Saturday, 31 August 2013

கிராமிய சேவைத் திட்டம் - அன்பு வேண்டுகோள்


இந்த ஆண்டு புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள முள்ளூர் என்ற கிராமத்தில் வருகின்ற 17-9-2013 அன்று முதல் அந்த கிராம மக்கள் அனைவருக்கும் மனவளக்கலைப் பயிற்சிகள் இலவசமாகத் தரப்பட்டு அமைதியான, ஆரோக்கியமான, வளமான கிராமமாக மாற்றத் தொண்டாற்றப் போகின்றோம்.

மக்களிடம் உள்ள வேண்டாத குடி, புகை, போதைப் பழக்கங்களைப் போக்கி
வாழ்க்கைக் கல்வி தந்து அகத்தூய்மை மற்றும் புறத்தூய்மையுடன், மனித நேயத்துடன் வாழ வழிவகுக்கும் சேவைகளைத் தரப் போகின்றோம்.

இதற்கான செலவுகள் ஒரு கிராமத்திற்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் ( 5000 $ )ஆகின்றது.

இதன் மூலம் இந்தத் திட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களால் முடிந்த நிதியினை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தாங்கள் நிதியினை cheque ஆகவோ அல்லது MO மூலமாகவோ அல்லது நேரிலோ கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பலாம் -

Mrs மாலா ஜெயப்பிரகாஷ்
தலைவர் WCSC  திருச்சி மண்டலம்
அறிவுத் திருக்கோவில்
வேதாத்திரி நகர்
காட்டூர் PO
திருச்சி 620019

Cheque களை " WCSC  Trichy Zone " என்ற பெயரில் அனுப்பலாம்.


கிராமிய சேவைத் திட்டம் பற்றி அறிய இங்கு செல்லவும்

இரூர் கிராம சேவை பற்றிய video clips பார்க்க இங்கு செல்லவும்.

மனவளக்கலை கிராமமாகத் திகழும் அஜ்ஜிப்பட்டி கிராமம் பற்றித் தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்.

No comments:

Post a Comment