Wednesday, 21 September 2022

கடி ஜோக்ஸ் ( கொஞ்சம் பழசு )

 


டாக்டர்! எனக்கு பல் ஆடுது!

எந்த பாட்டுக்கு?

ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
நோயோடதான்!

தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?

டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு!கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?

டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?

என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
புக்கை மூடிடுவேன்!

காலில் என்ன காயம்?
செருப்பு கடித்து விட்டது
பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!

குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே!

இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?
என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்!

டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு
என்னிடம் சுத்தமா இல்ல
பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!

சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

இன்டெர்வியு, சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
 ஒ! நிறைய என் வீடு, கார் மற்றும் என்னுடைய
மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!

மனைவி: ஏங்க நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா அவருக்குப்
பார்த்த பெண் நல்லாவே இல்ல !
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

Tuesday, 20 September 2022

ராமகீதை


அயோத்திக்குத் திரும்பி ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ராமரை பரதன் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறான். அவனுக்கு ராமர் சில அழகான கருத்துக்களைக் கூறுகிறார். ராமகீதை என்று அழைக்கப்படும் இக் கருத்துகள் வருமாறு:

ஈஸ்வரனுக்கு உள்ள சுதந்திரம் இந்த ஜீவனுக்குக் கிடையாது. ஆகவே இங்கு யாரும் அவர்கள் இஷ்டப்படி நடக்க முடியாது. 

காலம் மனிதனை அங்கும் இங்கும் இழுத்துச் செல்லுகிறது.

சேர்த்து வைக்கப்படும் பொருளுக்கு முடிவு அழிவுதான். லௌகிக உன்னதத்தின் முடிவு வீழ்ச்சிதான். 

கூடுவதின் முடிவு பிரிவு தான். 

எப்படி பழுத்த பழம் கீழே விழுந்துதான் ஆக வேண்டுமோ, அதேமாதிரி, பிறந்த மனிதன் இறந்துதான் ஆகவேண்டும். மூப்பு, மரணம் இவற்றுக்கு உட்பட்டு அழிந்துதான் ஆக வேண்டும். 

கழிந்த இரவு திரும்ப வராது. யமுனை நீர் கடலை நோக்கிச் செல்லும், ஆனால் திரும்பாது. 

பகலும், இரவும் மாறி மாறி கழிகின்றன. கூடவே மனிதனுடைய ஆயுள் வேகமாக அழிந்து கொண்டிருக்கிறது. 

மரணம் எப்பொழுதும் மனிதன் கூடவே இருக்கிறது. மனிதன் கூடவே செல்கிறது.

சூரியோதயத்தைக் கண்டு மனிதன் மகிழ்கிறான். ஆனால் ஒவ்வொரு சூரியோதயத்தோடும் தன் ஆயுள் கழிந்து கொண்டிருக்கிறது என்பதை மறக்கிறான். 

கடலில் மிதக்கும் இரண்டு கட்டைகள் ஒன்றோடொன்று சிறிது காலம் சேர்ந்து இருக்கின்றன. பிறகு பிரிந்து ஒவ்வொன்றும் ஒரு பக்கம் செல்கிறது. அதே மாதிரி மனிதனோடு, மனைவி, மக்கள், குடும்பம், பணம் எல்லாம் சேர்கின்றன. பிறகு பிரிந்து விடுகின்றன. 

அதனால் நாமெல்லோரும் நம் ஆத்மாவின் நன்மையைக் கோர வேண்டும். அதற்கு எப்பொழுதும் தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

விடுதலை - ஓஷோ

விடுதலை உள்ளபோது நீங்கள் ஏன் அடிமைத்தனத்தை தேர்வு செய்கிறீர்கள்?

வானம் விரிந்து கிடக்கும்போது ஏன் கூண்டுகளை நாடுகிறீர்கள்?

பதில் சிரமமானது அல்ல.

கூண்டு பாதுகாப்பானது.

அது,மழை ,காற்று, வெயில், பகைவர்கள்

ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

உங்களுக்கு என்று ஏதும் பொறுப்பு இல்லை.

ஆனால் விடுதலை மகத்தான பொறுப்பு மிக்கது.

அடிமைத்தனம் ஒரு வியாபாரம்.

நீ உன் விடுதலையை விற்று விட்டாய்.

வேறு யாரோ,உன் உணவுக்காக, இருப்பிடத்திற்காக, பாதுகாப்பிற்காக, உன் தேவைகளுக்காகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நீ இழந்தது உன் சுதந்திரத்தை.

நீ உன் சிறகுகளை,நட்சத்திரம் மிக்க வானத்தை இழந்துவிட்டாய்.

கூண்டுக்குள் பாதுகாப்பாக இருந்தாலும்

நீ இறந்தவன்.

நீ ஆபத்தில்லாத வாழ்வைத் தேர்வு செய்துவிட்டாய்.

உன் ஆழமான இதயம் அடிமைத்தனத்தை ஒப்பாதபோதும்

நீ கூண்டுக்குள் திரும்பும் காரணம் அதுதான்.

நீ உன் சுதந்திரப் பாடல்களைக் கூண்டுக்குள் இருந்து பாடுகிறாய்.

கதவுகள் திறந்தே உள்ளன வானம் கைவசம் உள்ளது.

நீயோ பொய்மையான வாழ்வுக்கு அடி பணிகிறாய்.

கூண்டு உனக்கு சோம்பலையும் பாதுகாப்பையும் தருகிறது.

ஆனால் நீ விடுதலை,விடுதலை என்று கத்துகிறாய்.

இது உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வதாகும்.

நீங்கள் உங்கள் பாதுகாப்புகளை,சோம்பலை விட்டு வெளியேறுங்கள்.

ஆகாயம் முழுவதும் உங்கள் வீடுதான்.

ஒரு பயணியாக,வாழ்வின் எல்லா ரகசியங்களையும் மர்மங்களையும் அறியப் புறப்படுங்கள்.

வாழ்வைத் துயரமான அம்சமாக மாற்றி விடாதீர்கள்.

அது உல்லாசமாக, சிரிப்பாக, விளையாட்டுத் தனமாக இருக்கட்டும்.

பிறகு ஒவ்வொரு கணமும் அரிதாக மாறும்.

நீங்கள் விடுதலைப் பாடல்களைப் பாட மாட்டீர்கள்:

அதில் வாழ்வீர்கள்.

உண்மையைப் பற்றிப் பேச மாட்டீர்கள்:அதை அறிந்திருப்பீர்கள்.

கடவுளை வணங்க மாட்டீர்கள்:

இருப்பு முழுவதும் எங்கெல்லாம்

வாழ்வு இருக்கிறதோ, அங்கெல்லாம்

அவனைக் கண்டு கொள்வீர்கள்.

Monday, 19 September 2022

தானம்.........தர்மம்.......எது புண்ணியம்?

மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது.

சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார்.

சூரியனே,
என்ன தடுமாற்றம் உன் மனதில் ?
கேட்டது ஈசன்.

பரம்பொருளே..
பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.
ஆனால்,
எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது?
இது அநீதி அல்லவா? என
கேட்டார் சூரியத் தேவன்.

இறை சிரித்தது.
சூரியனே...
நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள்...
தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....
ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.
கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை.
எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.
அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா ?

கேட்ட ஈசனை வணங்கிய சூரியத் தேவன்.
புரிந்தது இறைவா !

தானமும்
தர்மமும்
பாவமும்
புண்ணியமும்
எல்லாமும் நீயே
என்பதும் புரிந்தது என்றார்.

கேட்டு கொடுப்பது தானம் !
கேட்காமல் அளிப்பது தர்மம் !

நமது உடல் பற்றி சில விஷயங்கள் ....4

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது…

2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்…

3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்…

4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது உயிர் பிரிந்தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை…

5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரசவம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்…

6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும்போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத் தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது…

7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்…

8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன…

9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விரலில் நகம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கைவிரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது…

10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம், இந்தப் பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்…

11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது…

12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட்டை விரல்கள்…

13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு…

14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்…

15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது…

16. நம் உடல் தசைகளின் எண்ணிக்கை 630…

17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது…

18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள்ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன…

19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது…

20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கி விடலாம்…

21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ…

22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது…

23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது…

24. பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது…

25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்…

26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்…

27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்…

28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடையாது…

29. மூளையின் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது…

30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்…

31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை/கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற வேறுபாடே தெரியாது…

32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்…

33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன…

34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபகங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன்.. அந்நியன் தான்…

35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள்தான் நம் வைப்பர்கள். அவற்றின் விளிம்பில்
30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வினியோகம் ஆகிறது…

36. நமது உடலிலுள்ள செல்கள் பிரிந்து இரண்டாகும் தன்மையுடையது. ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன…

37. தலைமுடி 2 வருஷத்திலிருந்து 4 வருஷம் வரை வளர்கிறது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம் வளர்கிறது…

38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது…

39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை, கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால் போதும், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்…

40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது…

41. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்…

42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100 சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது…

43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே…

44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீதம் கூடுதலாக வியர்க்கிறது…

45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்…

46. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே…

47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் கேலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்…

48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன…

49. நம்முடைய தலை ஒரே எலும்பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்…

50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளதாகவும், பெண்களின் முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என்றும் அறியப்படுகிறது…

51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்…

52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டிமீட்டர்…

53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்…

54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன…

55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது…

56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040 தடவை சுவாசிக்கின்றோம்…

57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)..

58. நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால் சாதனைகளை நிகழ்த்தலாம்…

59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது. இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது…

60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்…

61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன…

62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.

63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக குறைந்துவிட்டால் அசதி, சோர்வு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும்.

