தவம்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
வாரியார் உரை :
தவம் என்றவுடன் யாரும்
அஞ்சிவிடக் கூடாது. காட்டுக்குச் செல்வதும் பட்டினி கிடப்பதும் கனல் நடுவே
நிற்பதும் தான் தவம் என்று கருதிவிடக்கூடாது. அவை யாவும் தவத்திற்கு
அங்கங்களேயன்றித் தவமாகாது. தனக்கு வருகின்ற துன்பங்களைச் சித்த சமாதானத்துடன்
தாங்கிக் கொள்ளுதல், இன்னொரு உயிருக்குத் துன்பம் செய்யாதிருத்தல் ஆகிய இரண்டு
பண்புகளும் சேர்ந்த குணமே தவமாகும்.
கலைஞர் உரை:
எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவம் என்று கூறப்படும்.மு.வ உரை:
தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.சாலமன் பாப்பையா உரை:
பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.
No comments:
Post a Comment