Saturday, 21 April 2012

LIST OF 100




இந்த நூறாவது  post  உருப்படியான ஒரு விசயத்த உங்களுக்கு 
சொல்லப் போறேன் -
நாலு வருசத்துக்கு முன்னாடி     டெல்லியில மேனேஜ்மென்ட்       ட்ரைனிங் 
போயிருந்தப்ப கத்துக்கிட்டது இது.
ஒரு பிரச்னைக்கு முடிவு எடுக்கிறது, ஒரு விஷயத்தை ஆழ்ந்து யோசிக்கிறது
இதுக்கெல்லாம் ஒரு பட்டியல் போடணும்..List  of 100 ன்னு இதுக்குப் பேரு..

உதாரணமா படிக்கிற subject  புரியிலன்னா ஒரு பேப்பர எடுத்து
அந்த subject நமக்கு வர்ற சந்தேகங்கள,  குறைஞ்சது நூறு சந்தேகங்கள
எழுத ஆரம்பிக்கணும்..விடாப்புடியா எழுதீடிங்கன்னா உங்களுக்கு subject
ஒரு பிடிப்பு வந்திடும்.. அப்புறம் ஒவ்வொரு சந்தேகமா தெரிஞ்சவங்க கிட்ட
கேட்டு புரிஞ்சிக்கலாம்.

இத ஈஸியா ப்ராக்டிஸ் பண்ண   கீழே இருக்கிற லிஸ்ட்ல பிடிச்ச ஒண்ணு, ரெண்டு ட்ரை பண்ணுங்க.. 
எனக்குப் பிடிச்ச 100  சினிமாப் பாட்டுகள்
நான் படித்த 100  நல்ல புத்தகங்கள்
நான் விரும்பும் 100  உணவு வகைகள்
என்னோட 100  நண்பர்கள்
நான் செல்ல விரும்பும் 100  இடங்கள்
எனக்குத் தேவையான 100 பொருட்கள் 
எனக்கு பிடிச்ச 100  திரைப்படங்கள்


அப்புறம்
நான் செஞ்ச 100  தப்புக்கள்
என் கிட்ட உள்ள 100  வேண்டாத விஷயங்கள்
நான் தவற விட்ட 100  சந்தர்ப்பங்கள்
என் 100  போட்டியாளர்கள்
எனக்கு கோபமூட்டும் 100  விஷயங்கள்
நான் கலங்கி நின்ற 100  கணங்கள்
இந்த மாதிரி நம்மைப் பத்தி  List of 100 எழுதுங்க


பிறகு
அடுத்த ஆண்டுக்குள் செய்ய விரும்பும் 100  விஷயங்கள்
நான் வாழ்க்கையில் அடைய வேண்டிய 100  குறிக்கோள்கள்
இப்படி எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கலாம்.
இந்த மாதிரி நூத்துக்கணக்கான பட்டியல்கள் போடலாம்.

இது ரொம்ப பவர்புல்லான டெக்னிக்

இத எழுதும்போது  ஃபாலோ பண்ண வேண்டிய முக்கிய விதி
உங்களோட 100  entries ம்  ஒரே sitting எழுதி முடிக்கணும்.
அதுக்கு ஏத்த மாதிரி யாரும் டிஸ்டர்ப் பண்ணாம ப்ளான் பண்ணி எழுதுங்க..
 

நான் இன்னிக்கி என்னோட Most  Memorable  People 100  பேர்களை எழுதி அவர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லப் போறேன்.அவர்களும் அவர்தம் குடும்பத்தினரும்  எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்


என்னோட இந்த 100  வது post 
கடைசி நாள் வரைக் கற்றுக் கொண்டும் கற்பித்துக்  கொண்டுமிருந்த 
என் அருமை அம்மாவுக்கு சமர்ப்பணம் செய்கின்றேன்
 

5 comments:

  1. CONGRATSSSS!!!! on your நூற்றுக்கு நூறு post :)

    the easiest list for me will be...

    எனக்குப் பிடிச்ச 100 சினிமாப் பாட்டுகள்
    நான் செல்ல விரும்பும் 100 இடங்கள்

    luv the foto of அப்பாயி on computer!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் Uncle!


    வாழ்க வளமுடன்!
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  3. 100 posts 10000+ hits, great job appa!
    keep it up!

    ReplyDelete
  4. Way to go JP, Will be looking 100's and 100's of posts. I love Appayi's photo - Awesome!!!

    I can create 100 list of favorite food item in no minute!!!.

    Will follow the advice and try to create some lists.


    Congratulations!

    ReplyDelete
  5. JP, Congrats for hitting a century in less than 4 months.
    I think I just took less than 1 and 1/2 years :))

    Awesome and powerful foto of Appayi surfing the Web! Love it :))

    The quote on Love is amazing. I believe that is the test for "True Love" :)

    How about எனக்குப் பிடிச்ச 100 web posts :))

    ReplyDelete