Wednesday, 25 April 2012

BHEL அறிவுத் திருக் கோவில் - 5





கீழ்த் தள பணிகள் வேகமாக முடிக்கப் பட்டு 104  தூண்களும் எழும்ப ஆரம்பித்தன. நடுத் தளம்தான் பிரதான தளமாகையால் ஒரு நல்ல நாளிலே premix கான்க்ரீட்  வரவழைத்து கிட்டத்தட்ட 6500  சதுர அடிக்கு முதல் ceiling 
போட்டோம்கீழ்த் தளத்தின் ஒரு மூலைப் பகுதியை சுத்தம் செய்து அங்கு தினந்தோறும் தனாகர்ஷன சங்கல்பமும்
கூட்டுத் தவமும் நடைபெற ஆரம்பித்தன.
மகரிஷி அவர்கள் சொன்னமாதிரி அறிவுத் திருக் கோவில் பூமியில் கால் வைத்தவர்கள் உழைப்பையும் தந்துவிட்டு நிதியும், கட்டுமானப் பொருட்களையும் வழங்கினார்கள்.

அடிக்கடி அன்பர்களை அறிவுத்திருக் கோவில் வளாகத்துக்கு அழைத்து
நடைபெறும் பணிகளை விளக்கிக் கொண்டிருந்தோம்அவர்களும் எங்களை 
உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தனர்.
எதிர்கால தலைமுறையினர் திருச்சி பகுதிக்கு வந்தால் அவர்கள் மிகவும்
வருகை தர விரும்பும் பகுதிகள் -
1. திருச்சி மலைக்கோட்டை
2 . தஞ்சை பெரிய கோவில்
நம் BHEL அறிவுத் திருக் கோவில் "
என்று சொல்லி சொல்லி எங்களை நாங்கள் உற்சாகப் படுத்திக் கொண்டோம்
அடுத்து மேல் தளத்துக்கான flooring  அல்லது நடுத் தளத்துக்கான ceiling .
நடுத்தளத்திலிரிந்து இருபது அடி உயரத்தில் கான்க்ரீட் போட முடிவாகியது..


எப்படி போடுவது?

2 comments:

  1. அறிவுத் திருக் கோவில் has definitely come out very well and it has an aura of peace and solace like temples and i'm sure you are going to draw more crowds in future

    ReplyDelete
  2. Nice to see the progress from how it was to where it is now :))

    ReplyDelete