64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர் எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர் வியர்வை வெளியிடுகிறான்..

65. சிந்தனையின் வேகம் அல்லது ஒரு யோசனையின் தூரம் என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150 மைல்களாகும்..

66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது…

67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய் கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்..

68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30 கோடி உயிரணுக்கள் வரை இருக்கும்..

69. உடலில் உண்டாகும் உஷ்ணம் வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது..

70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்…

71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான் மனிதனுக்கு கோபம் வருகிறது…

72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம் ஆகும்…

73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக நீரை சுரக்கத் தொடங்கிவிட்டால் ஆணுக்கு பெண்குணமும், பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்…

74. தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம் ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது…

75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில் 22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால் மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை…

76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான். அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர் இதயம் இருக்கும்…

77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள ‘ஆலவியோலி’ என்னும் சிறிய காற்று அறைகளின் எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்..

78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது..

79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன..

80. மனிதனுக்கு 3 வகையான பற்கள் உண்டு..

81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள் 9000 உள்ளன..

82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.

83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை நாக்கு..

84. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை, மூளையின் வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது..

85. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 23 வருஷம் தூங்குகிறான்..

86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு முட்டைகளோடு தான் பிறக்கிறாள். இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம் நிரப்பலாம்..

87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்..

88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை ஏற்படுகிறது..

89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம் தடவை லப்டப் செய்கிறது. வருஷத்திற்கு 4 கோடி தடவை..

90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20 சதுரஅடிகள்.

91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்..

92. மனித உடலின் கார்பனைக் கொண்டு 900 பென்சில்களை உருவாக்கலாம்.

93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7 பார் சோப்புகளை செய்யலாம்..

94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம்..

95. மனித உடலில் அதிகமாக காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்..

96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலிருந்து இதயம் வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது…

97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால் உபரியாக காற்றை உள்வாங்க கொட்டாவி விடுகிறோம்…

98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்று விடுகிறது. இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான் சின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சி…

99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான் என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம் வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள் வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது..

Sunday, 18 September 2022

சிலேடை - நகைச்சுவை

ஒரு  ஊரில்  இனிமையாக  பாடுவதில்  வல்லமை  பெற்ற  ஒரு  புலவர்  இருந்தார்.  அவர்  பாடலைக்  கேட்க  அந்த  ஊர்  மக்கள்  எப்போதுமே  விரும்புவார்கள்.

  ஒரு  நாள்  காலை  அந்தப்  புலவர்  கடைத்  தெருவுக்கு  வந்துகொண்டிருந்தார்.  அவர்  பாடும்  இனிமை  பற்றி  பக்கத்து  ஊர்க்காரர்களுக்கு  சொல்லிக்கொண்டிருந்தார்  அந்த  ஊர்  ஆசாமி.  

பக்கத்து  ஊர்க்காரர்  சரியான  கிண்டல்  பேர்வழி.  சும்மா  இருப்பாரா?  பாடகரை  உசுப்பேத்த  நினைத்தார்.

  புலவரிடம்  ஓடிச்சென்று,  அவருக்கு  வணக்கம்  சொல்லி,  " ஐயா,  புலவரே,  நீங்கள்  நல்லாப்  பாடுவீங்களாமே !  நான்  உங்களைப் ' பாடையில ' பார்க்கணும் "  என்றான்  குசும்பாக   அதாவது  ' பாடும்போது  பார்க்க  வேண்டும் '  என்பதை  அப்படிச்  சொல்லியிருக்கிறான்.

 புலவருக்கு  பக்கத்து  ஊர்க்காரரின்  நக்கல்  புரிந்தது.  புலவரும்  அசராமல்,  " அப்ப  சாகையில  வந்து  பார் "  என்றார்.  அதாவது  ' சாகை'  ( ஜாகை ) என்பது  இருப்பிடத்தைக்  குறிக்கும்.  வீட்டில்  வந்து  பார்  என்பதை  இப்படி  அழகாக  சிலேடையில்  கூறினார்  புலவர்.  

நையாண்டி  ஆசாமி  திகைத்து  நின்றான் !

நமது உடல் பற்றி சில விஷயங்கள் ....3

ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?

ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.

இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள்தொகைக்கு ஏறக்குறைய இணையானஅளவுக்கு இருக்கும்.

ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?
எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன.

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.

ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

பிளாஸ்மா என்றால் என்ன?
ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.

உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?
ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.

மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?
மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?
எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?
நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீன் அளவு எவ்வளவு தெயுமா?
24மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.

தலசீமியா என்பது தொற்று நோயா?
இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந் நோய் வர வாய்ப்பில்லை.

மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?
மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?
ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?
ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. “‘O’ பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.

ரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிரிக்கப்படுகிறது?
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B’ குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (K) குரூப் ஆகும்.

ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?
செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.

ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும