனே மறுபடியும் எங்களுடன்  இருக்க வந்திருப்பதாகவே இந்த கொள்ளு தாத்தா எண்ணுகிறேன்/உணர்கிறேன்..

தெய்வங்களாக நின்று வழிநடத்திக்கொண்டிருக்கும் அம்மாவுக்கும், சேகருக்கும் எங்கள்  குடும்பத்தினர் அனைவர் சார்பிலும் இதயபூர்வ அஞ்சலி !

வாழ்க அம்மா புகழ்!
வாழ்க சேகர் புகழ்!


Friday, 30 August 2019

மனைவி நல வேட்பு நாள்



மனைவி  நல வேட்பு நாள்  

இல்லாள் அகத்­தி­ருக்க இல்­லா­தது ஒன்­று­மில்லை

ஓவ்­வொரு ஆணும் தனது வாழ்க்­கைத்­து­ணையை நன்­றி­யோடுவாழ்த்த     மனைவி நல வேட்பு நாள் என்ற கொண்­டாட்­டத்தை அறி­முகம்செய்­தவர் அருட் தந்தை வேதாத்­திரி மகரிஷி

உல­கிலே தந்­தையர் தினம்அன்­னையர் தினம்ஆசி­ரியர் தினம்குழந்­தைகள் தினம்காத­லர்கள் தினம்நண்­பர்கள் தினம்,மகளிர் தினம்,முதியோர் தினம்ஊன­முற்றோர் தினம்என தனித்­­னியே கொண்­டாடிமகிழ்­கின்­றனர்சுமங்­கலி பூஜையை கணவன் நல­னுக்­காக மனை­வி­யரும் வேண்­டு­கி­றார்கள்குடும்­பத்­துக்­காக தன்னையே அர்ப்­­ணிக்கும் மனை­விக்கு நன்றி சொல்ல வேண்­டாமாஓவ்­வொரு ஆகஸ்ட்30 ஆம் தேதி     மனைவி நல வேட்பு நாள் உல­கெங்­கு­முள்ள மன­­­ளக்­கலை அன்­பர்­களால் உற்­சா­­மாகக் கொண்­டா­டப்­­டு­கி­றது

பெண்­மையைப் போற்றி பணிந்து புகழ்ந்து வாழ்ந்த மனிதன் எப்­போதும்கெட்­­தில்லைபெண்­ணி­னத்தை மதிக்­காத தனி மனி­தனோ,சமு­தா­யமோ உயர்­­டைந்­­தாக சரித்­திரம் இல்லைஎந்தச் சமு­தாயம் பெண்­மையை போற்றி அவர்­­ளுக்கு மதிப்­­ளித்து வாழ்­கி­றதோ அந்த சமு­தா­­ம்தான் அறி­விலும்,ஆன்­மீ­கத்­திலும் சிறப்­புற்று விளங்கும்

மனை­வியர் தின­மான இந்­நன்­னாளில்* பெற்­றோரைபிறந்தஊரை,.உற­வு­களை பிரிந்துஉங்­­ளுக்கு தொண்­டாற்றிஇனி­மை­யாக,இன்­­மாக உங்­­ளுக்­காக தன்­னையே முழு­மை­யாக அர்ப்­­ணித்துவாழும் அன்­புக்கும்பாசத்­துக்கும் உரித்­து­டைய மனை­வியை ஒவ்­வொரு கண­வரும் மதித்துவாழ்த்தி உங்­களின் மாசற்ற அன்­பினால்அவர்­களை நனைத்­தி­டுங்கள்



11 ஆண்டுகளுக்கு முன் கொழும்புவில் நடைபெற்ற மனைவி நல வேட்பு விழாவில் மாலா ஆற்றிய உரை கேட்க இங்கே சொடுக்கவும்


One more link below

link

SLEEP - 6



தூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா!

நன்றி  - டாக்டர் விகடன்  15-7-19 இதழ் 


டல், மனம் இரண்டுக்கும் ஓய்வு தருவது தூக்கம். ஆனால், இன்று பலருக்கு மாத்திரைகளின் மூலம்தான் தூக்கம் வசமாகிறது. ``மாத்திரைகளை நாடாமல் இயற்கையான முறையில் ஆழ்ந்து தூங்க வழி இருக்கிறதா?’’ மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடம் கேட்டோம்.

“இன்று மொபைல்போன் பலரது வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறது. டி.வி., கம்ப்யூட்டர், மொபைல் என எப்போதும் ஒளிவீசும் ஏதோவொரு திரையைப் பார்த்துக்கொண்டேயிருப்பதால், கண்களும் மூளையும் சோர்வடைகின்றன. அவை இயல்புக்குத் திரும்ப, குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். எனவே, தூங்கத் தயாராவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர், இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும். மொபைல்போன் அருகிலிருந்தால் அடிக்கடி அதை எடுத்துப் பார்க்கத் தோன்றும். எனவே, அதைத் தொலைவில் வைத்துவிடுங்கள். படுக்கையறையைத் தூங்குவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். படுக்கையில் உட்கார்ந்துகொண்டு ஆபீஸ் வேலைகளைச் செய்வதோ, டி.வி., கம்ப்யூட்டர், லேப்டாப் பார்ப்பதோ கூடாது. அதோடு, தூக்கத்துக்குத் தயார்ப்படுத்தும் ‘ஸ்லீப் ஹைஜீன்’ நடவடிக்கைகளையும் அவசியம் பின்பற்ற வேண்டும்.


தூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா!

அதென்ன ஸ்லீப் ஹைஜீன்?

1. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் படுக்கையிலிருந்து எழுவதையும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
2. தூங்கச் செல்வதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் சாப்பிட்டுவிட வேண்டும்.
3. இரவில் தயிர், முட்டை, இறைச்சி போன்ற உணவுகளைத் தவிர்த்துவிட்டு, எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.
4. மனதை ஒருநிலைப்படுத்தும் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.
5. மதியம் உறங்கும் பழக்கமுள்ளவர்கள்,
20 நிமிடங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.
6. மாலை 6 மணிக்கு மேல் உடற்பயிற்சி செய்யக் கூடாது; டீ, காபி, குளிர்பானங்களை அருந்தக் கூடாது. மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் ஆழ்ந்த தூக்கத்தை பாதிக்கும்.
7. மாலை நேர நடைப்பயிற்சி இரவில் ஆழ்ந்த தூக்கத்துக்கு வழிவகுக்கும். வெகு நேரம் தூக்கம் வரவில்லையென்றால், எழுந்து ஒரு குறுநடை நடந்துவிட்டு வரலாம்.
8. படுக்கைக்குச் சென்ற பிறகு அடுத்த நாள் வேலை பற்றி யோசிக்கக் கூடாது. தீர்வே கிடைக்காத பிரச்னைகளைப் பற்றியும் யோசிக்கக் கூடாது.
9. நள்ளிரவில் கண்விழித்தால் இயல்பாக இருங்கள்.
10. மெல்லிசை அல்லது பாடல்களைக் கேட்பது தூக்கத்தை வரவழைக்கும்.
11. இரவில் பசும்பால் அருந்துவதும், ஆப்பிள், வாழைப்பழம் இரண்டையும் கலந்து சாலட் செய்து சாப்பிடுவதும் நிம்மதியான தூக்கத்தை வரவழைக்கும்.
12. படுக்கைக்குச் செல்லும்போது தளர்வான உடைகளை உடுத்துவது நல்லது. நனைந்த, இறுக்கமான உள்ளாடைகளுடன் தூங்கச் செல்லக் கூடாது.

தூக்கம் வரவழைக்கும் டெக்னிக்ஸ்!
புத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது போன்ற பழக்கங்கள் தூக்கம் வரவழைக்க உதவும். ஆனால், அவை எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. தூக்கம் வரவழைக்க சில வழிமுறைகள் உள்ளன.

100 வரை எண்ணுங்கள்!
படுக்கை அறைக்குச் சென்றதும் 100-லிருந்து `99, 98, 97...’ என்று பின்னோக்கி எண்ண வேண்டும். இப்படி எண்ண ஆரம்பித்தால், முழு கவனமும் அதில் சென்றுவிடும். இதனால் மனம் ஒருநிலைப்படுத்தப்பட்டு, சிறிது நேரத்தில் உங்களை மறந்து தூங்கிவிடுவீர்கள்.


தூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபார்முலா!

4 - 7 - 8 ஃபார்முலா!

`4 - 7 - 8’ என்ற மூச்சுப்பயிற்சி டெக்னிக் சில மேற்கத்திய நாடுகளில் பரிந்துரைக்கப்படுகிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு `ஆண்ட்ரூ வீல்’ (Andrew Weil) என்ற விஞ்ஞானியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் எளிமையான வழி இது. ‘மூச்சுவிடுவதில் கவனம் செலுத்தினால், மன அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வரும்’ என்கிறார் அவர். அதாவது, `உள்மூச்சு மற்றும் வெளிமூச்சை விடும்போது மூளை, தன் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, அமைதியான நிலைக்குத் தானாகவே வந்துவிடும். இந்தப் பயிற்சியை தொடங்குவதற்கு முன்னர் வாய்வழியாக `வுஷ் வுஷ்ஷ்...’ என்னும் சத்தத்தை எழுப்பி, உங்கள் மூச்சை முழுமையாக வெளியேற்ற வேண்டும்’ என்று கூறும் அவர் கீழ்க்காணும் பயிற்சிகளைச் செய்யச் சொல்கிறார்.
ஸ்டெப் 1:
கண்களை மூடியபடி நான்கு விநாடிகளுக்கு மூச்சை நன்றாக உள்ளே இழுத்துவிட வேண்டும். விநாடிகளைக் கணக்கிட `1, 2, 3, 4...’ என்று மனதில் எண்ணிக்கொண்டு மூச்சை உள்ளே இழுக்கலாம்.
ஸ்டெப் 2:
உள்ளே இழுக்கப்பட்ட மூச்சுக்காற்றை ஏழு விநாடிகள் உள்ளேயே நிறுத்திவைத்து அமைதியாக இருக்க வேண்டும்.
ஸ்டெப் 3:
எட்டு விநாடிகளுக்கு மூச்சுக்காற்றைச் சீராக வெளியேற்ற வேண்டும். இப்படி, தொடர்ந்து மூன்று முறை செய்ய வேண்டும். தொடர்ச்சியாகச் செய்யும்போது, உறக்கம் கண்களைத் தழுவும். அடுத்த மூன்று நிமிடங்களில் உங்களுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்துவிடும்.
கவனம்: இந்த டெக்னிக்கை எல்லோராலும் பின்பற்ற முடியாது. சைனஸ் இருப்பவர்கள், முதியவர்கள், நுரையீரல் தொடர்பான நோயாளிகள் இதைத் தவிர்க்கவும்.
ரிலாக்ஸ்!
தூங்குவதற்காகப் படுக்கைக்குச் சென்றதும் கீழ்க்காணும் ஐந்து ஸ்டெப்களைப் பின்பற்ற வேண்டும்.
ஸ்டெப் 1
முகம் மேல்நோக்கி இருப்பதற்கு வசதியாகத் தலையணையை வைத்துக்கொண்டு, மல்லாந்து படுத்து, கண்களை மூட வேண்டும். வாய், தாடை, முகத்தசை என முகத்தின் அனைத்துப் பகுதிகளையும் அசைக்காமல் ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 2
உடலின் இருபுறமும் கைகளை நேராக நீட்ட வேண்டும். உள்ளங்கை விரல்களை விரித்துவைக்க வேண்டும். இதனால் தோள்பட்டை, கைகள் ரிலாக்ஸ் ஆகும்.
ஸ்டெப் 3
நன்றாக மூச்சை இழுத்து மார்புப் பகுதியை ரிலாக்ஸ் செய்ய வேண்டும். பிறகு மூக்கில் தொடங்கி, நுரையீரல்வரை காற்று உள்ளே சென்று வருவதை சில நிமிடங்கள் கவனிக்க வேண்டும்.
ஸ்டெப் 4
தொடைப்பகுதியிருந்து பாதம்வரை ரிலாக்ஸ் செய்ய வேண்டும். இந்த நான்கு ஸ்டெப்களைச் செய்து முடிக்கும்போது, தலை முதல் கால்வரை ரிலாக்ஸாகியிருக்கும்.
ஸ்டெப் 5
அடுத்து மனதை ரிலாக்ஸ் செய்ய வேண்டும். சில நினைவுகளை மனதில் கொண்டுவரும்போது, எண்ணங்கள் சிதறாமல், மனம் அமைதியான நிலைக்கு வந்துவிடும். உதாரணமாக, அமைதியான ஏரி... அதில் மிதக்கும் படகில் நீங்கள் மட்டுமே இருப்பதுபோல நினைத்துக்கொள்ளுங்கள். அல்லது உங்களைச் சுற்றிலும் எதுவும் இல்லாமல் திறந்தவெளியில் படுத்திருப்பதுபோல, வானத்தில் நிலா, நட்சத்திரங்கள் இருப்பதுபோலக் கற்பனை செய்துகொள்ளுங்கள். உயரமான மலையிலிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சி அல்லது இயற்கை எழில் நிறைந்த சூழல் என எதை நினைத்தால் உங்கள் மனம் ரிலாக்ஸ் ஆகுமோ அதைக் கற்பனையாக நினைத்துக்கொள்ளலாம். இவற்றைச் செய்தும் மனம் ரிலாக்ஸ் ஆகவில்லையென்றால், ‘யோசிக்காதே, யோசிக்காதே...’ என்று மனதுக்குள் சொல்லிக்கொள்ள வேண்டும்.
இந்த டெக்னிக்குகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றினால், அன்றைய நாளின் பிரச்னைகள் மறந்துபோயிருக்கும். ஆரம்பத்தில் இந்த டெக்னிக்குகள் வேலை செய்யாததுபோலத் தோன்றினாலும், மூளைக்கு இது ஒரு பயிற்சியாக மாறி தூக்கத்துக்கு உதவும்.
குறட்டை, தூக்கத்தில் நடப்பது, வாய்வழியாக மூச்சுவிடுவது போன்ற குறைபாடுகளுக்கு காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். இன்சோம்னியா (Insomnia) போன்ற தீவிரமான தூக்கமின்மை பிரச்னை இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது.