Wednesday 9 October 2013

திடீர் சுற்றுலா ...3

                         ஆவுடையார்கோவில் 

49 கோடி பொன் கொண்டு 1150 வருடங்களுக்கு முன் மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட 
ஆவுடையார்கோவில் மற்ற சிவன் கோவில் போல் அல்லாமல் ஞான மார்க்க தத்துவங்களை உணர்த்தும்விதமாக அமைந்துள்ளது.

மற்ற கோவில்களில் காணப்படும் நந்தி, கொடி மரம், பலி பீடம் இங்கு கிடையாது. 
இறைவன் உருவமற்றவன்  ( அரூபம் )  என்பதை குறிக்க மூலஸ்தானத்தில் சதுர வடிவில் ஆவுடை மாத்திரம் அமைக்கப்பட்டு மேலே லிங்கம் இல்லாமல் ஒரு பூ குவளை மாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. உருவ வழிபாட்டுக்கு மாணிக்கவாசகரே இங்கு இறைவனாக  அருளுகின்றார். அருவுருவமாக குரூந்த மரம் ( சிலை வடிவிலும் மற்றும் ஸ்தல விருட்ஷ்சமாகவும் ) காணப்படுகின்றது.

இங்கு உருவமற்று ஆத்மநாதராக இருக்கும் இறைவனுக்கு தீபாராதனை செய்கிறார்கள். ஆனால்  அந்த தட்டினை வெளியில் உள்ள பக்தர்கள்  தொட்டு கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வகையில் கொண்டு வரப்படுவதில்லை.

புழுங்கலரிசி சாதம் வடித்து இறைவன் முன்னே உள்ள பீடத்தில் கொட்டி சாதத்திலிருந்து வரும் ஆவியை இறைவனுக்கு படைக்கின்றார்கள். 
மாணிக்கவாசகர் உபதேசம் பெற்ற இடம்
குரூந்த மர  சந்நிதி 

அம்பாள் சந்நிதியிலும் விக்கிரகம் இல்லை. அம்பாள் பாதம் மட்டும் இருக்கின்றது. அதையும் ஜன்னல் துவாரம் மூலம்தான் தரிசிக்கமுடியும்.

இங்கு எல்லா திருவிழாக்களும் மாணிக்கவாசகருக்கு மட்டுமே. மாணிக்கவாசகர் தன கைப்பட எழுதிய ஓலைச்சுவடிகள், எழுத்தாணி  ஆகியவை ஒரு சந்நிதியில் வழிபாட்டு பொருளாக இருக்கின்றன.
சிவனிடம்  உபதேசம்
பிரகாரத்தில் உள்ள குரூந்த மரம் 


இங்கு இருக்கும் உலகப் புகழ் பெற்ற அபூர்வ சிற்பங்கள் பற்றி அடுத்த postல் -

1 comment: