Friday, 20 April 2012

படைப்புத் திறன் /ஆக்கத் திறன்

படைப்புத் திறன் /ஆக்கத் திறன்
Creativity ங்கிற தலைப்புல நாம இங்க பாக்கப் போறது
அரிசி அல்வாவையும் உப்புமாவையும்தான்!

நேத்து எனக்கு வேடிக்கையான் ஒரு போன் வந்துச்சு..
" சார்! நான் உங்க வய வெளியில சுத்திக்கிட்டு இருக்கேன்!
அரிசி அல்வா பத்தி சொல்லியிருக்கீங்க.. அத எப்படி பண்றதுன்னு
சொன்னா நல்லாயிருக்கும்" ன்னு ஒரு request !
என் போன் நம்பர் அவருக்கு எப்படி கிடைச்சுதுன்னு யோசிச்சிக்கிட்டுருந்தப்ப
எங்க ஆபீஸ்ல ஒருத்தர் நேரா வந்து " நீங்க அரிசி அல்வா சாப்பிட்டிருக்கீங்களா?"ன்னு கேட்டாரு.
நம்ம ஊர்ல அலுக்கா பலகாரம்ன்னு ஒண்ணு பண்ணுவாங்க..( சாப்பிட, சாப்பிட அலுக்கவே அலுக்காதாம் )
அதான் நம்ம ஊரு அரிசி அல்வான்னு நெனைக்குறேன்..
வீட்ல காரம், உப்பு சேர்த்துப் பண்ற அரிசி மோர் கூழ் கூட அல்வா மாதிரித்தான் இருக்கும்,

இனிப்பு சேத்த அரிசி அல்வா பத்தி நெட்ல
தேடுனப்ப ஏகப்பட்ட,
விதவிதமான அரிசி அல்வா ரெசிபி நெட்ல இருக்கு
அதனால இங்க தேட வேண்டாம்..

சாப்பாட்டுல இந்தியனோட குறிப்பா தமிழனோட கிரியேட்டிவிட்டி ரொம்ப, ரொம்ப அதிகம்!
மோர் குழம்பு போல மோர் ரசம்,
தயிர் வடை மாதிரி தயிர் ஜாங்கிரி
வத்தக் குழம்பு போல வத்த ரசம்
மோர் அரிசி கூழ் மாதிரி மோர் கோதுமைக் கூழ்
மைசூர் ரசம் போல மைசூர் குழம்பு
இப்படி புதுசு புதுசாக் கண்டுபிடிச்சிக்கிட்டே இருக்காங்க..
Patent, Copyrights வாங்கி வச்சுக்கறது நல்லதுன்னு தோணுது..

இங்க ஒரு லேடி " நான் சுண்டைக்காய் கார குழம்பு பண்ணும்போது தண்ணி கூட போயிடுச்சு..அதனால நான் பண்ணுனத்துக்கு சுண்டைக்காய் கார ரசம் ன்னு பேர் வச்சுட்டேன்!" ன்னு பெருமையா சொன்னாங்க..


உப்புமாவால உலகப் புகழ் பெற்றவரத் தெரிஞ்சுகிட்டு இன்னிய போஸ்ட
முடிச்சுக்கலாம்.

மும்பையை சேர்ந்தவர் ப்ளாய்டு கார்டோஸ், . உயிர் ரசாயனம் குறித்த படிப்பை இவர் படித்ததால், இவரை விஞ்ஞானியாக்க ஆசைப்பட்டனர் பெற்றோர். ஆனால், கார்டோசுக்கு சமையல் கலை மீது கொள்ளை பிரியம். சமையல் படிப்பு பள்ளியில் பயின்றார். மும்பை தாஜ் ஓட்டலில் முதல் நாள் பயிற்சிக்கு சேர்ந்த இவரை, 200 கிலோ வெங்காயம் உரிக்க சொல்லி கண்ணீரை வரவழைத்து விட்டனர் சீனியர் சமையல்காரர்கள்.

இந்தியாவிலும், சுவிட்சர்லாந்திலும் பல்வேறு நாட்டு சமையல் தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்ட கார்டோஸ், நியூயார்க்கில், கிரே குன்ஸ் என்ற தலைமை சமையல்காரரிடம் பன்னாட்டு சமையல் வித்தைகளையெல்லாம் கற்றுக்கொண்டார். இனியும் மற்றவரிடம் வேலை செய்யக்கூடாது, என்பதை உணர்ந்த கார்டோஸ், நியூயார்க்கில் "தப்லா' என்ற பெயரில் ஓட்டலை துவக்கினார். இந்திய மசாலா வகைகளையெல்லாம் வெளிநாட்டு உணவு வகையில் கலந்து சமைத்தார். இதனால், இவருக்கு வாடிக்கையாளர்கள் கூடினர். வீட்டுக்கே சென்று உணவு வழங்குவது போன்ற பணிகளை தன்னுடைய ஓட்டல் மூலம் செய்தார்.

