என் நண்பர் ஒருவர் பூ மருத்துவத்தில் expert ( Bach
flower remedies)..அவர் ஞான வயல்ல ஒரு பூ பத்திக் கூட சொல்லல ன்னு வருத்தப் பட்டாரு..
நல்லா பாருங்க .. பல இடத்துல சிரிப் பூ இருக்கு ன்னு நான் சொன்னேன்..
நண்பர் சொன்னதுக்காக அவரே எதிர்பார்க்காத பூ சம்பத்தப் பட்ட விஷயம் கீழே -
சின்ன வயசில நான் படிச்ச பள்ளிக்கூட கொல்லையில ஊமத்தம்பூ பூத்திருக்கும்..யாருமே அந்தப் பூக்களைப் பறிக்கமாட்டாங்க....பசங்களுக்கு "ஊமத்தம்பூவ மோந்துப் பாத்தா ஊமையாப் போயிடுவோம்" ன்னு அவ்வளவு பயம்!
இந்த பூ, செடி எல்லாம் விஷத் தன்மையுடையதுன்னு சொல்வாங்க..
இதோட விதைகளை தண்ணீரில் அரைச்சுக்
குடிச்சா மயக்கம், சித்தப்பிரமை உண்டாகுமாம்.
உன்மத்தம்ன்னா பித்து ங்கிற அர்த்தம் ..உன்மத்தம்பூ ஊமத்தம்பூவாயிடுச்சு..!
சிவனுக்கு உன்மத்தன், பித்தன் இப்படியெல்லாம் பேர் உண்டு..
சிதம்பரத்துல நானூறு வருசத்துக்கு முன்னாடி இறைநிலை அடைஞ்ச அப்பைய்ய தீட்சிதர் என்ற ஞானி ஊமத்தம்பூவ கொண்டு தன்னை சோதித்துக் கொண்ட ஓர் உண்மை நிகழ்ச்சியைத்தான் இப்ப சொல்லப் போறேன் -
"எப்பப் பாத்தாலும் சிவனையே நெனச்சு ஜபிச்சுகிட்டு இருக்குறேமே.. புத்தி கலங்கிட்டா, பித்து பிடுச்சிட்டா நம்ம மனசுல ஜபம் ஓடுமா?" இப்படி யோசிச்ச தீட்சிதர் தன்னை வச்சு ஒரு டெஸ்ட் பண்ண முடிவு பண்ணினார். தன சீடர்களைக் கூப்பிட்டு " இங்க பாருங்க! இந்த குவளையில ஊமைத்த விதைகளை அரைச்சு தண்ணியில கரைச்சு வச்சுருக்கேன்..இதக் நான் குடிக்கப் போறேன். கொஞ்சநேரத்துல எனக்கு சித்த பிரமை ஏற்படும். நான் கன்னாபின்னான்னு உளறுவேன்..என்னபண்ணுவேன்னு எனக்குத் தெரியாது..நான் சொல்றது, பண்றது எல்லாத்தையும் ஒண்ணு விடாம நோட் பண்ணி எழுதி வைங்க..அப்புறம் அரை மணி நேரம் கழித்து
இந்த குவளையில இருக்குற மாத்து மருந்த எனக்கு கொடுத்து என்னை பழயபடி ஆக்கிடுங்க" ன்னு சொல்லி ஊமத்தை ஜூஸ சாப்பிட்டாரு.
கொஞ்ச நேரத்துலேயே தீட்சிதர் பிதற்ற ஆரம்பிச்சுட்டாரு..சீடர்கள் அவர் வாயிலேருந்து வர்ற வார்த்தைகள் ஒண்ணு விடாம ஏட்டுல எழுதிகிட்டாங்க. அப்புறம் தயாரா இருந்த மாத்து மருந்த அவருக்கு குடுத்தாங்க.
கொஞ்சநேரத்துல நார்மலுக்கு வந்த தீட்சிதர் ஏடுகளை வாங்கிப் படிச்சாரு..
மொத்தம் ஐம்பத்தொரு ஸ்லோகங்கள் சிவனைப் பத்தி அதுவும் அவரு சுயநினைவு இல்லாம பாடியிருக்காரு. உன்மத்த ( பித்து பிடித்த ) நிலையிலிருந்து பாடியதால இந்த பாடல்களுக்கு " உன்மத்த பஞ்சாசத் " ன்னு
பெயர் வச்சுருக்காங்க. ஆத்மார்ப்பண ஸ்துதி ன்னும் இந்தப் பாடல்களுக்குச் சொல்வாங்க.
தீட்சிதருக்கு வயசான காலத்துல கடுமையான வயத்து வலி இருந்துச்சாம்.. இத ஈஸியாப் போக்கிக்க அவருக்கு மந்திரம் எல்லாம் தெரிந்திருந்தாலும் இந்த வினைபதிவை அனுபவிச்சுத்தான் தீக்கணும்ன்னு
வலியோடவே கஷ்டப் படுவாராம். யாரவது இவரோட அறிவுரை கேக்க வரும்போதோ அல்லது இவர் தியானம் செய்யும்போதோ தன்னோட வயத்துவலியை தன்னோட மேல்துண்டுல கொஞ்ச நேரம் மந்திரத்தாலே மாத்தி வச்சுடுவாராம். அந்த துண்டு வலி தாங்காமே துள்ளி குதிச்சுக்கிட்டே இருக்குமாம்!
இதப் படிச்சுட்டு நம்ம ‘தண்ணி’காசலம் தண்ணி அடிச்சுட்டு
சொன்ன தத்துவம் –
இளநீர்லயும் தண்ணி இருக்கு,
பூமிலயும் தண்ணி இருக்கு .
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது,
பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது .
Interesting :)) expecting more தண்ணி’காசலம் jokes ;)
ReplyDeletewish i could also do some mandhiram and transfer my migraines like the Dheetchithar :)
ReplyDelete