Thursday 10 October 2013

நன்றி

'ஆயிரமாவது பதிவை நெருங்கிவிட்டீர்கள்'  என தொடர்ந்து இந்த blog படித்துவரும் என் நண்பர் நேற்று சொன்னபோது ஒரு முக்கியமான
'milestone' தொட்ட பெருமிதம் ஏற்பட்டது.









இந்த ஆயிரமாவது பதிவு சிறப்பாக இருக்கவேண்டுமென

1. 'ஆயிரமானாலும் மாயூரமாகாது' என்று பிறந்த ஊரைப் பற்றி        எழுதலாமா?
2. பெற்றோர்களை, குருநாதரைப் பற்றி எழுதலாமா?
3.'ஆயிரம்' என்ற  பொருளிலே எழுதலாமா?
4. 'ஆயிரம்' எனத் தொடங்கும் பிடித்த பாடல்கள் பற்றி எழுதலாமா?

இப்படி பலவாறாக யோசித்து நண்பரிடமே கேட்டேன். - " என்ன எழுதலாம், நீங்களே சொல்லுங்கள்? " எனக் கேட்டபோது அவர் சொன்னார் -

" உங்கள் blog படித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட நல்ல, தேவையான விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி. Cheer girls ஐ   ஆடவைத்து, வானவேடிக்கை நடத்தி நான் உங்களை உற்சாகப்படுத்துவதாக நினைத்துக்கொள்ளுங்கள். "

அவர் சொன்னபடியும்  இந்த ஆயிரமாவது பதிவின் மூலம் என்னை பதிவராக மாற்றிய என் மகன் ஸ்ரீராமுக்கும், துணை நின்ற  மாலாவுக்கும்,
உற்சாகமூட்டிய நூற்றுக்கணக்கான முகம் தெரிந்த, தெரியாத மற்றும் தொடர்ந்து இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும்,  நண்பர்களுக்கும்  இந்த ஆயிரமாவது பதிவினை சமர்ப்பிக்கின்றேன்.

எனது இந்த ஆயிரமாவது பதிவு மிக, மிக சிறிய ஒன்று  ( The Shortest...)  -



நன்றி, நன்றி,
 மிக்க நன்றி!



                                         

                                            100வது பதிவு படிக்க இங்கே சொடுக்கவும்
                                             300வது பதிவு படிக்க இங்கே சொடுக்கவும்.
                                             500வது பதிவு படிக்க இங்கே சொடுக்கவும்
                                             750வது பதிவு படிக்க இங்கே சொடுக்கவும்






1 comment:

  1. hahaha....can't help laughing at the cheer girls :))))

    btw...CONGRATZZZZ!!!!

    ReplyDelete