இவரது திறமையை பாராட்டி, "புட் டிவி' கடந்த 2007ல் "மனிதநேய விருது' வழங்கி கவுரவித்தது. 2006ல் சமையல் புத்தகங்களை வெளியிட்டார் கார்டோஸ். உடனடி சமையல், நான்கு நிமிட சமையல் போன்ற புத்தகங்களை, 2008 பிப்ரவரியில் வெளியிட்டு பிரபலமானார் கார்டோஸ். நியூயார்க்கில் போன வருஷம் நடந்த சர்வதேச சமையல் போட்டியில் பங்கேற்ற கார்டோஸ், சுவைமிக்க தென்னிந்திய உணவான உப்புமாவை சமைத்து, நடுவருக்கு பரிமாறி அவர் நாவில் எச்சில் ஊறவைத்து விட்டார். இதன் மூலம், 45 லட்ச ரூபாய் ரொக்க பரிசை வென்ற கார்டோஸ், இந்த பரிசு தொகையை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நலநிதிக்கு நன்கொடையாக அளித்து விட்டார். கார்டோசின் தந்தை புற்றுநோயால் இறந்ததால், அவரது நினைவாக இந்த நன்கொடையை அளித்துள்ளார் கார்டோஸ்.

7 comments:

  1. தென்னிந்திய "உப்புமா" -இவ்வளவு famous-ன்னு இப்பதான் தெரியும்!! Great Job கார்டோஸ்!!!!

    ReplyDelete
  2. very true... தமிழ் நாட்டு சமையல் அதுவும் நம்ம சாலிய பட்டறை சமையலை மிஞ்சவே முடியாது

    I remember அல்கா பலகாரம் being made for some specific purpose... don't remember for what
    அத்தை used to make it often

    I'm not a fan of ரவா உப்புமா but totally luv அரிசி உப்புமா :P

    ReplyDelete
  3. Right now I am tasting Amma's அல்கா பலகாரம் :))
    I luv அரிசி உப்புமா version with lot of black peppers in it (:-P...

    ReplyDelete
  4. JP,

    I've eaten அரிசி அல்வா but it goes by some other traditional name. Must give the credit to you for naming it as அரிசி அல்வா

    Love all upuma's including chicken உப்புமா :)

    ReplyDelete
  5. சர்வதேச சமையல் போட்டியில் பங்கேற்ற கார்டோஸ், சுவைமிக்க தென்னிந்திய உணவான உப்புமாவை சமைத்து, நடுவருக்கு பரிமாறி அவர் நாவில் எச்சில் ஊறவைத்து விட்டார். இதன் மூலம், 45 லட்ச ரூபாய் ரொக்க பரிசை வென்ற கார்டோஸ், இந்த பரிசு தொகையை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நலநிதிக்கு நன்கொடையாக அளித்து விட்டார். கார்டோசின் தந்தை புற்றுநோயால் இறந்ததால், அவரது நினைவாக இந்த நன்கொடையை அளித்துள்ளார் கார்டோஸ்.

    ReplyDelete
  6. சர்வதேச சமையல் போட்டியில் பங்கேற்ற கார்டோஸ், சுவைமிக்க தென்னிந்திய உணவான உப்புமாவை சமைத்து, நடுவருக்கு பரிமாறி அவர் நாவில் எச்சில் ஊறவைத்து விட்டார். இதன் மூலம், 45 லட்ச ரூபாய் ரொக்க பரிசை வென்ற கார்டோஸ், இந்த பரிசு தொகையை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நலநிதிக்கு நன்கொடையாக அளித்து விட்டார். கார்டோசின் தந்தை புற்றுநோயால் இறந்ததால், அவரது நினைவாக இந்த நன்கொடையை அளித்துள்ளார் கார்டோஸ்.

    ReplyDelete
  7. சர்வதேச சமையல் போட்டியில் பங்கேற்ற கார்டோஸ், சுவைமிக்க தென்னிந்திய உணவான உப்புமாவை சமைத்து, நடுவருக்கு பரிமாறி அவர் நாவில் எச்சில் ஊறவைத்து விட்டார். இதன் மூலம், 45 லட்ச ரூபாய் ரொக்க பரிசை வென்ற கார்டோஸ், இந்த பரிசு தொகையை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நலநிதிக்கு நன்கொடையாக அளித்து விட்டார். கார்டோசின் தந்தை புற்றுநோயால் இறந்ததால், அவரது நினைவாக இந்த நன்கொடையை அளித்துள்ளார் கார்டோஸ்.

    ReplyDelete