Thursday, 5 April 2012

டென்ஷன்





ஒரு புகழ் பெற்ற வயலின் விற்பன்னர் மன உளைச்சல் தாங்க முடியாமல் மனோதத்துவ மருத்துவரை அணுகினார்.
மருத்துவர் அவரிடம் " எனக்காக சிறிது நேரம் வயலின் வாசியுங்கள் " என்று கேட்டுக் கொண்டார்.
இவரும் அற்புதமாக இசை விருந்து அளித்தார்.
மருத்துவர் இவரிடம் " இப்போது வயலின் தந்திகளை இறுக்கமாக முடிக்கிவிட்டு வாசியுங்கள்" என்றார்.
நம்ம விற்பன்னரும் அப்படியே செய்தார், மிகவும் நாராசமான ஒலிதான் வந்தது. மருத்துவர் " இப்போது தந்திகளை நன்கு தளர்த்திவிட்டு வாசியுங்கள் " என்றார்.
அதேபோல் செய்த விற்பன்னர் " இப்பவும் அபஸ்வரம்தான் வருகிறது" என்றார்.
இப்போது மருத்துவர் அறிவுரை வழங்கினார் –

" புரிந்திருக்குமே! வாழ்க்கையில் ரொம்பவும் டென்சனாகவும் இருக்காதீர்கள்.
மிகவும் ரிலாக்ஸ்டாகவும் இருக்காதீர்கள். உங்கள் மன உளைச்சல்கள் எல்லாம் தீர்ந்து விடும். மேலும்
எப்போதும் மகிழ்ச்சியாகவே இருங்கள்.
நண்பர்களுடன் சிரித்து, அரட்டை அடியுங்கள்
மற்றவர்களுக்கு உதவுங்கள்
எளிமையான உணவு எடுத்துக் கொள்ளுங்கள்
நேர மேலாண்மை பழகுங்கள்
மன உளைச்சல்களுக்கான காரணங்களை ஆராயுங்கள்
எதிலும் 100 % சரியாக இருக்க வேண்டும் என விரும்பாதீர்கள்
சினம் வரும்போது தனிமை நாடி வேறு வேலையில் ஈடுபடுங்கள்
நல்ல ஓய்வு, உறக்கம் அவசியம் தேவை
உடனடியாக மனவளக்கலை மன்றம் சென்று உடற்பயிற்சி, தியானம்
கற்று பழகுங்கள். உடல் தளர்வு பயிற்சி டென்சனைக் குறைக்கும்.
அகத்தாய்வு பயிற்சிகள் பயின்று எப்போதும் அவசரம் இல்லாமல், பதட்டப்படாமல், டென்சன் இல்லாமல், நிம்மதியாக வாழுங்கள்.
வாழ்க வளமுடன்!

( பல ஆண்டுகளுக்கு முன் " மனம் வெளுக்க வழிகளுண்டு " என்ற கட்டுரைத் தொடரில் நான் எழுதியதில் சிறு பகுதி )

No comments:

Post a Comment