Wednesday, 3 December 2014

DEATH.....5

 முதலில் நமது இன்பங்கள் மடிகின்றன. அடுத்தது நமது நம்பிக்கைகள். அதன் பின்பு நமது பயங்கள். இவையெல்லாம் இறந்த பின்பு கடன் பாக்கியுள்ளது. மண், மண்ணிடம் உரிமை கோருகிறது - நாமும் மரணத்தைத் தழுவுகிறோம்.


- பி.பி.ஷெல்லி.


 அவலமான வாழ்க்கையை விட புகழ்பெற்ற மரணம் மேல்.


- யூதப் பழமொழி.


 மரணம் யோகிகளை எதுவும் செய்வதில்லை. விழிப்புற்ற இதயம் தூக்கத்திற்கு அஞ்சுவதில்லை. உன் ஆத்மா உடலைவிட்டுச் சென்றால் என்ன? தோல் பழசாகிவிடும்போது பாம்பு அதை உறித்து எறிந்து விடுகிறது.


- தாரஷீ குஹ்.


 மரணத்தைக் கொச்சைப்படுத்துவது ஒன்றில்தான் நம்மால் முழு வெற்றி காண முடிவதில்லை.


- ஆல்டஸ் ஹக்ஸ்வி.


 நாம் பிறக்கும் போதே இறக்க ஆரம்பித்து விடுகிறோம். முடிவு தொடக்கத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.

- மனிலியஸ்.

 தவிர்க்க முடியாத ஒன்றைப் பற்றி ஏன் வீணாகக் கவலைப்படுகிறீர்கள்? இறப்பு வருவதற்கு முன்பே ஏன் இறக்கிறீர்கள்?

- மகாத்மா காந்தி.

 மரணம் ஒரு மனிதனை அழித்துவிடும்; ஆனால், மரணத்தைப் பற்றிய எண்ணம் வாழ வைக்கும்.

- ஈ.எப். பார்ஸ்டர்.

 மரணம் தவறு என்று மறுத்துப் பார். மரணம் நீயே தவறென்று மறுத்துவிடும். அவ்வளவுதான்.

- ஜவான் துர்கநெவ்.

No comments:

Post a Comment