Monday 16 April 2012

அம்மா

JP, அம்மா & ஸ்ரீ ஆழியாரில்

ஆதிசங்கரர் அவதரித்த காலடியில்

பன்னிரண்டு வருடங்களுக்கு முன் இதே தினம் ( 17th April ) -

அம்மா வீட்டிலிருக்கும் மற்றும் பக்கத்து வீட்டில்ருக்கும் எல்லோரையும் வரவழைத்து அவர்களுக்கு விபூதி விட்டு ஆசி வழங்கி பிறகு " நான் போறேன்! எல்லாரும் சமத்தா ஒத்தருக்கொத்தர் உதவியா வாழணும்" என்கிறார்கள்.

பிறகு ஒரு பேப்பரை எடுத்து தன் கைப்பட யார் யாருக்கெல்லாம் செய்தி தெரிவிக்க வேண்டும் என்று எழுதி வைக்கின்றார்கள். கங்கை நீர் உள்ள சொம்புவை எடுத்து தலை மாட்டில் வைத்துக்கொள்கின்றார்கள்.
கொல்லைபுரத்திலிருந்து துளசி இலைகளைப் பறித்து ஒரு பித்தளைப்
பாத்திரத்தில் நீர் விட்டு அதில் போட்டு வைக்கின்றார்கள்.
தான் புடவை கட்டும் விதத்தில் கட்டிவிடுவதர்காக உறவுக்கார பெண்மணிக்கு சொல்லி அனுப்புகின்றார்கள்.
நான் தீபாவளிக்காக எடுத்துக் கொடுத்த புடவையை தலைமாட்டில் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.
தான் கோடி முறைக்கு மேல் ராம ஜபம் சொல்வதற்கு பயன்படுத்திய ஜபமாலையையும் அதற்கான விபூதி சம்புடத்தையும் மாலாவுக்கு கொடுக்கும்படி சொல்கிறார்கள்
இப்படி தனது யாத்திரைக்குத் தேவையான அத்தனையையும் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.

மதியம் நான் ஆபீசில் இருக்கிறேன்..அண்ணன் போன் செய்து உடனே மாயுரம் வரச் சொல்கிறார்.
என் உள்ளுணர்வுக்கு ஒரு செய்தி கிடைக்கிறது - "நான் போறேன் பிரகாசா...எத்தனை பிறவி எடுத்தாலும்
நான்தான் உன் அம்மாவா இருப்பேன் " என்று அம்மா என்னிடம் சொல்வது போல..
உடனே மாலாவையும் ஸ்ரீராமையும் ஊருக்கு கிளம்ப தயாராக இருக்கும்படி சொல்லிவிட்டு, ஆபீசில் வேலைகளைப் பிரித்துக் கொடுத்துவிட்டு பேங்க்கில் தேவையான பணம் எடுத்துக் கொண்டு கிளம்பும்போது மணி இரண்டாகிவிட்டது. தஞ்சையைத் தாண்டி ஒரு கிராமத்தை கடக்கும்போது ஐயனார் வீதி உலாவுக்காக ஒரு குதிரை வாகனத்தை தள்ளிக் கொண்டு செல்கிறார்கள். இதைப் பார்த்தபோது எனக்கும் மாலாவுக்கும் இந்த நேரம் அம்மா உயிர் இறைநிலை அடைந்துவிட்டது என ஒரே நேரத்தில் உணர்ந்தோம். அந்த நேரம் மிக சரியாகவே இருந்தது..

ஊருக்கு போறவங்க ஹேப்பியா எலாருக்கும் "டா டா " சொல்லிட்டு போறமாதிரி எங்கள விட்டுட்டு போயிட்டாங்க..

அம்மா மறைவுக்கு பத்து நாள் முன்னாடி மாயுரம் போயிருந்தபோது அம்மா ஸ்ரீராமிடம் தனக்கு சிவராமன் கொடுத்த டாலர்களைக் காட்டி " நீ எனக்கு என்ன கொடுப்பாய் " என்று கேட்டபோது ஸ்ரீராம் " இதுபோல டாலர்களால் உங்களுக்கு அபிஷேகம் பண்ணுகிறேன் " என்று சொன்னான். நாங்கள் திருச்சி திரும்பும்போது அம்மாவை வணங்கி ஆசி பெற்றபோது " வர்ற சித்திரா பௌர்ணமிக்கி போய் சேந்துடுவேன். எல்லாரையும் பத்திரமா பாத்துக்கோ " என்று சொன்னார்கள். அதுபோலவே சித்திரா பௌர்ணமிக்கு முதல் நாள் இறைநிலை அடைந்தார்கள்.

ஸ்ரீராமுக்கு கல்யாணம் நடக்கும்போது தான் இருக்கமாட்டேன் என்று உணர்ந்து ஒரு பெரிய டைரி முழுதும் வரப்போகும் ஸ்ரீராம் மனைவிக்காக குடும்ப வரலாறு, உறவு முறைகள், பண்டிகைகளுக்கு படைக்கும் முறைகள், வீட்டுக் குறிப்புகள், கோலங்கள் என தன கைப் பட எழுதி கொடுத்திருக்கின்றார்கள்.

மாலா மக்களுக்கு தொண்டு செய்வது அம்மாவுக்கு ரொம்ப பெருமை..
மகளிர் நிகழ்ச்சிகளுக்கு மாலா செல்லும்போது சில டிப்ஸ் எல்லாம் கொடுப்பாங்க

அம்மா ஓர் ஆல்ரவுண்டர். தெரியாத விஷயமே கிடையாது..எல்லா பத்திரிக்கைகளும் படிப்பாங்க. அம்மாவோட சின்ன வயசுல சுதந்திர போராட்டவீரர் தீரர் சத்தியமூர்த்தி ( காமராஜரோட குரு ) நம்ம தெருவுல கொஞ்ச நாள் தங்கியிருந்தப்ப தெருவுல இருந்த சின்னவங்களுக்கு இங்கிலீஸ் கத்துக் கொடுத்துருக்காரு.. அப்ப அம்மாவும் அவருகிட்ட இங்கிலீஸ் எழுத படிக்க கத்துகிட்டாங்கலாம்.
எல்லாருக்கும் ரெகுலரா லெட்டர் எழுதுவாங்க.. ஒரு போஸ்ட்கார்ட்ல உலக விஷயத்தை எழுதியிருப்பாங்க.. இங்கிலீஸ்ல கையெழுத்து போடுவாங்க முகவரியை இங்கிலீஸ்ல எழுதுவாங்க...

தன்னோட 84 வது வயசுல ஸ்ரீராம் கிட்ட கம்ப்யூட்டர் கத்துக்கிட்டாங்க

நம்ம கம்யூனிட்டில வந்துதித்த பெரியவங்களப் பத்தி உயர்திரு கலசலிங்கம் ( கலசலிங்கம் பல்கலைக் கழக வேந்தர் ) ஒரு புத்தகம் போட்டுருக்காரு.. அதுல அம்மாவப் பத்தி ஒரு அத்தியாயம் எழுதி பெருமை சேத்து இருக்காரு

அம்மாகிட்ட நான் கத்துகிட்டது ஏராளம்..
இவங்க வயத்துல பொறக்க எவ்வளவு புண்ணியம் பண்ணியிருக்கேனோ..!

5 comments:

  1. Lovely post!!
    A great person indeed!!
    I'm glad she was a part of my life and have fond memories of talking to her many times as a little girl swinging in our gate

    ReplyDelete
  2. வாழ்க வளமுடன்!!!
    Don't know what to say, கண்களில் இருந்து கண்ணிர் தானாக வந்து கொண்டே இருந்தது, when I was reading the post!
    A very great person!!!!
    வாழ்க வளமுடன்!!!
    வாழ்க வளமுடன்!!!
    வாழ்க வளமுடன்!!!

    ReplyDelete
  3. JP, Thanks for sharing. I have heard some of these details from Amma and others but not all the details. I have preserved some of Appayi's letters written to us here. As I am reading this her clear handwriting and English signature pops up before my eyes. I am recollecting fond memories of Appayi. I am hoping Sri's wife can read and understand Tamil :))

    ReplyDelete
  4. lovely post chitappa! thinking about appayee on this day.. these were appayees last words to me - when i left for USA

    america poi nee maasa maasam enakku dollar anupanum...(not for her..she will happily give it to temples and to the people in need)
    america poi vellakaariya iluthutu vanthudatha:)

    glad i was able to fulfill her wishes!

    ReplyDelete
  5. Beautiful and Blessed soul...

    ReplyDelete