Sunday 8 December 2013

PRAYER ..5

இரண்டொழுக்கப் பண்பாடு


1. நான் எனது வாழ்நாளில் யாருடைய  உடலுக்கோ மனதுக்கோ துன்பம் தரமாட்டேன்

2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.


உலக நலவேட்பு

உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும் 
உலகனைத்து நாடுகளின் எல்லை காக்க 
ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்

உலகில் போர்பகை அச்சமின்றி மக்கள்
உழைத்துண்டு வளம் காத்து வாழ வேண்டும்
உலகெங்கும் மனிதகுலம் அமைதி என்னும்
ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்ய வேண்டும்

மழை  வாழ்த்து 


ஏரி, குளம்,கிணறு,ஆறு 
எல்லாம் நிரம்பி வழிய
மாரி அளவாய் பொழிக
மக்கள் வளமாய் வாழ்க!

உலக நலவாழ்த்து

உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்!
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்!
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்!
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டைப் பெருக்கட்டும்!

கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்!
கல்லாமை,கடன்,வறுமை களங்கங்கள் மறையட்டும்!
நல வாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞான ஒளி வீசட்டும்!
நம் கடமை அற வாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்!’’




வாழ்க வையகம்! வாழ்க வையகம்! 
வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment