Monday 6 February 2012

அன்னை, தந்தை & ஆசானுடன் JP














தை பூசம்

தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும்ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.

தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.
மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பது.
அகரம் + உகரம் + மகரம் = ஓம்

தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் இருக்கும்.
நட்சத்திர வரிசையில் "பூசம்' எட்டாவது நட்சத்திரம். தை மாத பூசம் பெரும்பாலும் பெளர்ணமியில்தான் வரும். இந்நாளில் அனைத்து சிவன் கோயில்கள், ஆறு படைவீடுகள் உள்ளிட்ட முருகன் கோயில்களில் திருவிழாக்கள்தான்!
அன்னை பார்வதியிடம் முருக* பெருமான் "ஞானவேல்' வாங்கிய நாள் தைப்பூசத் திருநாள். அவ்வேலைக் கொண்டே அசுரர்களை அழித்து, தேவர்களைக் காத்தான் முருகவேள். அத்தகைய அசுரர்களை அழித்த அந்த ஞானவேலை தைப்பூசத்தன்று வணங்கினால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், நல் அருளும் கிட்டும் என்பர். முருகன், தாரகாசுரனை மலையில் வேல் எறிந்து வீழ்த்திய நாள் என்றும் கூறுவர்.
தைப்பூசத்தன்றுதான் உலகம் தோன்றியதாம். உலகில் முதன் முதலாக தண்ணீரே படைக்க பட்டதாம். அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது. இதை மக்களுக்கு அறிவிக்கும் பொருட்டே அனைத்து கோயில்களிலும் தைப்பூசத்தன்று தெப்ப உற்ஸவம் நடைபெறுகிறது.
பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளின்படி, உமாதேவியுடன் முப்பத்து முக்கோடி தேவர்களும் காண, சிவபெருமான் ஆனந்தத் தாண்டம் ஆடியது தைப்பூசநாளில்தான்.
தில்லை மூவாயிரவர்க்கும், மன்னன் இரணியவர்மனுக்கும் நடராஜ பெருமான் தரிசனம் தந்து அருள்பாலித்ததும் தைப்பூச நாளில்தான்.
தேவ குருவாகிய பிரகஸ்பதிக்கு தைப்பூசம் உகந்த நாள் என்பதால், தைப்பூசத்தன்று குரு பகவானை வழிபடுவது சிறப்பானது.
பழனி கோயிலுக்குக் கோடிக்கணக்கான பக்தர்கள் இந்நன்னாளில் காவடி எடுத்தும், பாத யாத்திரை செய்தும் தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
வடலூர் வள்ளலார் தை மாத வெள்ளிக்கிழமை பூச நட்சத்திரத்தன்று ஜோதி ரூபமாய் இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.


எல்லாவற்றிற்கும் மேலாக
கோவிலில் ( வீடே கோவில் )
தெய்வத்திற்கு ( கண் கண்ட )
தினமும்
பூஜை, அர்ச்சனை செய்யும்
மங்கள விளக்கு
மாலாவின் மணாளன்
பிறந்த நாள் நட்சத்திரம்
தை பூசம்!

இன்றைக்கு ( 6-2-2012 AN to 7-2-2012 AN ) தை பூசம் !














9 comments:

  1. hahaha...Mala doing pooja for you??? :)))

    Thai poosam.... miss the kaavadi and the elephant that comes in our street in MVM

    ReplyDelete
    Replies
    1. haha..ok...got it!!...Mala doing "archanai" for you :))

      Delete
  2. ...and thanks for the info on Thai poosam

    ...and happy star birthday!! :)

    ReplyDelete
  3. @JP
    பூசம் நட்சத்திரம் = what constellation??
    Trying to link vedic astronomy to modern science :))

    ReplyDelete
    Replies
    1. Poosam or Pushya - 4 stars group seen in Cancer constellation.
      100% in Kadaga rasi.

      Delete
    2. Interesting. Let me check it out.

      Delete
    3. Pl check in the following site
      http://astronlogia.com/2011/07/07/pushya-the-divine-constellation/

      Delete
  4. JP, in which year was the foto with ThaTha taken - 1982??? You had emailed this foto earlier.

    ReplyDelete