ஆவுடையார்கோவில்
எனக்கு பிடித்த தமிழ்நாட்டு கோவில்களில் சிதம்பரத்துக்கு அடுத்தது
ஆவுடையார்கோவில்தான்.
நான் SSLC தேர்வில் பள்ளி முதல்மார்க் வாங்கியதற்காக எனக்கு கிடைத்த
பரிசு அருள்மிகு சித்பவானந்தர் எழுதிய 'பகவத்கீதை' மற்றும் 'திருவாசகம்' புத்தகங்கள்தான்.
இந்த புத்தகங்கள் 45 ஆண்டுகளாக எனக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றன. திருவாசகத்தில் ஏற்பட்ட ஈடுபாடு திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகர் கட்டிய ஞானக்கோவில் ஆவுடையார்கோவிலிலும்
ஏற்பட்டது.
குறைந்தது நான்கு மணி நேரம் தேவைப்படும் இந்த கோவிலில் ஒரு மணி நேரம்தான் கழிக்க முடிந்தது.
சிற்ப கலையில் சிறந்து விளங்கும் இக் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்ள மாணிக்கவாசகர் வரலாறும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மாணிக்கவாசகரோட இயற்பெயர் வாதவூரார். கி.பி.9ம் நூற்றாண்டை சேர்ந்தவர். மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்தார். எல்லா வசதிகளும், பதவியும் இருந்தபோதிலும் சிவ
வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார்.
மன்னன் இவரிடம் கோடி பொன் கொடுத்து நல்ல குதிரைகள் வாங்கிவர சொல்ல, இவர் திருபெருந்துறை எனும் இடம் ( இப்போது ஆவுடையார்கோவில் ) அடைந்து அங்கே குரூந்த மரத்தின் கீழ் சிவனடியார் வேடத்தில் இருந்த சிவபெருமானைக் கண்டு தீட்சை பெற்றார். அங்கேயே தங்கி விட்டார்.
குதிரைகள் கொண்டு வராத வாதவூராரை சிறை பிடிக்க வீரர்களை அனுப்ப அவர்களிடம் சிவனடியாராக இருந்த சிவபெருமான் ' ஆவணி மூலமன்று குதிரைகள் மதுரைக்கு வரும்' என சொல்லி அனுப்பினார்.
குதிரைகள் வராததால் அரசன் கோபமுற்று வாதவூராரை சிறையிலடைத்து கொடுமை செய்தான். சிவபெருமான் தன் பூத கணங்களை வீர்களாக மாறி, நரிகளை குதிரைகளாகி தானும் தலைமை வீரனாக மதுரை வருகிறார். அரசன் வாதவூராரை விடுவிக்கின்றார்.
ஆனால் அன்றிரவே குதிரைகள் மறுபடியும் நரிகளாகி ஓடிவிடுகின்றன.
அரசன் மிகவும் கோபமடைந்து வாதவூராரை கொதிக்கும் வைகையாற்று மணலில் நிற்க வைக்கின்றான்.
சிவனின் அருளால் வைகையில் வெள்ளம் வந்து கரை உடைந்துவிடுகின்றது.
கரையை சீர் செய்ய வீட்டிற்கு ஒரு இளைஞன் வரவேண்டும் என அரசன் ஆணையிடுகின்றான்.
வந்தி எனும் புட்டு சுட்டு விற்கும் கிழவி தன சார்பாக அனுப்ப ஆள் இல்லாததால் இறைவனை வேண்ட சிவபெருமான் ஓர் இளைஞன் உருவில் அவளிடம் வந்து ' நான் உனக்காக வேலை செய்கின்றேன். எனக்கு கூலியாக உன் புட்டை கொடு' என கேட்கிறார்.
ஆனால் கிழவியோ ' நான் புட்டு செய்யும்போது உதிரும் புட்டு மாத்திரமே உனக்கு கொடுக்கமுடியும்' என்கிறாள்.
அன்று வந்திகிழவி செய்யும் புட்டு எல்லாமே உதிர்ந்துவிடுகின்றது.
எல்லா புட்டினையும் வயிறு முட்ட சாப்பிட்ட சிவபெருமான் வைகை கரையை அடைக்காமல் ஒரு மரத்தடியில் தூங்குகிறார்.
இதைக் கண்ட அரசன் கோபமுற்று கூலியாளாக வந்த சிவனை பிரம்பால் அடிக்க அந்த அடி பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து உயிர்களின்மீது பட அரசன் அரண்டுபோய் விட்டான்.
அப்போது ஓர் அசரீரி கேட்கின்றது - " வாதவூராரின் சிறப்பைத் தெரிவிக்கவே இந்த செய்தோம்' அதைக்கேட்ட அரசன் வாதவூராரிடம் மன்னிப்பு கேட்டு அமைச்சர் பணியை தொடர் வேண்டுகின்றான்.
இதில் விருப்பமில்லாத வாதவூரார் பல தளங்களுக்கும் சென்று கடைசியாக சிதம்பரம் வருகின்றார்.
சிதம்பரத்தில் இவர் பாடிய எல்லா பாடல்களையும் சிவபெருமானே வேதியர் வடிவில் வந்து ஓலைச்சுவடிகளில் எழுதி முடிவில் ' மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன் ' என கையொப்பமிட்டு கோவில் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார்.
மாணிக்கவாசகரின் பெருமையை உலகம் உணர்ந்தது.
நிறைவாக தன்னுடைய 32வது வயதில் சிதம்பரத்தில் இறைவனோடு கலந்தார்.
மிக சுருக்கமாக சொல்லப்பட்ட மேற்கண்ட வரலாற்று செய்திகளை நினைவில் கொண்டு இனி நாம் ஆவுடையார் கோவிலுக்குள் நுழையலாம்.

interesting story!
ReplyDeletei realized how bad i am in hindu mythology while setting up golu this year...will write about it soon...
btw...where is this temple?
From Trichy this temple is about 110 KM away.
DeleteBy road you've to go to Aranthangi via Puthukkottai and from Aranthangi you've to go further 15 KM to reach Avudaiyarkoil.