Wednesday 9 October 2013

ஆன்மீக ஆனா, ஆவன்னா - 10

செல்கள் 




" என் இனிய மாணவச் செல்வங்களே! அடிப்படை விஷயங்களைத் தெளிவாக தெரிந்து கொண்டால்தான் நம் சிந்தனை, சொல், செயல்கள் சிறப்பாக இருக்கும். அதுவும் ஆன்மீகத்தில் நாம் ஐயம் திரிபு அற விளக்கம் பெற வேண்டும். அதனால்தான் ஒவ்வொரு விஷயத்தையும் basics லிருந்து புரிந்து கொள்ள கேள்விகள் கேட்கின்றோம். உயிரை உணர்வோம் என்று ஆரம்பித்த நாம் அது தொடர்பான பல விஷயங்களைத் தொட்டுவிட்டு அந்த உயிர் உறையும் உடலுக்கு வந்திருக்கின்றோம். நம் உடலைப் பற்றி நிறைய படித்திருப்பீர்கள். இருந்தாலும் உங்களுக்கு தெரிந்த சில விஷயங்களை ஞாபகமூட்டுகின்றேன். நம் உடலின் அடிப்படை மூலக்கூறு என்ன சொல்லுங்கள்? " என அம்மா கேட்க

"செல்கள்" என்று சில மாணவிகளும் "திசுக்கள்" என சில மாணவிகளும் பதில் சொல்கின்றனர்.

" இரண்டுமே சரி என சொல்லலாம். திசு என்பது செல்களின் தொகுப்பாகும். திசுக்கள் தொகுப்பாக இயங்கும்போது அதை உறுப்பு என்கின்றோம். பல உறுப்புகள் சேர்ந்ததுதான் நம் உடல். இப்போது செல்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொள்ளுங்கள்."

" செல் வளர்ந்து ஒன்று இரண்டாகும். உடலில் சேரும் சத்துப் பொருட்களை  ஆற்றலாக மாற்றும். செல்களுக்கு வாழ்நாள் உண்டு. வயதான செல் அழிந்துவிடும்.செல்களை சக்திவாய்ந்த மைக்ரோஸ்கோப் மூலம்தான் பார்க்க முடியும்." என மாணவிகள் பதில் சொல்கின்றனர்.




" சரியாக சொல்கின்றீர்கள். செல்லின் அமைப்பு பற்றி சொல்லுங்கள்" என அம்மா கேட்க

" ஒவ்வொரு செல்லும் ஒரு ஜவ்வு போன்ற    membrane  உள்ளிருக்கும் ப்ரோட்டோபிலாசத்தையும்(protoplasm), நடுப்பகுதியில் உள்ள கருவினையும்  (nucleus) மூடி காத்து செயல்படுகின்றது. கருவில் குரோமோசோம்கள் உள்ளன. ஒவ்வொரு குரோமொசோமிலும்  லட்சகணக்கான ஜீன்கள் என சொல்லப்படும் மரபணுக்கள் இருக்கின்றன." என ஒரு மாணவி சொல்ல அம்மா தொடருகின்றார்கள் -

" இந்த ஜீன்தான் DNA என்ற நியூக்ளிக் அமிலத்தால் நம் பரம்பரை பதிவுகளைக் கொண்டுள்ளது. இப்போது நீங்கள் எளிதாக புரிந்துகொள்வதற்காக சில கேள்விகள் கேட்கின்றேன். ஜீன்  என்பது என்ன? அது எங்கு  உள்ளது?"

"அது ஓர் அமிலம். செல்களில் உள்ளது. "

"நாம் சாப்பிடும் உணவில் உள்ள இரும்பு, கால்சியம் போன்ற சத்துப் பொருட்கள் நம் உடலில் எங்கே இருக்கின்றன?"

" எல்லாம் செல்களில்தான் உள்ளன"

" அமிலத்தில் இரும்பு போன்ற மூலகங்கள் சேர்ந்தால் என்ன நடக்கும்?

" ரசாயன மாற்றங்கள் நடக்கும்." என்கிறார்கள் மாணவிகள்.

" வோல்டா மின்கலம் பற்றி படித்திருப்பீர்கள். அமிலத்தில் மூலகங்கள் வைக்கப்படும்போது மின்சாரமும் உண்டாகின்றது. இப்போது யோசித்துப் பாருங்கள். நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் ஓர் இரசாயனசாலை. ஒரு மின்கலம். ஒவ்வொரு செல்லிலும் மின்சாரம் ஓடுகின்றது. அப்படியெனில் ஒவ்வொரு செல்லும் ஒரு பேட்டரி  அல்லவா.   எங்கு மின்சாரம் ஓடினாலும் அங்கு காந்தபுலம் அமையும் என படித்திருப்பீர்கள். எனவே ஒவ்வொரு செல்லும் ஒரு வட மற்றும் தென் துருவம் அமைந்த காந்தமாகவும் கொள்ளலாம் அல்லவா!"

" நன்றாக புரிந்தது அம்மா" என்கிறார்கள் மாணவிகள்.

" ஒரு செல்லின் வடதுருவம் அடுத்த செல்லின் தென் துருவத்தை காந்த ஆற்றலால் பிடித்துருக்கின்றது. இப்படித்தான் செல்களின் தொகுப்பு திசுக்களாக, உறுப்புகளாக மொத்தத்தில் நம் பரூவுடலாக அமைந்திருக்கின்றது. ஒரு செல்லின் ஆயுள் காலம் முடியும்போது அதில் உள்ள காந்தம் தீர்ந்து விடுகின்றது. அதனால் இன்னொரு செல்லோடு ஒட்டியிருக்க முடியாமல் உதிர்ந்து விடுகின்றது. அப்படி அழிந்த செல்கள் நம் வியர்வை, உடல் கழிவுகள் மற்றும் வெளிவிடும் மூச்சுக் காற்று மூலம் வெளியேறிவிடுகின்றன." என்ற அம்மா 

" உங்களுக்கு சில விவரங்கள் சொல்கின்றேன். நம் உடலில் மொத்தம் 100 டிரில்லியன் செல்கள் அதாவது  1 போட்டு 14 சைபர் ( 100000000000000) செல்கள் இருக்கின்றன. சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளில் 50-70 பில்லியன் செல்கள் தோன்றுகின்றன/அழிகின்றன. ஒவ்வொரு நிமிடமும் கிட்டத்தட்ட நான்கு கோடி செல்கள் அழிகின்றன/தோன்றுகின்றன. உங்கள் ஒரு கையில் மட்டும் 2.5 பில்லியன் செல்கள்  உள்ளன.  ஒரு செல் ஒரு மணல்துகள் அளவுக்கு இருந்தால் உங்கள் கை உங்கள் ஸ்கூல் பஸ்ஸை விட பெரிதாக இருக்கும்! பிரமிப்பாக இருக்கிறது அல்லவா!" என்கிறார்கள் அம்மா.

" நம் உடலில் 100 டிரில்லியன் பேட்டரிகள்  அல்லது 100 டிரில்லியன் காந்தம் உள்ளது என்பதையும் உணர்ந்து கொண்டோம் அம்மா" என்கிறார்கள் மாணவிகள்.

" இன்னொரு செய்தி - இந்த ஆண்டு செல்களின் உள்ளேயும், வெளியேயும் 
நடைபெறும் ஹார்மோன் மற்றும் என்சைம் பரிமாற்றம் பற்றிய கண்டுபிடிப்பு களுக்காக  மூன்று பேர்களுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. நீங்களும் இது போன்ற துறைகளில் ஆராய்ச்சி செய்து புகழ் பெற என் வாழ்த்துக்கள்" என முடிக்கின்றார்கள் அம்மா. 

தொடரும் 

2 comments:

  1. felt like I just sat in a biology class taught in tamil :)

    ReplyDelete
  2. செல்லுக்கும், ஆன்மீகத்துக்கும் என்னய்யா தொடர்பு என்று ஒரு நண்பர் கேட்டார். இன்னும் இரண்டு சாப்டர் படித்துவிட்டு பிறகு சொல்லுங்கள் என்றேன்.

    'அண்டத்திலே உள்ளது பிண்டத்திலே'

    ReplyDelete