அடுத்த வாரம் அக்ஷய திருதியை வருது.. எல்லா மேகஜின்லேயும் தங்க, வெள்ளி, பிளாட்டின நகைகள் பற்றி விளம்பரம் வந்துகிட்டே இருக்கு
திரிதியைன்னா அமாவாசை/பௌர்ணமிக்கி மூணாவது நாளு/திதின்னு அர்த்தம்.
க்ஷயம் ன்னா குறையறது இதுக்கு ஆப்போசிட் அக்ஷயம்.... வளர்ந்து வர்றது.. அக்ஷய பாத்திரம்ன்னா எடுக்க எடுக்க குறையாம வந்து கிட்டே இருக்கும் பாத்திரம்..
க்ஷயம் ன்னா குறையறது இதுக்கு ஆப்போசிட் அக்ஷயம்.... வளர்ந்து வர்றது.. அக்ஷய பாத்திரம்ன்னா எடுக்க எடுக்க குறையாம வந்து கிட்டே இருக்கும் பாத்திரம்..
சித்தர மாசம் அமாவாசைக்கு அப்புறம் வர்ற ரோஹினி நட்சத்திரம் கூடிய திரிதியை விசேசம் - இதுக்கு பேர்தான் அக்ஷய திரிதியை..இந்த நாள்ல நல்லது பண்ணா பல மடங்கு பலன்..
இந்த விஷயத்தை நகை வியாபாரிங்க " குண்டுமணி தங்கம் இந்த நாள்ல வாங்குனா அது கோடியாப் பெருகும்ன்னு " சொல்லி அட்வான்ஸ் புக்கிங் பண்றாங்க.. இந்த வருஷம் விளம்பரத்துக்கு மாத்திரம் தொண்ணூறு கோடி செலவு பண்றாங்களாம்..
ரெண்டு வருசமா வெள்ளை உலோகம் வாங்குறதும் நல்லதுன்னு வெள்ளி, பிளாட்டினத்தை வாங்க வைக்குறாங்க.. இதப் பத்தி எங்கிட்ட ஒருத்தர் கேட்டதுக்கு " வெள்ளைதான் பெஸ்டு, அதுவும் அலுமினியம் ரொம்ப, ரொம்ப நல்லதுன்னு" சொல்லி வச்சேன்!
அக்ஷய திருதியை பத்தி சொல்ல இன்னொரு விசயம் இருக்கு... அதை அக்ஷய திருதியை அன்னிக்கி சொல்றேன்..
இன்னும் ஒரு வாரம் ஆகுமே என்ன விசயமின்னு தெரிய?
ReplyDeleteஇந்த நாள்ல நானும் ஒரு நல்லது பண்ண நானும் யோசிக்கிறேன் !!!!! (கண்டிப்பாக நகை வாங்க அல்ல!!!)
"சித்தர மாசம் அமாவாசைக்கு அப்புறம் வர்ற ரோஹினி நட்சத்திரம் கூடிய திரிதியை விசேசம் - இதுக்கு பேர்தான் அக்ஷய திரிதியை"- good info.. didn't know this!!!
O'Priya, i'll give u good suggestion - donate your நகை :)
Deleteyeah, sure, why not? i hardly wear them...have to ask my dad, before i "donate" them to you? because, he only brought those jewels?
DeleteO' how chweeeet....of you to take the pledge of donating them to me (of course, dad will never ever say NO his sweet nice goodie girl)
Deleteknow about அக்ஷய பாத்திரம் but அக்ஷய திருதியை is new to me
ReplyDeleteI guess the day is a marketing ploy by jewelry stores
I walked into a jewelry store today to get my watch battery changed and seeing the array of gold and diamonds, wondered what it was that excited people so much...didn't excite me even the least bit :)
மத்த நாள்ல நல்லது பண்ணா பலன் இல்லியா ?? :)
நல்ல காரியம் செஞ்சா எப்பவுமே நல்ல பலன் கெடைக்கும்.
Deleteஇருந்தாலும் பல மடங்கு கெடைக்குமுன்னு எப்படி சொல்றதுன்னா =
துணி துவைச்சு காயப்போட்ட அது காஞ்சிடும்.
இத பகல் பன்னண்டு மணிக்கு செஞ்சா
பத்து நிமிசத்துல துணி காஞ்சிடும்..
ராத்திரி பன்னண்டு மணிக்கு துணி துவைச்சுக்
காயப் போட்டா காய ரொம்ப நேரம் ஆகும்.
கிரகங்கள் ஒரு பொசிசன்ல கூடி வரும்போது இயற்கையில வான்காந்த செறிவுல ஏற்படும் மாற்றங்கள்
சில நன்மைகளை நமக்கு தருது.. அத பயன் படுத்துறது நம்ம கையில இருக்கு..
இதுக்கு விஞ்ஞான நிரூபணம் கிடையாது..
JP, Nicely put!
Deletei remember you giving this explanation to my argument before..
DeleteI personally don't believe in planetary positions and scientific explanations but i have strong faith in faith itself and strongly believe in the power of thoughts..
If we THINK that doing good on a particular day has more benefits, then it will happen that way because of our thoughts..
btw.. துணி துவைக்கிற example doesn't apply to present day as we can throw them into the drier anytime and have them dried in a jiffy.. :))
நல்லா கேக்குராங்கையா டீடைலு..!
Deleteதெனம் நல்லது பண்ற ஷீலா மாதிரி இருக்கிறவங்களுக்கு
தெனமும் அக்ஷய திரிதியைதான்!
இவங்க அஞ்சு, ஆறு நாளுக்கு முன்னாடி வருசப் பொறப்பன்னிக்கி
போளி, வடை பண்ணி படைச்சாங்க..அத போட்டோ எடுத்து blog ல வேறப் போட்டு
ரொம்பவே tempt பண்ணாங்க.. ஏன் வருசப் பொறப்பன்னிக்கி
போளி, வடை பண்ணனும்..பொருள்விளங்கா உருண்டை,பஜ்ஜி
பண்ணி படைச்சிருக்கலாமே..கேட்டா பழக்கம்ன்னு சொல்லுவாங்க..
அது போல அக்ஷய திரிதியை அன்னிக்கி நல்லது பண்ணனும்கிறது
நம்ம நாட்டு பழக்க வழக்கமா இருந்துச்சி.. இந்த நாள்ல இப்ப பிசினஸ் காரங்க
பண்ற ப்ரைன்வாஸ்ல நல்லது பண்ணவேண்டாம் நகை வாங்கினாப் போதும்ன்னு ஆயிடுச்சி..!
ஒரு டெஸ்ட் பண்ணிப் பாக்கலாமா?
செவ்வாய்க் கிழமையன்னிக்கி வர்ற அக்ஷய திரிதியை அன்னிக்கி அரிசி அல்வா பண்ணி சூடு ஆறாம
ஜலீல் பிப்ரனுக்கு அனுப்பி வைங்க..அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!
hahaha.... எனக்கு வடை போளி சாப்டனும் போல இருந்துச்சு ...அதான் பண்ணேன் . பொருள்விளங்கா உருண்டை, (whatever that is) பஜ்ஜி சாப்டனும் போல இல்லையே :))
Deletebtw... Jhalil Pibran எழுதுற blog post படிச்சு comment போட்டாலே அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டென்று கொட்டும்னு நெனைக்கிறேன் (power of thoughts) :)) ....அதனால அரிசி அல்வா எதுக்கு??? :))
எங்க ஊர்ல Washing machine, drier க்கு எப்ப கரண்ட் வந்து எப்ப வேலை முடியும்ன்னு
Deleteயாருக்குமே தெரியாது..!