சுவாமி சிவானந்தா |
உங்களுக்கு மன அமைதி
வேண்டுமா ?
நல்லாரோக்கியமும்,
பொருளாதாரப் பாதுகாப்பும் மன அமைதிக்கு இன்றியமையாதவை என்பது எல்லோரும்
அறிந்ததே.
ஆனால் இவை இரண்டும்
இருப்பினும் பலரும் தொடர்ந்து மன அமைதியின்றி அல்லல்படுகின்றனர். நீங்கள் இந்த
வகையை சேர்ந்தவர்களா? ஆமாம் என்று நீங்கள் பதில் சொன்னால் மேலும் இதை படியுங்கள்.
உங்களது தொல்லைகள் பெரும்பாலும் நீங்களாகவே உண்டாக்கிக் கொண்டது என்பதால், அவை
தவிர்க்கப்படக்கூடியவையே. எப்படி என்று நாம் பார்ப்போம்.
நீங்கள் அடிக்கடி பிறர்
விஷயங்களில் தலையிடுகிறீர்களா? அவர்கள் தவறாகவே இருக்கலாம். ஆனால் அதை முன்னிட்டு அல்லல் உறுவானேன்?
யாரையும், எதையும், குறை கூறாதீர்கள்.
பிறருக்குத்
தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் உங்களுக்கு கொடுக்கவில்லை. எல்லோரும் அவரவர்
விருப்பப்படியே நடக்கின்றனர். ஏனெனில் அவர்களுக்குள்ளே இலங்கும் கடவுள் அவர்களை
அப்படி செய்யதூண்டுகின்றார். உங்கள் அமைதியை பாதுகாக்க நீங்கள் உங்கள் சொந்த
வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்பது ஒரு நல்ல
விதியாகும்.
வேலை - அதுவே ஒரு
தியானம்
உங்கள் வேலையில் நீங்கள்
கவனம் செலுத்துங்கள். மன அமைதிக்கு முக்கியத்துவம் தருவோர் எல்லாவற்றிற்கும் மேலாக
கடைபிடிக்க வேண்டிய நியதி இது. இந்த உலகத்தில் எதுவுமே உங்கள் கவனத்தை
வேண்டுவதில்லை. அனைத்தையும் கவனிக்க ஒரு ஆண்டவன் இருக்கிறார். உண்மையில்,
உங்களையும் கவனிப்பது அவர்தானே! இந்த உண்மையை
மறக்கக்கூடாது.
குறை கூறலாமா
?
நான் திரும்பவும்
கூறுகிறேன். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். எவரையும், எதையும் குறை கூறாதீர்கள்.
குறை கூறுதல் என்பது திட்டுவதற்கு நிகர். எது நடந்தாலும், அது கடவுளின் இச்சையால்
நடக்கிறது. கடவுளின் அனுக்கிரகம் இன்றி எதுவேமே நிகழ்வதில்லை. எதாவது நிகழ்ந்தது
என்றால் அது உங்கள் பார்வையில் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். அதற்கு
கடவுளின் அனுமதி இருக்கிறது என்றுதான் பொருள். நீங்கள் அதை கண்டனம் செய்தால்
கடவுளின் விருப்பத்தை, கடவுளின் பேரறிவை, கடவுளின் தீர்ப்பை நீங்கள்
விமர்சிக்கின்றீர்கள் என்றுதானே அர்த்தம்? அதை செய்யாதீர்கள். உங்களுக்கு அமைதி
கிட்டும்.
No comments:
Post a Comment