Friday, 9 August 2013

இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 14


ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்

ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது
ஆசை என்னும் வேதம்

வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தைபல நாடும்

நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்

சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்!

காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் - கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் 
கூடும்.

2 comments:

  1. ...JP, still on "taj mayakkam"??

    ReplyDelete
    Replies
    1. கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
      கைவளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட

      மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன
      மணி மாளிகைதான் கண்ணே....

      Delete